பொருள் விரிவாக்கம்

டயலொக், வாடிக்கையாளர்களின் உச்சபட்ச சமூக வலைத்தள பாவனைக்காக Fun Blaster மாதாந்த Planஐ அறிமுகப்படுத்துகிறது

2024 மார்ச் 7         கொழும்பு

 

“Dialog Big Match Season” launched to Power Champions of Tomorrow

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ரூ.547 இற்கான Fun Blaster மாதாந்த பிளானை அறிமுகப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூகவலைத்தள பாவனைக்கான தேவையை ஈடுகட்டும் வகையில் Facebook, WhatsApp, மற்றும் YouTube தளங்களுக்கான கட்டற்ற அணுகல் உள்ளடங்கலாக மேலதிகமாக 3GB anytime dataவையும் வழங்குகிறது.

வரிகளுடன் சேர்த்து ரூ.547 எனும் விலையில் இந்த பிளான் வாடிக்கையாளர்களின் அனைத்து சமூகவலைத்தள தேவைகளையும் மாதம் முழுவதும் ஒரே ரீலோடில் பூர்த்தி செய்திடும். Facebook, WhatsApp, மற்றும் YouTube தளங்களை அதிகமாக பாவிப்போரின் தேவையை பூர்த்தி செய்வதுடன் இதர தேவைகளுக்கான மேலதிக Dataவையும் அளிக்கும் பிளானாக இது விளங்குகிறது. மலிவான விலையில் unlimited data உடன் வாடிக்கையாளர்களை தமது குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்ந்து இணைப்பிலிருப்பதை இந்த பிளான் உறுதிப்படுத்துகிறது.

இந்த ரூ.547 பிளானுக்கு மேலதிகமாக வாடிக்கையாளர்களின் பல்வகைபட்ட தெரிவுகளுக்கேற்ப பல பிளான்களை Fun Blaster வரிசை அளிக்கிறது. இந்த வரிசையில் Instagram மற்றும் TikTok பாவனைக்காக 15GB அளிக்கும் ரூ.305 மாதாந்த பிளான் அத்தோடு Facebook, WhatsApp, Viber, மற்றும் IMO பாவனைக்காக 20GB அளிக்கும் ரூ.223 மாதாந்த பிளான் ஆகியன உள்ளடங்கும்.

மேலதிக தகவல்களை https://dlg.lk/3T3L வழியே பார்வையிடவும்.