Dialog தனது வாடிக்கையாளர்களுக்கு Google Assistant மூலம் சமீபத்திய டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வலுவூட்டுகின்றது.
இலங்கையில் முதன்முறையாக சமீபத்திய டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்துகின்றது
ஜுன் 23, 2022 கொழும்பு
டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவையின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையில் முதன்முறையாக Google Assistant அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்துவதாக அண்மையில் அறிவித்தது.
Android smartphone மற்றும் Google Home Device பாவனையாளர்கள் இப்போது Google Assistant மூலம் டயலொக் மொபைல், டெலிவிஷன் மற்றும் ஹோம் பிராட்பேண்ட் தொடர்பான கேள்விகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் மாதங்களில் மேலதிக அம்சங்கள் மற்றும் சேவைகள் சேர்க்கப்படவுள்ள நிலையில், Google Assistant மூலம் டயலொக் வாடிக்கையாளர்கள் தங்களின் முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்புகளின் செயற்படும் நிலையினை அறிந்து கொள்ளல், நிலுவை தொகைகளை சரிபார்த்தல், டயலொக் இணைப்புகளை தற்காலிகமாக மீள் செயற்படுத்தல், போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில் Google Assistant ஐ Open செய்து “Talk to Dialog” எனக் கூறி, படிகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் Google கணக்கை டயலொக் கணக்குடன் இணைத்துக்கொள்ளலாம். பதிவுசெய்ததும், எந்தவொரு Android மொபைல் மற்றும் Google Home Device களையும் Google Assistant ஆதரிக்கும், மேலும் எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்தில் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உதவியை வழங்கும்.
எதிர்காலத்தை இன்றே வழங்கும் போது, 17 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கு வசதியான மற்றும் புதுமையான தீர்வுகளை எளிதாக்கும் டயலொக்கின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.