பொருள் விரிவாக்கம்

‘Sew Desatama Dialog’ இன் முயற்சியில் மடொல்சிம பகுதியில் புதிதாக பணிக்குட்படுத்தப்பட்ட தொடர்பு இயக்கக் கோபுரம்.

2023 ஜனவரி 4         கொழும்பு

 

Commissioning of the Dayagama tower

புகைப்பட விபரம்: டயலொக் நிறுவனத்தின் புதிய தொலைத்தொடர்பு கோபுரமொன்று பதுளை மாவட்டம், மடுல்சீமை பிரதேசத்தில் அண்மையில் நிறுவப்பட்டு டயலொக் நிறுவன பிரதிநிதிகளினால் பொதுமக்களின் பாவணைக்கென கையளிக்கப்பட்டது.

இலங்கையின் முதற்தர வலையமைப்பான Dialog Axiata PLC, நாட்டின் கிராமங்கள் மற்றும் நாட்டுப்புறங்கள் முழுவதிலும் இணைப்பை அதிகரிப்பதற்கான உறுதிமொழியின் ஒரு பகுதியாக, "Sew Desatama Dialog" முன்முயற்சியின் கீழ் பதுளை மாவட்டத்தில் உள்ள மடோல்சிமா கிராமத்தில் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தை அண்மையில் நிறுவியது.

பதுளை மாவட்டத்தின் நிக்கப்பிட்டிய மற்றும் கரந்தகம கிராமங்களிலுள்ள கோபுரங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் பனிரெந்தவ, பஹாரிய, கும்புக்க வாவி, மற்றும் மெதகம ஆகிய கிராமங்களில் உள்ள கோபுரங்களுடன் சேர்த்து மடோல்சிம கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் மேம்படுத்தப்பட்ட இணைப்பை வழங்கி அதன் மூலம் மக்களின் வாழ்வை வளப்படுத்தி வலுவூட்டுவதற்கு Dialog காட்டும் முனைப்பை இந்த முன்னெடுப்பானது மீண்டும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

2022 நிறைவுடன் Dialog நிறுவனமானது 4700 மொபைல் 4G தளங்களை தனது வலையமைப்பின் மூலம் அடையப் பெற்றுள்ளது. நாட்டிலேயே அதிகப்படியான கோபுரங்களை உடைய வலையமைப்பாக மாறியுள்ளது. Green field கோபுரங்களை பயன்படுத்தி, உள்ளார்ந்த கிராமப்புற சமூகங்களுக்கு தன் பரவெல்லையை விரைவாக விரிவுபடுத்தியுள்ளதுடன் அடர்த்தியான பகுதிகளில் அவசரத் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யயும் பொருட்டு Lamp Pole தீர்வுகளையும் வழங்கியுள்ளதன் மூலம் 95% 4G டேட்டா பரவெல்லையை பயன்படுத்தும் மக்கள்தொகையை Dialog தன்னகப்படுத்தியுள்ளது.

டயலொக்கின் பரவெல்லை தடத்தை விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பு உலகளாவிய வலையமைப்புகள் சோதனையாளர்களால் அடையாளங் காணப்பட்டு, திறந்தவெளித் தொடர்பில் 'சிறந்த 4G பரவெல்லை அனுபவம்' மற்றும் 'விரைவான பதிவேற்ற, பதிவிறக்க வேக அனுபவம்' போன்ற அடைமொழித் தலைப்புகள் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப் பெற்றுள்ளது.