பொருள் விரிவாக்கம்

Dialog e-Load Super Blast Rewards : முதல் மூன்று Toyota Raize SUV-களில் முதலாவது வெற்றியாளர்!

நாடு முழுவதும் 700,000 வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

2025 செப்டம்பர் 01         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இடமிருந்து வலமாக – முதிதா பிரேமரத்ன, துணைத் தலைவர் – Digital Platforms மற்றும் கூட்டாண்மைகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; எல். லசந்த கெலும் மற்றும் குடும்பத்தினர் (1வது Toyota Raize SUV காரை வென்றவர்); மற்றும் லசந்த தெவரப்பெரும, குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாடு முழுவதும் டிஜிட்டல் top-up-களை ஊக்குவிக்கும் வகையில், தனது "Dialog e-Load Super Blast" பரிசுத் திட்டத்தின் முதல் Toyota Raize SUV காரை வழங்கியதுடன், 700,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களைக் கொண்டாடி, டிஜிட்டல் பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்கிறது.

ஆகஸ்ட் 24 அன்று காலி முகத்திடலில் நடந்த "Dialog e-Load Super Blast presents Derana Boom Town" இசை நிகழ்ச்சியில், முதல் மாபெரும் பரிசான, புத்தம் புதிய Toyota Raize SUV கார் பண்டாரகமவைச் சேர்ந்த திரு. L. லசந்த கெலும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது, மூன்று SUV பரிசளிப்பு நிகழ்வுகளில் முதலாவதாகும். டிஜிட்டல் ரீலோட் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டதிலிருந்து, டயலொக் நிறுவனம் ஏற்கனவே 700,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகளை வழங்கியுள்ளது. அடுத்த இரண்டு பரிசளிப்பு நிகழ்வுகள் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன.

"எங்களின் நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு இணைப்பை வழங்குவது மட்டுமல்ல; வசதியான வழிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதும் ஆகும். அதே நேரத்தில், மதிப்புமிக்க பரிசுகளை வழங்கும் விளம்பரத் திட்டங்கள் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாடுபடுகிறோம். நாங்கள் அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் தீர்வுகளால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைவதைக் காண்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதுபோன்ற வாழ்க்கையை மாற்றும் பரிசுகளைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம், அவர்களின் டிஜிட்டல் பயணத்தை எந்தத் தடையுமின்றி முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் , குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவித்தார்.

இலங்கை டிஜிட்டல் ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டயலொக் தொடர்ந்து வசதியான, பாதுகாப்பான மற்றும் வெகுமதி அளிக்கும் டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் டிஜிட்டல் ரீலோட் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க, MyDialog App, Dialog.lk, Genie, WOW SuperApp அல்லது வேறு ஏதேனும் Bank அல்லது finance சார்ந்த App-கள் போன்ற Digital platforms மூலம் ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரீலோட் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம், இன்னும் வெல்லப்படவுள்ள இரண்டு Toyota Raize SUV கார்களுக்கான குலுக்கலில் ஒரு வாய்ப்பையும், தங்க நாணயங்கள், Smartphone-கள் மற்றும் இலவச நெட்வொர்க் பலன்கள் போன்ற உடனடி வெகுமதிகளைப் பெறக்கூடிய ஒரு டிஜிட்டல் scratch கார்டையும் வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு, https://www.dialog.lk/e-load-super-blast ஐ பார்வையிடவும்.