பொருள் விரிவாக்கம்

டயலொக் நெட்பால் ரைசிங் ஸ்டார்ஸ் 2021

நாளைய மகளிர் விளையாட்டு வீராங்கனைகளை இன்று வலுவூட்டுகிறது

மார்ச் 10, 2021        கொழும்பு

 

news-1

படத்தில் இடமிருந்து வலம் : பத்மா சிரிவர்தன, விளையாட்டு மேம்பாட்டுத் துறை இயக்குனர், அமல் எதிரிசூரியா, விளையாட்டு மேம்பாட்டுத் துறை இயக்குனர் ஜெனரல், அனுராதா விஜேகோன், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் செயலாளர், அஷானி சேனாரத்ன டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் வர்த்தக மேம்பாட்டு தலைவர், விக்டோரியா லட்சுமி, இலங்கை நெட்பால் கூட்டமைப்பு தலைவர்

சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி. இலங்கை நெட்பால் சம்மேளனத்துடன் இணைந்து விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் " டயலொக் நெட்பால் ரைசிங் ஸ்டார்ஸ் 2021 எனப்படும் போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த போட்டியின் நோக்கம் என்னவெனில் நாளை சர்வதேச அரங்கில் வெல்லக்கூடிய இளம் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதாகும். இந்த போட்டி மார்ச் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் நடைபெறுவதுடன் இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது. இறுதி போட்டி ThePapare.comமூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

டயலொக் நெட்பால் ரைசிங் ஸ்டார்ஸ் 2021 போட்டியில் ஒன்பது மாகாணங்களைச் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 9 க்கும் மேற்பட்ட அணிகளிலிருந்து 150 வீரர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் ஆரம்ப போட்டிகள் லீக் வடிவத்தில் நடைப்பெறுவதுடன் அரையிறுதிப் போட்டியிலிருந்து நொக் அவுட் அடிப்படையில் விளையாடப்படும். மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் இறுதிப் போட்டியும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 40 நிமிடங்கள் என்ற அடிப்படையில் இடம்டபெரும்.

தேசிய நெட்பால் அணி கடந்த சில ஆண்டுகளில் நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது, மேலும் சர்வதேச மற்றும் ஆசிய தரவரிசையில் முறையே 18ம் மற்றும் 1 ம் இடத்தை பிடித்துள்ளது. .

"கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கி வரும் புதிய திறமை மூலம் ஆசிய சுற்றுக்கு அப்பால் மிகச் சிறப்பாக செயல்படும் திறன் இலங்கைக்கு உண்டு இந்த போட்டி அந்த முன்னேற்றத்திற்கு ஒரு அளவு கோலாகும்" என்று இலங்கையின் நெட்பால் கூட்டமைப்பின் தலைவர் விக்டோரியா லட்சுமி கூறினார். "குறிப்பாக விளையாட்டுகளை வளர்ப்பதிலும் திறமைகளைக் கண்டறிவதிலும் எங்கள் பங்காளர் டயலொக் ஆசிஆட்டாவின் ஆதரவிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், ”என்று லட்சுமி மேலும் கூறினார்.

"கோவிட் 19 தொற்றுநோயால் ஏற்பட்ட தடைகள் இருந்தபோதிலும், இந்த வழியில் சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வகையில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்வதற்காக எங்களுடன் இணைந்ததற்கு நெட்பால் கூட்டமைப்பு மற்றும் டயலொக் ஆசிஆட்டாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இயக்குனர் ஜெனரல் அமல் எதிரிசூரிய தெரிவித்தார். தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக சுமார் ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு இதுபோன்ற ஒரு போட்டியை நடத்துவது திறமையான புதியவர்களை அடையாளம் காண்பது போலவே தேசிய அணிக்கு அவசியமான பயிற்சியளிக்கவும் இவை மிகவும் முக்கியமானது என்பதால் மிகவும் வெற்றிகரமான இப் போட்டிகளுக்காக நெட்பால் கூட்டமைப்பை நான் வாழ்த்துகிறேன், ”என்றார்.

இலங்கைக்கு கௌரவத்தை கொண்டுவர இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் திறமையான வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்க நெட்பால் சம்மேளனத்துடன் இணைந்து பணியாற்ற முடிந்ததில் டயலொக் ஆசிஆட்டா பெருமிதம் கொள்கிறது. ‘குறிப்பாக, இந்த புதிய திறமைகள் சேர்வதுடன் தேசிய அணி கடந்த காலங்கள் முழுவதிலும் நிலையான முன்னேற்றத்தை அடைய முடிந்தது. அதேபோல் எங்கள் இளமை திறன்களை, இளைஞர்கள் சர்வதேச மட்டத்தில் நிகழ்த்துவதைக் காண நாங்கள் காத்திருக்கின்றோம் என டயலொக் ஆசிஆட்டாவின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி அஷானி சேனாரத்ன குறிப்பிடுவதுடன் “எங்கள் திறமையான விளையாட்டு வீரர்கள் தங்கள் திறன்களை நிரூபிக்க வாய்ப்பை வழங்குவதற்காக,மேலும் நாளைய சாம்பியன்களாக உயர்வான இடத்தை கைப்பற்ற அவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த போட்டியைத் தொடங்க முடிந்ததில் பெருமிதம் கொள்கிறோம், என்றும் குறிப்பிட்டார்.

தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளின் உத்தியேகப்பூர்வ ஆதரவாளராகவும் டயலொக் ஆசிஆட்டா செயல்படுகிறது. ஜனாதிபதி தங்கக் கோப்பை கைப்பந்து போட்டியை வலுப்படுத்துவதற்கு மேலதிகமாக, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட நெட்பால் போட்டி, ரக்பி களகங்கள், பிரீமியர் கால்பந்து போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் பாடசாலை ரக்பி போட்டி, இராணுவ பாரா விளையாட்டு போட்டி, தேசிய பாரா விளையாட்டு போட்டி உலக பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ளும் இலங்கை பரா குழுவையும் ஆதரிக்கின்றது.