டயலொக் விருதுகள் 2024: திறமைக்கும் புதுமைக்கும் அங்கீகாரம்!
2025 ஏப்ரல் 09 கொழும்பு

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது ஊழியர்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் மதிப்புமிக்க டயலொக் விருதுகள் 2024 ஐ நடத்தியது. இந்த நிகழ்வு, ஆண்டு முழுவதும் முன்னோடியான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்கள், செல்வாக்குமிக்க தலைமைத்துவம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது.
சிறப்பாக செயல்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிக்கும் வகையில், எதிர்கால இணைப்பை வடிவமைக்கும் புதுமைகள் மற்றும் நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைமைத்துவ சிறப்பை இந்த விருதுகள் காட்சிப்படுத்தின. இந்த வருடாந்திர நிகழ்வு, அர்ப்பணிப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதில் டயலொக்கின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
"ஒவ்வொரு ஆண்டும், டயலொக் விருதுகள் எங்கள் மக்களின் விதிவிலக்கான திறமை மற்றும் அயராத அர்ப்பணிப்பைக் கொண்டாட எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அவர்களின் சாதனைகள் எங்கள் வெற்றியின் அடிக்கல்லாகும், மேலும், மிகச் சிறந்த திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை மேலும் மேம்படுத்தி ஊக்குவிக்க ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம்,என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை மக்கள் அதிகாரி ஷ்யாம் மஜீத் கூறினார்.
MTI ஆலோசனை நிறுவனம் 13வது முறையாக சுயாதீன நடுவர் மற்றும் சரிபார்ப்பு பங்காளராக செயல்பட்டது, 20 க்கும் மேற்பட்ட விருது பிரிவுகளில் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய MTI ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹில்மி கேடர், "டயலொக் விருதுகள் மிகவும் விரிவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த செயல்திறன் அங்கீகார திட்டங்களில் ஒன்றாகும், இது மூத்த நிர்வாகத்திலிருந்து குழு உறுப்பினர்கள்வரை சிறந்த நெறிமுறைகள் மற்றும் ஒருமித்த அர்ப்பணிப்பை ஈர்க்கும் விழாவாகும் " என்றார்.
இந்நிகழ்வு BnS, ரூகந்தா, தினேஷ் காமேஜ், ஷானுத்ரி, கைசர் மற்றும் பலோன் போன்ற பிரபல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இது திறமை மற்றும் தோழமையின் மறக்க முடியாத இரவாக அமைந்தது.
டயலொக் விருதுகள், நிறுவனத்தின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும் விதிவிலக்கான திறமையை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், டயலொக்கை முன்னோக்கி கொண்டு செல்லும் கூட்டு பலத்தின் நினைவூட்டலாகவும் அமைந்தது. டயலொக் தனது வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. இந்த அங்கீகாரங்கள் மூலம், டயலொக் சிறப்பை கொண்டாடும் மற்றும் அதன் மக்களை இன்னும் பெரிய உயரங்களை அடைய அதிகாரம் அளிக்கும் ஒரு சூழலை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது.