பொருள் விரிவாக்கம்

Dialog Pay வர்த்தக அமைப்பில் Pizza Hut Sri Lanka இணைகிறது

5th August 2026         Colombo

 

இடமிருந்து வலமாக: ரியான்சோ ரொட்ரிகோ (முதுநிலை மேலாளர், Merchant Payment Acquiring, Dialog Finance PLC); மாலித் சொய்சா (சந்தைப்படுத்தல், உத்தி மற்றும் திட்டமிடல் தலைவர், Pizza Hut)

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Pizza Hut Sri Lanka நிறுவனத்துடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்பாற்பட்டு, வாடிக்கையாளர்கள் நாடு முழுவதுமுள்ள Pizza Hut உணவகங்களில் Dialog Pay ஊடாகப் பாதுகாப்பான LankaQR செலுத்துகைகளை மேற்கொள்ள முடியும். நாடு முழுவதும் 126 க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ள இலங்கையின் முதன்மைத் விரைவு சேவை உணவகப் பிராண்டான Pizza Hut Sri Lanka உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கூட்டாண்மையானது, டிஜிட்டல் கட்டண வசதியை மேலும் விரிவாக்குகிறது. அத்துடன், தகுதியான LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் வழங்கி வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் இப்போது உணவகங்களில் அமர்ந்து உணவருந்தும்போது (Dining in), பார்சல்களைப் பெற்றுக்கொள்ளும்போது (Takeaway) அல்லது Pizza Hut Sri Lanka இன் உடனடி அழைப்பு இலக்கம் (0112729729) ஊடாக விநியோக சேவைகளை ஆர்டர் செய்யும்போது Dialog Pay ஐப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் தங்களுக்கு விருப்பமான பிட்சா, பாஸ்தா, பக்க உணவுகள், இனிப்பு வகைகள் மற்றும் பானங்களுக்கான கட்டணங்களைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் செலுத்த முடியும். உணவகங்களில் உணவருந்தினாலும் சரி, வீட்டில் இருந்தபடியே உணவை அனுபவித்தாலும் சரி, ஒவ்வொரு Pizza Hut அனுபவத்தின்போதும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக நெகிழ்வுத்தன்மையை இக்கூட்டாண்மை வழங்குகிறது.

இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த Pizza Hut Sri Lanka இன் சந்தைப்படுத்தல் உத்தி மற்றும் திட்டமிடல் தலைவர் மலித் சொய்சா, "வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது என்பது எமது உணவின் தரத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. Pizza Hut உடனான ஒவ்வொரு தொடர்பாடலையும் முடிந்தவரை வசதியானதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதையும் அது குறிக்கிறது. Dialog Pay உடனான எங்களது இக்கூட்டாண்மை மூலம், வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவருந்தினாலும், பார்சல்களைப் பெற்றுக்கொண்டாலும் அல்லது எமது விநியோக சேவையை அனுபவித்தாலும் அவர்களுக்காக மற்றுமொரு பாதுகாப்பான கட்டண விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதேநேரம், ஒவ்வொரு Pizza Hut அனுபவத்தையும் மேலும் வசதியானதாகத் தொடர்ந்து மாற்றுகிறோம்," எனக் குறிப்பிட்டார்.

Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay, தொடர்புச் சேவை, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே சேவை அமைப்பின்கீழ் கொண்டுவருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் கட்டணங்களை எளிமையானதாகவும், இலகுவாக அணுகக்கூடியதாகவும், அதிக நன்மைகளைத் தருவதாகவும் மாற்றும் Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ எளிதாகச் செயல்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணப் பரிமாற்றம் செய்யவும், Digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறக்கவும், Dialog Finance மூலம் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

நாடு முழுவதும் 100,000 க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்கிப் பயனர்களை ஊக்கப்படுத்துகிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், ரொக்கப் பயன்பாடு குறைந்த, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் ஆதரவளிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.