பொருள் விரிவாக்கம்

டயலொக் பேச்சு மற்றும் கேட்டல் செயற்பாட்டினை அதிகரிக்க உதவும் அதுரு மிதுரு வினைவலுவூட்டுகின்றது.

2019 பிப்ரவரி 11         கொழும்பு

 

news-1

 

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையில் முதன் முறையாக மூன்று மொழிகளில் (தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம்) கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுடையவர்களுக்கு மேம்பட்ட மற்றும் மாற்று தகவல் தொடர்பினை கொண்ட டிஜிட்டல் உள்ளடக்கங்களை பயன்படுத்தி “அதுரு மிதுரு”(AAC) app இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மூளையில் அல்லது பிற சிக்கல்களின் விளைவாக பெருமூளை வாதம் ஆட்டிஸம் போன்ற பல காரணங்களால் பேச்சு குறைபாடுகள் கண்டறியப்படலாம். விபத்துக்கள் செயல்கள் பக்கவாதம் அல்லது நோய்களின் விளைவாக தொடர்புக்கொள்ளும் திறனும் பாதிக்கப்படலாம். இப்போது டயலொக் வலையமைப்பில் ஊடாக ஏதேனும் அன்ரோய்ட் சாதனத்தினை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு மேலதிக Data கட்டணங்கள் அறவிடப்பமாட்டாது. எந்தவொரு ஆண்ட்ராய்ட் சாதன பாவனையாளர்களும் ஆன்ராய்ட் சாதனத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த இரு பயன்பாடுடைய App, தகவல் தொடர்பு கஷ்டங்களுடன் உதவுவதோடு இந்த App ஆனது அவர்களின் தேவைகளையும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்த உதவுகின்றது. இந்த துறையில் கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வழிநடத்தும் விரிவான மனித மைய ஆராய்ச்சி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் முக்கிய மொழிகளிலும் கலாச்சாரத்திலும் இடம்பிடித்துள்ள அதுரு மிதுரு படம் மற்றும் குரலினை பயன்படுத்தி தொடர்புக்கொள்ள உதவுகின்றது. இந்த App ஆனது மிகவும் பொதுவான தலைப்பு உள்ளடக்கங்களை கொண்டு திட்டமிடப்பட்ட படம் மற்றும் குரல் தொகுப்புக்களை கொண்டுள்ளது. எவ்வாறாயினும் இவை தனிப்பயனாக்கக்கூடியவை. ஒவ்வொரு பாவனையாளரும் தனித்தனியே தனிப்பயனாக்கிக்கொள்ள முடியும். மேலும் இதில் காணப்படும் படங்கள் மற்றும் பதிவுகள் பாவனையாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு பொருத்தமானதாகவும் அமையும். மேலும் இந்த App ஆனது சுயாதீனமானது. எந்தவொரு சாதனத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இதன் கட்டமைப்புகள் வடிவமைக்கப்ட்டுள்ளது. இதனால் பாவனையாளர் சாதனங்களை மாற்றும் போது App கட்டமைப்புக்களை மீண்டும் மீண்டும் மாற்றுவதற்கான அவசியங்கள் இல்லை.

இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs), குறிப்பாக இலக்கு 9 (தொழல் உட்கட்டமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்) மற்றும் இலக்கு 10 (ஏற்றத்தாழ்வுகளை களைதல்) ஆகியவற்றை பொறுத்தவரை எமது தொடர்ச்சியான முயற்சிகளுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்தவதற்கான உறுதிப்பாட்டை டயலொக் கொண்டுள்ளது. அந்த துவக்கத்தின் மூலம் பின்தள்ளப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்குவோம் என நம்புவதுடன் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவதற்கான வாய்ப்பினையும் வழங்குகின்றோம் என தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இரத்மலானை ஆடியோலெஜி மையத்தின் பேச்சு பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளருமான ஷர்மி நாணயக்கார உரையாற்றும் போது இந்த App பெற்றோர் பிள்ளைகள் மற்றும் பேராசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் பேச்சு குறைபாடுகளோடு தகவல் தொடர்பு குறித்து எதிர்கொள்ளும் பல சவால்களை தடுக்க ஒரு வாய்ப்பளிக்கின்றது. இது பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக தொடர்புக்கொள்வதற்கும் அவர்களது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சுற்றியுள்ளவர்கள் புரிந்துக்கொள்வதற்கு ஏற்ப வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கின்றது என தெரிவித்தார்

ஆன்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் Tab ஊடாக Google Play Store க்கு செல்வதன் மூலம் இலவசமாக அதுரு மிதுரு App இனை பெற்றுக்கொள்ள முடியும்.