Dialog Pay வர்த்தக அமைப்பில் இணைந்துள்ள Cool Planet
2026 ஆகஸ்ட் 24 கொழும்பு
முதித பிரேமரத்ன, துணைத் தலைவர், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பங்கான்மைகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ரிப்லான் ஹாரிஸ், சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் சிஆர்எம் தலைமை, Cool Planet; அகாம் வஹாப்தீன், சந்தைப்படுத்தல் தலைமை, Cool Planet.
இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்பு சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Cool Planet நிறுவனத்துடன் கொண்டுள்ள கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Cool Planet இன் 14க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் Dialog Pay மூலமாகப் பாதுகாப்பான LankaQR செலுப்பனவுகளை (Payments) மேற்கொள்ள முடியும். நாட்டின் முன்னணி ஆடை மற்றும் வாழ்க்கையியல் (Fashion & Lifestyle) சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான Cool Planet இல், தகுதியுடைய LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog Data வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ள டிஜிட்டல் செலுப்பனவு அனுபவத்தை இக்கூட்டாண்மை அறிமுகப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்கள் இப்போது Cool Planet விற்பனையகங்களில் ஆடை வகைகள், காலணிகள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பரிசுகள் மற்றும் வாழ்க்கையியல் அத்தியாவசியப் பொருட்கள் போன்ற பலதரப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்ய Dialog Pay ஐப் பயன்படுத்தலாம். இக்கூட்டாண்மை குடும்பங்களுக்கான கொள்வனவை மேலும் பலனளிப்பதாக மாற்றுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் கட்டணங்களைச் செலுத்துவதற்கான வசதியையும் வழங்குகிறது.
இக்கூட்டாண்மை குறித்து Cool Planet இன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அஃகாம் வஹாப்தீன் (Aqaam Wahabdeen) கருத்துத் தெரிவிக்கையில்: "இலங்கை முழுவதிலும் உள்ள குடும்பங்களுக்கு ஆடை மற்றும் வாழ்க்கையியல் சார்ந்த கொள்வனவுகளை எளிதாகவும், பலனளிப்பதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதையே Cool Planet எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களது கடைகளில் நாங்கள் காட்சிப்படுத்தும் பொருட்கள் முதல், வாடிக்கையாளர்கள் வருகை தரும் போது அவர்களுக்கு வழங்கும் அனுபவம் வரை நாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் எங்களது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. Dialog Pay சேவையை வழங்குவது அந்த வாக்குறுதியின் ஒரு இயற்கையான நீட்சியாகும்: இது எங்களது வாடிக்கையாளர்களுக்குச் பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் கட்டணம் செலுத்துவதற்கான மற்றொரு வழியை வழங்குவதுடன், தகுதியுடைய LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Data எனும் கூடுதல் நன்மையையும் அளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தெரிவுக்கும் மதிப்பிற்கும் நம்பும் ஒரு பிராண்ட், அவர்கள் எம்மிடம் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு முறையும் அவர்களை மேலும் பலனடையச் செய்வதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம்."
Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay, இணைப்புத்தன்மை (Connectivity), டிஜிட்டல் செலுப்பனவுகள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் செலுப்பனவுகளை எளிமையாகவும், அணுகக்கூடியதாகவும், மேலும் பலனளிப்பதாகவும் மாற்றுவதற்கான Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ இலகுவாகச் செயற்ப்படுத்தலாம். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR செலுப்பனவுகளை மேற்கொள்ளவும், பணப்பரிமாற்றம் செய்யவும், தங்களது Digital Wallet - ஐ பயன்படுத்தவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறக்கவும், Dialog Finance மூலமான கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.
நாடு முழுவதும் 100,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் Dialog Pay, தகுதியுடைய QR செலுப்பனவுகளுக்கு இலவச Dialog Data வை வழங்கி வெகுமதி அளிக்கிறது. இது அன்றாடப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், இலங்கை டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட, பணப் பயன்பாடு குறைந்த (Cash-light) பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கும் ஆதரவளிக்கிறது. மேலதிக தகவல்களுக்கு, https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.