பொருள் விரிவாக்கம்

சிங்கப்பூரில் நடைபெற்ற Loyalty & Engagement Awards 2023 விருது விழாவில் Dialog Star Points தங்க விருதை வென்றது!

2023 ஆகஸ்ட் 08         கொழும்பு

 

Dialog Star Points Wins Gold Award at Loyalty & Engagement Awards

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சியின் Loyalty திட்டமான Star Points, சிங்கப்பூரில் நடைபெற்ற MARKETING-INTERACTIVE நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Loyalty & Engagement விருது விழாவின் போது தொலைத் தொடர்பு பிரிவில் Loyalty Strategy எனும் தங்க விருதை வென்றது. இதன் மூலம், Dialog இன் Star Points loyalty திட்டம் சர்வதேச அளவில் ஆசியாவின் சிறந்த விசுவாசத் திட்டமாக அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள இலங்கையின் Loyalty திட்டமாக Star Points அமைந்துள்ளமை, Star Points பயணத்தில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது. சர்வதேச அந்தஸ்தைக் கொண்ட முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வர்த்தக நாமங்களை தோற்கடித்து இந்த விருதினை வென்று கௌரவிப்பை பெற்றமையானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு loyalty அனுபவங்களை வழங்குவதில் Star Points இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சாதனை குறித்து, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி லசந்த தெவெரப்பெரும அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். “இந்த மதிப்பிற்குரிய தங்க விருதைப் பெறுவது, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த Loyalty அனுபவத்தை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. கடந்த 15 வருடங்களாக எங்களுடன் கைகோர்த்துள்ள நமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதார விற்பனை பிரதிநிதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்."

சிங்கப்பூரில் MARKETING-INTERACTIVE மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட, The Loyalty & Engagement Awards விருதுகளானது தெற்காசியா,தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களில் சந்தைப்படுத்தல் உத்திகள், Loyalty திட்டங்கள் மற்றும் இணைப்பு சந்தைப்படுத்தல் உத்திகளை அங்கீகரித்து வழங்கப்பட்டு வருகின்றன. இத்துறைசார் அனுபவம் வாய்ந்த சந்தைப்படுத்துனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவினால் மேற்பார்வையிடப்பட்ட பின்னர் விருதுகளுக்குரிய திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இத்தகைய பின்னணியில் இந்த மைல்கல்லை அடைந்து வெற்றிகளை கொண்டாடும் இத்தருணத்தில், எம்மீது எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ள நமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதார விற்பனை பிரதிநிதிகளுக்கும் Dialog நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம். அதற்கமைய, Dialog தனது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான Loyalty அனுபவத்தை வழங்குவதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய Loyalty திட்டமாக மாறுவதற்கு உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் Star Points பற்றிய மேலதிக விபரங்களுக்கு, https://dlg.dialog.lk/ஐப் பார்வையிடவும்.