பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா அனுசரணையில் மகளிர் தினத்தையொட்டி தேசிய மட்டத்தில் ‘Aya’ (எய) வலுசேர்க்கும் சிறப்பு நிகழ்வுகள்

மார்ச் 07, 2022         கொழும்பு

 

Mrs. K. M. S. D. Jayasekera, receiving the sponsorship from Mrs. Amali Nanayakkara

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் திருமதி கே.எம்.எஸ்.டி. ஜயசேகர, , டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி திருமதி அமலி நாணயக்காரவிடமிடருந்து அனுசரணை சான்றினை பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம். மேலும் படத்தில் (இ -வ) திருமதி சி.எம். உபசேன (பணிப்பாளர் – மகளிர் பணியகம்,மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு), மற்றும் திருமதி. என்.எச்.எம்.டபிள்யூ.டபிள்யூ. ஹேரத், மேலதிக செயலாளர் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு)

பாலின சமத்துவத்தை வளர்ப்பதற்கும் பக்கச்சார்பு முறைகளை முறியடிப்பதற்கும் தமது அர்ப்பணிப்பை வழங்கு முகமாக இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தேசிய அளவிலான மகளிர் நல்வாழ்வு மேம்பாட்டு முயற்சியாக 'Aya' ('எய' - அவள்) எனும் சிறப்பு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘Aya’ ('எய' - அவள் ) என்பது பெண்களை மையமாகக் கொண்ட ஒரு முயற்சி செயற்பாடாகும். மேற்படி நிகழ்வானது மார்ச் 8 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆரம்பமாகி ஏப்ரல் 7 ஆம் திகதி மொனராகலை மாவட்டத்தில் நிறைவடையும். அதற்கமைய ஒரு மாத கால தொடர்சந்தைகள், குழு விவாதங்கள், வரவேற்பு விழாக்கள், விழிப்புணர்வு பட்டறைகள் உட்பட இன்னும் பல்வேறு தலைப்புகளின்கீழ் மேற்படி 'Aya' ('எய' - அவள்) சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறும். பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கான வழிகளையும் தளங்களையும் வழங்குவதுடன் , சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனூடே பெண்களின் பார்வையை மேம்படுத்தி அவர்களுக்கான அதிகாரமிக்க பாதையை உருவாக்கும் விதமான கருத்து பரிமாற்றங்களில் அவர்களை ஈடுபடுத்தி தடைகளை உடைப்பதன்மூலம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் சமத்துவமிக்க சமூகமாக ஒன்றிணைக்க முடியும் என இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி, மேற்படி மகளிர்தின 'AYA' ('எய' - அவள்) நிகழ்வுகள் அனுராதபுரம், நுவரெலியா, களுத்துறை, புத்தளம், கம்பஹா, மன்னார் மற்றும் கேகாலை உட்பட பல மாவட்டங்களை உள்ளடக்கியதாக இலங்கை முழுவதும் நடைபெறும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்துடனான மேற்படி கூட்டு முயற்சி குறித்து கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி கே.எம்.எஸ்.டி ஜயசேகர அவர்கள், “ஒரு மாத கால ‘AYA' (எய) நிகழ்வுகளை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளான 'பாலின சமத்துவம்' என்பதற்கமைய மகளிர்க்கான அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாடு என்ற நோக்கில் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் நமது சமூகத்தின் புலமைமிகு நிர்மாணிப்பு கலைஞர்களாவர். அவர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது தேசத்தை வலுப்படுத்துவதாகும். ‘நிலையான நாளைக்கான இன்றைய பாலின சமத்துவம்’ எனும் சர்வதேச மகளிர் தினத்திற்கான ஐக்கிய நாடுகளின் தொனிப்பொருளுக்கு இணங்க, அதனை செயல்படுத்தும் விதமாக எங்களுடன் கைகோர்த்து, இந்த தேசிய முயற்சியை முன்னெடுப்பதில் அனுசரணை வழங்குகின்ற டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம் " என்றார்.

மகளிர் தமது அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற அவசியமான ஆதரவு தளங்களை வழங்குவதில் டயலொக் உறுதியாக உள்ளது. அதன்படி, இந்நிகழ்வை வலுப்படுத்துவதுடன், மேலும் ஒரு படி மேலே சென்று, இலங்கையின் ஒரே ரகசியத் தன்மை பேணும், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உள்ளக செயற்பாட்டு ஆலோசனைச் சேவையான 'Yeheli.lk/Thozhi.lk' உட்பட அதன் மகளிரை மையமாகக் கொண்ட தளங்களின் ஆதரவையும் நிபுணத்துவத்தையும் விரிவுபடுத்துவதுடன், தகுதிவாய்ந்த மெய்நிகர் ஆலோசகர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டமான 'ஐடியாமார்ட் ஃபோர் விமன்' (IdeaMart for Women) மற்றும் விசேடமாக டிஜிட்டல் தொழில்முனைவையும் தொழிநுட்ப திறன்களையும் ஊக்குவிக்குமுகமாக டிஜிட்டல் தொழில்முனைவு மற்றும் வலுவூட்டல் திட்டத்தையும் டயலொக் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையின் தொழில் முனைவோர் கற்றுக்கொள்வதற்கும், துறைசார்ந்த வல்லுனர்களின் அறிவு மற்றும் நிபுணத்துவங்களை பெற்றுக் கொண்டு வளர்ச்சி அடைவதற்கும் பயன்தரக்கூடிய ஒரே கேந்திர நிலையமான ‘Diriya.lk’ யும் இந்த நிகழ்வுகளின்போது இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் தேசிய மற்றும் இளையோர் தேசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் மற்றும் மகளிர் வலுவூட்டல் ஆகியனவற்றுடன் ஒன்றிணைந்த தடம் பதிந்த கலாச்சாரத்தை உருவாக்க இணைந்து செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

'Aya' பற்றிய கூடுதல் தகவல்களை http://www.childwomenmin.gov.lk/ மூலம் அணுகலாம்.