பொருள் விரிவாக்கம்

டயலொக் அனுசரணையில் 72 ஆவது Battle of the Golds

2022 ஒக்டோபர் 26         கொழும்பு

 

டயலொக் அனுசரணையில் 72 ஆவது Battle of the Golds

படத்தில் இடமிருந்து வலம் : மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியின் கிரிக்கெட் அணித் தலைவர் பிஹங்க மெண்டிஸ், மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணியின் பொறுப்பதிகாரி நிலான் பெர்னாண்டோ, மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியின் அதிபர் வணக்கத்திற்குரிய திருத்தந்தை. சஞ்சீவ மெண்டிஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான செயற்பாட்டு அதிகாரி லசந்த தெவெரப்பெரும, மொரட்டுவை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் அதிபர் ஹசித கேசர வெத்திமுனி, மொரட்டுவை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் நடுநிலைப்பள்ளி பொறுப்பதிகாரி கசுன் தேவப்பிரிய, மொரட்டுவை, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணித் தலைவர் தரிந்து கிமந்த அமரசிங்க

இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வாக்குறுதிக்கமைய இம்முறையும், தங்கங்களின் சமரான மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி மற்றும் மொரட்டுவை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு அனுசரணை வழங்குகின்றது.

மேற்படி 72வது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மொறட்டுவை டி சொய்சா மைதானத்தில் அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் நடைபெறவுள்ளது. மேலும், ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 50 ஓவர்களைக் கொண்ட 37ஆவது போட்டியானது இதற்கு மறுநாள் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறும்.

கேம்ப்ரியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சகல துறை ஆட்டக்காரர் தரிந்து கிமந்த அமரசிங்க அவர்கள் வழிநடத்தும் அதே வேளையில் சகல துறை ஆட்டக்காரர் பிஹங்க மெண்டிஸ் தலைமையில் செபாஸ்டியானைட்ஸ் அணி விளையாடவுள்ளது.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற ரொமேஷ் களுவித்தாரண மற்றும் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட துலிப் மெண்டிஸ் உட்பட இரண்டு கல்லூரிகளினதும் கிரிக்கெட் வீரர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இலங்கையை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய வீரர்களில் ஓஷத பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அமில அபோன்சு ஆகியோர் புனித செபஸ்தியன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் ஆவார். மற்றும் குசல் மெண்டிஸ் மற்றும் லஹிரு திரிமான ஆகியோர் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

முன்னணி அனுசரணையாளராக, டயலொக் ஆசி ஆட்டா thepapare.com, Dialog VIU மொபைல் App மூலம் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் போட்டியை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகளை செய்துள்ளது, மேலும் Dialog TV சேனல் 140 இலும் நேரடியாகக் காண்பிக்கப்படும்.

இரண்டு கல்லூரிகளுக்கிடையே இதுவரை நடைபெற்றுள்ள மாபெரும் போட்டிகளில் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி ஆறு வெற்றிளையும், புனித செபஸ்தியன் கல்லூரி மூன்று வெற்றிகளையும் பெற்றுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு சனிதா டி மெல் தலைமையில் கிண்ணத்தை வென்ற புனித செபஸ்டியன் கல்லூரியே தற்போதைய நடப்பு செம்பியனாக உள்ளது. இரண்டு கல்லூரிகளுக்குமிடையே இறுதியாக நடைபெற்ற இருநாள் மாபெரும் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இறுதியாக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடினமான வெற்றியைப் பெற்றது. வரையறுக்கப்பட்ட 50 ஓவர்கள் போட்டியில், புனித செபஸ்தியன்ஸ் கால்லூரி 17 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ள அதேவேளை, பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி 16 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஒரு போட்டி சம நிலையில் முடிவுற்றதுடன், இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசி ஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளின் பெருமைமிக்க அனுசரணையாளர்களாவர். அத்துடன் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து, தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்தாட்ட போட்டிகள், பாடசாலை ரக்பி உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.