பொருள் விரிவாக்கம்

ஈஸ்டர் ஞாயிறு அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட டயலொக் அறக்கட்டளையுடன்Shangri-La உறுதுணையாளராக இணைந்துள்ளது.

2019 ஜுலை 10         கொழும்பு

 

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நீண்ட கால கல்விக்கான ஆதரவினை Shangri-La வழங்குகின்றது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சோக நிகழ்வுகளை தொடர்ந்து கொழும்பு Shangri-La, டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சிக்கு நன்கொடையினை வழங்கியதுடன், இந்த தொகையின் மூலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் 19 வயது வரை நீண்ட கால கல்விக்கான ஆதரவு வழங்கப்படும்.

மேலும், கொழும்பு Shangri-La ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று கொச்சிக்கடையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறைந்த கல்வியுடன் உளவியல் செயற்றிட்டங்களையும் வழங்கவுள்ளது. கொச்சிக்கடையில் உள்ள சென்.அந்தோனியார் தேவாலயம் மற்றும் World Vision ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் 90 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Shangri-La ஹோட்டலின் உப தலைவரும் பொது முகாமையாளருமான Timothy Wright கருத்து தெரிவிக்கையில், ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் நடந்த பாரிய அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு எங்களின் அனுதாபங்களும் ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. கொழும்பு Shangri-La ஹோட்டல் இலங்கை சமூதாயத்துடன் நெருக்கிய தொடர்பினை கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் நீண்ட கால கல்விக்கும் ஆதரவினை வழங்குவதற்காக Rally to Care முன்முயற்சியின் ஒரு பங்காளியாக இருப்பதையிட்ட நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே தனது கருத்தில், Rally to Care முன்முயற்சிக்கு தாராளமான பங்களிப்பினை வழங்கும் Shangri-La க்கு நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். இந்த பங்களிப்பானது பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீண்ட கால கல்விக்கான ஆதரவினை வழங்குவதில் எங்கள் நிதியை மேலும் அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தார்

திரட்டப்பட்ட நிதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் உளவியல் ரீதியான மறுவாழ்வு ஆதரவினை வழங்குவதற்காக கட்டுவாபிடியவில் Life Healing Centre அமைக்கப்பட்டு நிவாரண பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றது. இதில் 20 தொழில்முறை ஆலோசகர்கள், 10 மனநல சிகிச்சையாளர்கள், 17 மனநல மருத்துவர்கள் ஊடாக 770க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு Life Healing Centre மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களின் வீடுகளுக்கும் விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 85 பேருக்கு EDMR(கண் இயக்க தேய்மானமயமாக்கல் மற்றும் மறு செயலாக்கம்) இனால் சிறப்பு தனிநபர் / ஊடாடும் உளவியல் சிகிச்சைகள் நடாத்தப்பட்டுள்ளது. மேலும் காயங்களை குணப்படுத்தல் மற்றும் குழு சிகிச்சை அமர்வுகள் (34வது நாளாக) இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குணப்படுத்தும் செயன்முறையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆலோசனை திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகளை செவிமடுக்க ரேடியோ பகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் Rally to Care, Seth FM 103.1 உடன் இணைந்து மே மாத நடுப்பகுதியிலிருந்து கடந்த 3 மாதங்களாக கட்டுவாப்பிடிய மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் ஆலோசனை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது. கடுவாப்பிடியவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்களும் நடாத்தப்பட்டதுடன் மருந்துகள் தேவைப்பட்டவர்களுக்கு அதற்காக வவுச்சர்களும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பில் 71 மாணவர்களுக்கு நீண்டகால கல்வி உதவியை வழங்குவதற்கான நிவாரண விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கடுவாப்பிடிய மற்றும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எழுதுகருவிகளுடன் பாடசாலை பைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான கண் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதுடன் கடுவாப்பிடிய மற்றும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டவர்களில் அவசியமானவர்களுக்கு தேவையாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பணிகள் World Vision Lanka, Sarvodaya, My Doctor, Vision Care மற்றும் இரத்மலானை செவிப்புலன் மையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது.

Rally to Care முன்முயற்சி தொடர்பான மேலதிக விபரங்களை தெரிந்துக்கொள்ள http://dialogfoundation.org/rallytocare எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்

news-1

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே, Shangri-La ஹோட்டலின் உப தலைவரும் பொது முகாமையாளருமான Timothy Wright அவர்களுக்கு டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன் முயற்சிக்கு Shangri-La ஹோட்டலின் தாராள பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டு சான்றிதழை வழங்குகின்றார்.