பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா சம்பத் வங்கியுடன் பங்காளராக இணைந்து புரட்சிகர eZ Banking சேவையை அறிமுப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1, 2022         கொழும்பு

 

Dialog Axiata Partners Sampath Bank to Launch Revolutionary eZ Banking Service

படத்தில் இடமிருந்து வலம்: சம்பத் வங்கி பிஎல்சியின் கம்பனி செயலாளர், லசந்த சேனாரத்ன, சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர், நந்தா பெர்னாண்டோ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதான டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் அணுகக்கூடிய வங்கி அனுபவத்தை வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய மொபைல் பண வலையமைப்பான eZ cash தளத்தினை விரிவாக்கும் நோக்கில் புரட்சிகரமான eZ Banking சேவையை அறிமுகப்படுத்த சம்பத் வங்கியுடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

சம்பத் வங்கி வாடிக்கையாளர்கள் ATM அல்லது வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி தங்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து எவ்விதமான தடைகள் இன்றியும் மற்றும் வசதியாகவும் இப்போது இந்த eZ Banking விற்பனையாளர்களிடம் பணத்தைத் வைப்புச் செய்யவும் மீள் பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலதிகமாக, பெரும்பாலான eZ Banking விற்பனையாளர்கள் பாரம்பரிய வங்கிச் சேவை நேரத்தை தாண்டியும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதினால் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வங்கியின் செயல்பாட்டு நேரங்களுக்குக் கட்டுப்படவேண்டிய அவசியமில்லை

இந்த புரட்சிகர முயற்சி குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ "டயலொக் சம்பத் வங்கியுடன் eZ Banking சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றது. போக்குவரத்துச் சவால்கள் காணப்படும் இத்தகைய நேரத்தில் .குறிப்பாக வங்கிக் கிளைகள் மற்றும் ATM களுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி சம்பத் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சுற்றுப்புறங்களில் இருந்து வசதியாக வங்கிச் சேவையை அணுகுவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.

பாதுகாப்புக்கு எவ்விதமான தடைகளும் இன்றி வங்கிச் சேவைகளை எளிதாக்குவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம், அந்தச் செயல்பாட்டில் இது ஒரு பெரிய முன்னேற்றம் என்பதைச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. நந்தா பெர்னாண்டோ தெரிவித்தார். "இலங்கையில் உள்ள அனைவரும் ஒரு வங்கி அல்லது ATM க்கு எளிதாக நடந்து செல்லும் தூரத்தில் வசிக்க மாட்டார்கள், மேலும் ஒரு கிளையின் வழக்கமான வங்கி நேரத்திற்குள் அனைவரும் அங்கு செல்வதை உறுதி செய்ய முடியாது. eZ banking மூலம் நீங்கள் நீடிக்கப்பட்ட வங்கி நேரத்தையும், மேலும் பல இடங்களில் வங்கி பரிவர்த்தனைகளை விடுமுறை நாட்களிலும் மேற்கொள்ள கூடியதுடன் இது இரட்டை நன்மையாகவும் அமையும். இந்த நாட்களில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் போக்குவரத்து சவால்களுக்கு மத்தியில் இது மிகவும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.

eZ Banking சேவையினை முதலில் மேல் மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளக்கூடியதுடன் விரைவில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய விற்பனையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். eZ Banking சேவையை பற்றிய மேலதிக தகவல்களுக்கும் மற்றும் அருகிலுள்ள eZ Banking விற்பனையாளர்களை தெரிந்துக்கொள்ளவும் https://www.sampath.lk/en/personal/agent-banking/ez-banking க்கு செல்லுங்கள்.