பொருள் விரிவாக்கம்

எஹெலியகொட பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டயலொக் தலைமையில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது

இரத்தினபுரிää 2018 செம்டெம்பர் 02        

 

news-1

2017 செனஹே சியபத செயற்றிட்டத்தின் மூலம் எஹேலியகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 25 வீடுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நீர்பாசன மற்றும் நீர்வழி மற்றும் அகர்த்த முகாமைதை;துவ அமைச்சர் கௌரவ துமிந்து திசாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான குழும தலைமைநிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதனை படத்தில் காணலாம். வலமிருந்து இடம் - மாவட்ட செயலாளர்;/ GA இரத்தினபுரி மாலனி லொகுபோதாகம, பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜயவர்தன, மற்றும் எஹெலியகொட பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணை தலைவர் சிரிபால கியல்ல ஆகியோரும் இதனை பார்வையிடுகின்றார்கள்.

news-1

நீர்பாசன மற்றும் நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் கௌரவ துமிந்து திசாநாயக்க வீட்டின் நாடாவை வெட்டுவதையும் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிசி நிறுவனத்திக் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணுலாம்

2017ம் ஆண்டு இலங்கையை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து செனஹே சியபத வி;ன் தொடர்ச்சியான முன்முயற்சியின் மூலம் இரத்தினபுரி, எஹெலியகொடவில் 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நீர்பாசன, நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ துமிந்த திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன ஆகியோரின் முன்னிலையில் 2018 ஆகஸ்ட் 28ம் திகதி 25 வீடுகளின் உரிமையாளர்களிடம் அவர்களின் வீட்டிற்கான சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்ட செயலாளர்/ GA இரத்தினபுரி மாலனி லொகுபோதாகமää எஹெலியகொட உதவி பிரதேச செயலாளர் நாதீ தரங்கி ஜயசிங்ஹே டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, RIL Pro perty பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹிரொ~pனி பர்னாந்து, Food Buzz பிரைவட் லிமிட்டட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அனு~h சஞ்சீவனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த செயற்றிட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக Dialog நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கைகோர்த்துக்கொள்ளும் படி அன்புடன் அழைத்திருந்தது. டயலொக் வாடிக்கையாளர்கள் தாராளமாக வழங்கிய நன்கொடையினை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் மும்மடங்காக்கி நன்கொடையாக வழங்கியது. டயலொக் வாடிக்கையாளர்கள் 16.53 மில்லியன் ரூபாவை வழங்கியமைக்கு அமைய டயலொக் நிறுவனம் மேலும் 33.47 மில்லியன் ரூபாவினை இணைத்ததுடன் RIL Property பிஎல்சி நிறுவனம் 7.5 மில்லியன் ரூபாவினை வழங்கியதன் மூலம் 2017ம் ஆண்டு செனஹே சியபத செயற்றிட்டத்திற்கான நிதித் தொகை 57.5 மில்லியன் ரூபாவாக உயர்ந்தது. அதன் மூலம் கொடபொல மாத்தறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 8 வீடுகள் ஜுலை மாதம் 29ம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கடற்படை மற்றும் விமானப்படை மூலம் 25 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தலைமையின் கீழ் NBRO (தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்) மற்றும் Sierra கட்டுமான நிறுவனம் ஆகியவை வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமையவும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது நீர்பாசன, நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ துமிந்த திஸாநாயக்க தனது கருத்தினை தெரிவித்த போது, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளனால் பெரும் இழப்புக்களை சந்தித்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்குவதில் செனஹே சியபத முன்முயற்சியாக செயற்பட்டு வருகின்றது. இன்று எஹெலியகொட பிரதேசத்தில் மற்றுமொரு 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. டயலொக் வாடிக்கையாளர்கள்ää டயலொக் நிறுவனம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அகியவற்றின் ஆதரவு கிடைத்தமையினாலேயே இந்த செயற்றிட்டமானது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜயவர்தன, இயற்கை சீற்றத்தின் போது வீடுகளை இழந்த எம்மக்களுக்கு வீடுகளை கட்டி வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்திற்கு பக்க பலமாக இருந்து இந்த வீடுகளை கட்டியெப்புவதில் துணை புரிந்த எமது முப்படை வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கூறினார்.

2017ம் மற்றும் 2018ம் காலப்பகுதியில் 63 புதிய வீடுகளை கட்டியெமுப்புவதற்கு தங்களின் கணிசமானளவு பங்களிப்பினை தாராளமான செய்த டயலொக் வாடிக்கையாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த செயற்றிட்டமானது தேசிய காரணத்தை ஆதரிப்பதற்காக ஒரு கூட்டு முயற்சியாக இடம் பெற்றதாகும் என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே தெரிவித்தார்.

இந்த நிதி தொகையின் மூலம் பகிர்ந்தளிப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் கணக்காய்வு நிறுவனத்தினால் சுயாதீனமாக கணக்காய்வு செய்யப்பட்டது.