பொருள் விரிவாக்கம்

டயலொக் இனால் அனுசரணை வழங்கப்படும் Diriya.lk ஊடாக தொழில்முனைவோருக்கு தேவையான அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு

ஜுன் 1, 2021         கொழும்பு

 

news-1

இலங்கையின் மக்களையும் வணிகங்களையும் மேம்படுத்துவதற்கும் வளப்படுத்தவதற்கும் அதன் பார்வைக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி தொலை தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலவச வணிக மொழி முத்தொகுப்பு வலைத்தளமான Diriya.lk ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைத்தளம் சர்வதேச நாணய நிதியம் (உலக வங்கி குழுவின் உறுப்பினர்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வள பங்களிப்புகளுடன் இயக்கப்படுகிறது.

இலங்கையின் முன்னணி தொலை தொடர்பு வழங்குனரால் வலுவூட்டப்படும் Diriya.lk என்பது அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய தளம் என்பதுடன், இது இலங்கை தொழில்முனைவோருக்கு வணிக அறிவு, நுண்ணறிவு, நிபுணர் ஆலோசனை, உடனடியாக டவுன்லோட் செய்யக்கூடிய உள்ளடக்கம் மற்றும் வணிக உறவு வலையமைப்பை உருவாக்க உதவுகிறது. இந்த வலைத்தளம் தொழில்முனைவோர் திறம்பட மற்றும் சிறப்பாக தங்கள் சிறப்பு மிக்க வணிகங்களை தொடங்கவும் நிர்வகிக்கவும் தேவையான வணிக மேலாண்மை நுண்ணறிவு மற்றும் அறிவை வழங்குவதன் மூலம் இன்றைய மிகவும் போட்டி நிறைந்த வணிக உலகின் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிப்பதோடு அதற்கான அதிகாரத்தையும் வழங்குகின்றது.

ஒரு சமூக கண்டுபிடிப்புத் திட்டமாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் - (8) அங்கீகரிக்கப்பட்ட வேலைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் (9) தொழில், புதுமை மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இணங்க ஒரு முயற்சியாக Diriya.lk எனும் வலைத்தளத்தை டயலொக் உருவாக்கியுள்ளது. நாட்டில் புதிய வணிகங்களை உருவாக்குவதன் மூலமும், இலங்கை தொழில்முனைவோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தங்கள் தொழில்களை மேலும் வலுப்படுத்த தேவையான நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும் பெரும்பான்மையான இலங்கையர்களிடையே ஒரு தொழில் முனைவோர் மனநிலையை உருவாக்குவதே டயலொக் இன் நோக்கமாகும்.