பொருள் விரிவாக்கம்

டயலொக் டெலிவிஷன் இலங்கையில் முதல் முறையாக அமேசான் பிரைம் வீடியோ அனுபவத்தை வழங்குகிறது

டயலொக் ViU Hub 2.0 ஊடாக On-Demand Streaming வசதி

ஜுலை 13, 2021         கொழும்பு

 

news-1

தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கல்விசார் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இலங்கையின் முதற்தர தொலைக்காட்சி சேவை வழங்குனரான டயலொக் டெலிவிஷன், அமேசான் பிரைம் வீடியோ சேவையை முதல் முறையாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Android Q தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சமீபத்திய ViU Hub 2.0 டிகோடருக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுலபமாக பயன்படுத்தக்கூடிய interface உடன், அமேசான் பிரைம் வீடியோ, பிரபலமான ஹாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் இன்னும் பல உள்ளடக்கங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்கின்றது. அமேசான் பிரைம் வீடியோ எல்லோரும் பார்வையிடக்கூடிய பலவிதமான நிகழ்ச்சிகளை கொண்டுவருகிறது, மேலும் அமேசான் பிரைம் வீடியோ சேவைக்கு பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை சமீபத்திய ViU Hub 2.0 டிகோடர் மூலம் வீட்டில் இருந்த படியே பார்வையிடலாம்.

இந்த வெளியீடு குறித்து டயலொக் டெலிவிஷன் வணிக பிரிவு தலைவர் சிரந்த டி சோய்சா கருத்து தெரிவிக்கையில், "டயலொக் டெலிவிஷன் இலங்கையில் முதன்முறையாக சமீபத்திய ViU Hub 2.0 டிகோடரை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம், இது அதன் பார்வையாளர்களுக்கு கல்விசார் நிகழ்ச்சிகளையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் இரசனைகளுக்கு ஏற்ப இலங்கையில் முதற்தர தொலைக்காட்சி பொழுதுபோக்குகளை வழங்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளதுடன், மேலும் 'அமேசான் பிரைம் வீடியோ' போன்ற ஸ்ட்ரீமிங் வசதி மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்த படியே எந்தவொரு நேரத்திலும் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை பார்வையிட முடியும்.

ஆண்ட்ராய்டு டிவி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ViU Hub மற்றும் ViU Mini சாதனங்கள் மூலம் பார்வையாளர்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவி அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். 'அமேசான் பிரைம் வீடியோ App ஐ சமீபத்திய ViU Hub 2.0 டிகோடரில் டவுன்லோட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் இப்போது எளிதாக 'அமேசான் பிரைம் வீடியோ' சேவையுடன் இணைந்துக்கொள்ள முடிவதுடன் உங்கள் ViU Mini சாதனத்திலும் விரைவில் 'அமேசான் பிரைம் வீடியோ' சேவையை நீங்கள் அனுபவிக்க முடியும். டயலொக் டெலிவிஷன் Gold பக்கேஜ் வாடிக்கையாளர்கள் மற்றும் கிளப் விஷன் அங்கத்தவர்கள் சமீபத்திய டயலொக் டெலிவிஷன் ViU Hub 2.0 டிகோடருக்கு இலவசமாக Upgrade செய்துக்கொள்ள முடியவதுடன் ஏனைய பக்கேஜ்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிறப்பு அறிமுக விலையான ரூ. 2,990/- (வரிகள் உள்ளடங்களாக) க்கு பெற்றுக்கொள்ள முடியும். சமீபத்திய ViU Hub 2.0 டிகோடருக்கு Upgrade செய்ய, ViUHUB (இடைவெளி) DTV கணக்கு இலக்கத்தை டைப் செய்து டயலொக் மொபைலில் இருந்தெனில் 679 க்கும் வேறு வலையமைப்புகளில் இருந்தெனில் 0770679679 க்கும் SMS செய்யுங்கள். 'அமேசான் பிரைம் வீடியோ' சேவைக்கு பதிவு செய்ய, வாடிக்கையாளர்கள் தங்கள் டிவி, கணினி அல்லது மொபைல் தொலைபேசியில் 'அமேசான் பிரைம் வீடியோ App ஐ open செய்து திரையில் தென்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். இந்த சேவையினை பெற்றுக்கொள்ளும் போது டயலொக் டெலிவிஷன் மாதாந்த கட்டணம் மற்றும் தொடர்புடைய டேட்டா கட்டணங்களுக்கு மேலதிகமாக 'அமேசான் பிரைம் வீடியோ' சேவைக்கான கட்டணமும் இணைக்கப்படும். வாடிக்கையாளரின் வசதிக்கு அமைய 'அமேசான் பிரைம் வீடியோ' பதிவு கட்டணத்தை டயலொக் மொபைல் பில்லுடன் இணைத்துக்கொள்ளலாம்.

இந்த சேவையை பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.dialog.lk/tv க்கு செல்லுங்கள்