பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா இலங்கையின் அனைத்து சிறுவர் மேம்பாட்டு மையங்களுக்கும் இலவச புரோட்பாண்ட் இணைப்பை விரிவுபடுத்துகிறது

அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி அணுகலை எளிதாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை தொடர்கிறது

செப்டெம்பர் 30, 2021         கொழும்பு

 

Mr. Supun Weerasinghe, Group Chief Executive, Dialog Axiata PLC exchanging the MOU with Hon. Piyal Nishantha and Mrs. K.M.S.D. Jayasekara

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன் பள்ளிகள் மற்றும் தொடக்க கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிஷாந்த மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் செயலாளர், திருமதி K.M.S.D. ஜெயசேகரன் ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பகிர்ந்துக்கொள்கின்றார்.

2021 உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், முன்பள்ளிகள் மற்றும் தொடக்க கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ஆகியவற்றுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 379 சிறுவர் மேம்பாட்டு மையங்களுக்கு இலவச புரோட்பாண்ட் இணைப்பை விரிவுபடுத்தியுள்ளது.

டயலொக் ஆரம்பத்தில் இருந்தே சிறுவர்களுக்கான கல்விக்கான அணுகலை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி ஒவ்வொரு இலங்கை சிறுவர்களையும் தரமான கல்வி அனுபவத்திற்கு நெருக்கமாக கொண்டு வர பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த முதலீடுகளில் 2000 பள்ளிகள் மற்றும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை இணைக்கும் நெனச டிஜிட்டல் கல்வி தளம், Dialog TV மற்றும் Dialog ViU mobile app, Nenasa interactive smart phone app, Nenasa Smart Schools டிஜிட்டல் உருமாற்ற முயற்சி மற்றும் Dialog Merit புலமைப்பரீசில் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

சிறுவர் மேம்பாட்டு மையங்களை இணைக்கும் முன்மொழியப்பட்ட முயற்சி, கல்வி அமைச்சின் இ-தக்ஸலாவ கல்வி இணையதளத்தின் மூலம் அனைத்து குழந்தை மேம்பாட்டு மையங்களிலும் 10,632 குழந்தைகளுக்கு தரமான கல்வியை அணுக உதவுகின்றது.

இந்நிகழ்வின் போது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ பியால் நிஷாந்த கருத்து தொவிக்கையில், முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள், "இலங்கையின் அனைத்து சிறுவர் மேம்பாட்டு மையங்களுக்கும் இலவச இணைப்பை வழங்கிய டயலொக்கிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்ற அதே வேலையில் இந்த நோக்கத்திற்காக வேறு சில அனுசரணையாளர்களால் எங்கள் 'சிசு நென பிரதீப' முயற்சிக்கு ஆதரவாக 700 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிள்ளையின் கல்வி உரிமையை உணர நடவடிக்கை எடுப்பதே அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தைத் திறப்பதற்கான திறவுகோலாகும். இந்த பிள்ளைகள் தரமான கல்வியின் ஊடாக வளரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்குவது அனைத்து இலங்கையர்களின் பொறுப்பாகும் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த முயற்சியை செயல்படுத்தியதற்காக நாங்கள் டயலொக்கிற்கு நன்றி கூறுகிறோம்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், "பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சு, முன்பள்ளிகள் மற்றும் தொடக்க கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ஆகியவற்றை இந்த முயற்சியில் பங்குபெற அழைத்தமைக்கும் அனைவருக்கும் கல்விக்கான சமமான அணுகலை வழங்குவதற்கான நோக்கத்திற்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் "