முக்கிய அறிவிப்பு : தனிப்பட்ட விபரங்கள், OTP-கள் அல்லது கடன் அட்டை (Credit Card) இலக்கங்களை ஒருபோதும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முறையான நிறுவனங்கள் ஒருபோதும் இத்தகைய தகவல்களை தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாகக் கோரமாட்டார்கள். யாராவது இதைக் கேட்டால் — அது அநேகமாக ஒரு மோசடியாக இருக்கலாம்.

STAY ALERT!
மோசடி செய்பவர்கள் உங்களின் மொபைல் சேவை வழங்குநர், சட்ட அமலாக்கப் பிரிவு, வரி அலுவலகம் அல்லது குடும்ப உறுப்பினர் என நீங்கள் நம்பும் ஒருவரைப் போல பாசாங்கு செய்கிறார்கள். அவர்கள் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது கணக்கு அணுகலைத் திருடுவதற்காக அழைப்புகள், செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது டேட்டா இணைப்புகள் மூலம் உங்களை ஏமாற்றுகிறார்கள்.
டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் மோசடிகளிலிருந்து (Digital Scams) உங்களைப் பாதுகாக்கவும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு வசதியினை (network-level safeguards) நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்திட்டமானது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், டிஜிட்டல் தொடர்புகளைப் பயன்படுத்தும்போது சரியான முடிவுகளை எடுக்க அவர்களுக்குத் துணைபுரிகிறது.
இதன் முதற்கட்டமாக, “DIALOG WARNING - SPAM” எனும் SMS Label அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் முறை, அதன் தன்மைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் (Links) போன்றவற்றை எமது கட்டமைப்பு ஆய்வு செய்து, அவை தேவையற்ற குறுஞ்செய்திகள் (Spam) என அடையாளம் காணப்படும் பட்சத்தில் இந்த Label சேர்க்கப்படும்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான Report Scam செய்திகள் கிடைத்தால் இங்கே அல்லது 0777 678 678 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாக அறிக்கையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நடைமுறையிலுள்ள மோசடிகள்
மோசடி முறைகளை அறிந்துகொள்ளுங்கள் - உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
SMS
SMS உங்கள் செய்திகளைப் பாதுகாத்தல்
விழிப்புணர்வுடன் இருங்கள் - சமீபத்திய SMS மோசடிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

SMS
SMS உங்கள் செய்திகளைப் பாதுகாத்தல்
விழிப்புணர்வுடன் இருங்கள் - சமீபத்திய SMS மோசடிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தபால் அலுவலகம் அல்லது பார்சல் விநியோகச் சேவையிலிருந்து (Courier Service) அனுப்புவது போன்ற போலியான செய்திகளை மோசடி செய்பவர்கள் அனுப்புகின்றனர். உங்கள் பார்சலை விநியோகிக்கும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகக் பொய்யாகக் கூறி, உங்கள் தனிப்பட்ட விபரங்களை உறுதிப்படுத்துமாறு அவர்கள் கோருகின்றனர்.
Learn moreமோசடி செய்பவர்கள், தாங்கள் Dialog நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகக் கூறி, நீங்கள் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான Dialog Mega Wasana பரிசை வென்றுள்ளதாக போலியான குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புகின்றனர். பின்னர், "உறுதிப்படுத்துதலுக்காக" (Verification) உங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதுடன், அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்குகளை அணுகி பணத்தைத் திருடுகின்றனர்.
Learn moreகுரல் அழைப்புகள்
உங்கள் அழைப்புகளைப் பாதுகாத்தல்
மோசடிகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் — குரல் வழி மோசடிகளை (Voice Scams) அடையாளம் கண்டு விழிப்புடன் இருங்கள்.

மோசடி செய்பவர்கள் Dialog அழைப்பு மைய அதிகாரிகளைப் போல (Call center agents) நடித்து, நீங்கள் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான Dialog மெகா வாசனா பரிசை வென்றுள்ளதாகப் பொய்யாகக் கூறுகின்றனர். இந்த மோசடியின் ஒரு பகுதியாக, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தேவை எனக் கூறி, உங்கள் முழுப் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களை அவர்கள் கோருகின்றனர்.
Learn moreமோசடி செய்பவர்கள் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளைப் போல நடித்து, சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றங்கள் காரணமாக உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பின்னர், உங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதன் மூலம் உங்கள் "அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு" அவர்கள் உங்களைக் கேட்பார்கள்.
Learn more
WEB
உங்கள் இணையப் பயன்பாட்டைப் பாதுகாத்தல்
விழிப்புடன் இருங்கள் — உங்களை ஏமாற்றுவதற்கு முன் போலி இணையதளங்கள், பாப்-அப்கள் (Pop-ups) மற்றும் இணையப் பொறிகளைக் கண்டறியுங்கள்.

WEB
உங்கள் இணையப் பயன்பாட்டைப் பாதுகாத்தல்
விழிப்புடன் இருங்கள் — உங்களை ஏமாற்றுவதற்கு முன் போலி இணையதளங்கள், பாப்-அப்கள் (Pop-ups) மற்றும் இணையப் பொறிகளைக் கண்டறியுங்கள்.
மோசடி செய்பவர்கள் உங்களின் வங்கிக் கணக்கு, சமூக ஊடகத் தளங்கள் அல்லது Dialog-இன் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையதளங்களை உருவாக்குகின்றனர். இதன் மூலம் உங்கள் உள்நுழைவு விபரங்கள் (Login credentials), தனிப்பட்ட தகவல்கள் அல்லது நிதி விபரங்களை உள்ளிடுமாறு உங்களை ஏமாற்றுகின்றனர்.
இணைய முகவரியில் (URL) எழுத்துப் பிழைகள் அல்லது கூடுதல் எழுத்துக்கள் உள்ளனவா என்பதை எப்போதும் இருமுறை சரிபார்க்கவும்.
இணையத்தில் தேடும்போது (Browsing), நீங்கள் ஒரு பரிசை வென்றுள்ளீர்கள் என்றோ, உங்கள் சாதனத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றோ அல்லது மென்பொருளைப் புதுப்பிக்க (Update) வேண்டும் என்றோ கூறும் பாப்-அப் விண்டோக்கள் அல்லது விளம்பரங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இவற்றை கிளிக் செய்வதன் மூலம் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (Malware) தானாகவே பதிவிறக்கம் செய்யப்படலாம் அல்லது நீங்கள் பிஷிங் (Phishing) தளங்களுக்கு திசைதிருப்பப்படலாம்.
Learn moreஒரு பார்வையில்
உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான டயலொக்கின் (Dialog) தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு சுருக்கம்.
மோசடி வகைகள்
மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் — ஒவ்வொரு முறையும் உங்களை எவ்வாறு குறிவைக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
SMS
Voice Calls
Data Networks
ஸ்மிஷிங் என்பது மோசடி செய்பவர்கள் உங்களின் வங்கி, சமூக ஊடகத் தளம், விநியோக நிறுவனம் அல்லது உங்கள் மொபைல் சேவை வழங்குநர் போன்ற நம்பகமான இடங்களிலிருந்து அனுப்புவது போல் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பும் ஒரு வகை மோசடியாகும். இந்தச் செய்திகள் பெரும்பாலும் உங்களை ஏமாற்றி உங்கள் தனிப்பட்ட விபரங்கள், நிதி விபரங்கள் அல்லது உள்நுழைவுத் தகவல்களைப் பெறுவதற்காக தீங்கிழைக்கும் இணைப்புகள் (Links) அல்லது தொலைபேசி எண்களைக் கொண்டிருக்கும்.
மோசடி செய்பவர்கள் இந்த முறையை இதற்காகப் பயன்படுத்துகின்றனர்
- உங்கள் வங்கி அல்லது கடன் அட்டை (Credit card) விபரங்களைத் திருட
- உங்கள் இணையக் கணக்குகளை அணுக
- உங்கள் தொலைபேசியில் தீங்கிழைக்கும் மென்பொருளை (Malware) பதிவிறக்கம் செய்ய உங்களைத் தூண்ட
பாதுகாப்பாக இருப்பது எப்படி
- அறியப்படாத அல்லது சந்தேகத்திற்கிடமான இடங்களிலிருந்து வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
- சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ள எண்ணைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்பு கொண்டு செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும்.
- சந்தேகத்திற்கிடமான செய்திகளை XXXX என்ற எண்ணிற்கு அனுப்புவதன் மூலம் Dialog நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தவும்.
- உங்கள் OTP அல்லது PIN இலக்கத்தை ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம் — அவர்கள் Dialog நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறினாலும் சரி.
எவற்றைக் கவனிக்க வேண்டும்
• அவசரப்படுத்துதல் அல்லது பயமுறுத்தும் தந்திரங்கள்
"மிக அவசரம்: உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது!" போன்ற செய்திகள்.
உணர்திறன் மிக்க தகவல்களுக்கான கோரிக்கைகள்
எந்தவொரு சட்டபூர்வமான நிறுவனமும் உங்கள் கடவுச்சொற்கள் (Passwords), PIN இலக்கங்கள், வங்கி விபரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை குறுஞ்செய்தி (SMS) மூலம் ஒருபோதும் கேட்காது.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகள்
(போலியானது: dilaog.lk vs உண்மையானது: dialog.lk) இணைய முகவரி (URL) முறையான அல்லது உத்தியோகபூர்வமான டொமைனில் (Domain) இருந்து வருகிறதா என்பதை எப்போதும் சரிபார்க்கவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சுருக்கப்பட்ட அல்லது எழுத்துப்பிழையுள்ள டொமைன்களைப் பயன்படுத்துகின்றனர்.
நம்பமுடியாத சலுகைகள்
“நீங்கள் 1 மில்லியன் ரூபாயை வென்றுள்ளீர்கள்!” அல்லது “உங்களுக்கு ஒரு பரிசுப் பெட்டி கிடைத்துள்ளது” போன்ற செய்திகள்.
விஷிங் அல்லது வாய்ஸ் பிஷிங் (Voice Phishing) என்பது மோசடி செய்பவர்கள் உங்களை தொலைபேசியில் அழைத்து, மதிப்பிற்குரிய அல்லது பிரபலமான நபர்கள், உங்கள் வங்கி, Dialog வாடிக்கையாளர் சேவை, அரசாங்க நிறுவனம் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களைப் போல நடித்து ஏமாற்றுவதாகும். உங்களின் ரகசியத் தகவல்களைப் பெறுவது அல்லது உங்களை ஒரு பணப்பரிமாற்றம் செய்யத் தூண்டுவதே இவர்களின் குறிக்கோள்.
மோசடி செய்பவர்கள் இந்த முறையை இதற்காகப் பயன்படுத்துகின்றனர்
- உங்கள் வங்கிக் கணக்கு அல்லது அட்டை விபரங்களைத் திருட
- உங்களை ஏமாற்றி OTP அல்லது PIN இலக்கங்களைப் பெற.
- உங்கள் சாதனத்தை தொலைவிலிருந்து அணுகும் (Remote access) வசதியைப் பெற.
- உங்களை வற்புறுத்தி eZ Cash அல்லது வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்ய வைக்க.
பாதுகாப்பாக இருப்பது எப்படி
- ஒரு அழைப்பு சந்தேகத்திற்கிடமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ இருந்தால், உடனடியாக அழைப்பைத் துண்டிக்கவும்.
- உங்களின் OTP, PIN அல்லது வங்கி விபரங்களை தொலைபேசி வாயிலாக யாருடனும் பகிர வேண்டாம்.
- அழைப்பாளரின் உண்மைத்தன்மையை Dialog அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தவும்.
- மோசடி அழைப்புகள் குறித்து XXXX என்ற எண்ணிற்கு அல்லது உங்களுக்கு அருகிலுள்ள Dialog சேவை மையத்திற்கு (Dialog Service Centre) தகவல் தெரிவிக்கவும்.
எவற்றைக் கவனிக்க வேண்டும்
உடனடியாகச் செயல்பட வேண்டும் எனக் கூறித் தேவையற்ற அழைப்புகள் வருதல்.
தொலைபேசி வாயிலாக தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களைக் கோருதல்.
பணப்பரிமாற்றங்கள், eZ Cash வைப்புக்கள் அல்லது OTP-களைப் பகிருமாறு வற்புறுத்துதல்.
விரைவாகச் செயல்படுமாறு அல்லது அழைப்பை ரகசியமாக வைத்திருக்குமாறு உங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அழைப்பாளர்கள்.
மோசடி செய்பவர்கள் செய்யக்கூடியவை
- உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது அல்லது சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று கூறலாம்.
- நீங்கள் ஒரு பரிசை வென்றுள்ளீர்கள் (உதாரணமாக: "Dialog மெகா வாசனா") என்றும், அதனைப் பெறுவதற்கு உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) விபரங்களை வழங்க வேண்டும் அல்லது ஒரு தொகையை வைப்பு (Deposit) செய்ய வேண்டும் என்றும் கூறலாம்.
- தொழில்நுட்ப உதவி வழங்குபவர்களைப் போல நடித்து, செயலிகளை (Apps) நிறுவுமாறு அல்லது உங்கள் தொலைபேசியை அணுக அனுமதி வழங்குமாறு கேட்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயலிகளின் (Apps) பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மோசடி செய்பவர்கள் தற்போது போலியான செயலிகள், தீங்கிழைக்கும் விளம்பரங்கள் அல்லது பிஷிங் (Phishing) இணையதளங்கள் மூலம் இணையம் வழியாக பயனர்களைக் குறிவைக்கின்றனர். இந்தத் தந்திரங்கள் உங்கள் சாதனத்தைப் பாதிக்கலாம், தரவுகளைத் திருடலாம் அல்லது உங்களுக்குத் தெரியாமலேயே மோசடியான சேவைகளுக்கு உங்களைச் சந்தாதாரராக மாற்றலாம்.
இந்த மோசடிகள் பின்வருவனவற்றைச் செய்யலாம்
- வங்கி, விநியோக சேவைகள் அல்லது Dialog செயலிகளைப் போலவே தோற்றமளிக்கும் போலிச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய உங்களைத் தூண்டுதல்.
- இணையத்தில் தேடும்போது பாப்-அப் விளம்பரங்கள் அல்லது திசைதிருப்பல்களைப் (Redirects) பயன்படுத்தி, தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவுதல் அல்லது உங்கள் அனுமதியின்றி சேவைகளுக்கு உங்களைச் சந்தாதாரராக மாற்றுதல்.
- உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போலவே இருக்கும் பிஷிங் தளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்கள் உள்நுழைவு விபரங்களைக் கோருதல்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி
- உத்தியோகபூர்வ செயலிக் கடைகளிலிருந்து (Google Play Store அல்லது Apple App Store) மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்
- தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதற்கு முன்பு இணைய முகவரிகளை (URLs) இருமுறை சரிபார்க்கவும்
- அச்சுறுத்தல்களைக் கண்டறிய வைரஸ் எதிர்ப்பு (Antivirus) அல்லது மொபைல் பாதுகாப்பு செயலிகளைப் பயன்படுத்தவும்
- இலவச டேட்டா (Data), பரிசுகள் அல்லது அவசர எச்சரிக்கைகளை வழங்கும் விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்
- உங்கள் தொலைபேசியின் இயங்குதளம் (Operating System) மற்றும் செயலிகளை எப்போதும் புதுப்பித்த நிலையில் (Updated) வைத்திருக்கவும்
எவற்றைக் கவனிக்க வேண்டு
உத்தியோகபூர்வமற்ற இடங்களிலிருந்து பெறப்படும் செயலிகள் (உதாரணமாக: SMS அல்லது லிங்க் மூலம் பகிரப்படும் APK கோப்புகள்).
வழக்கத்திற்கு மாறான எழுத்துப்பிழைகள் அல்லது விசித்திரமான லோகோக்களைக் கொண்ட போலி இணையதளங்கள்.
புதிய செயலியை நிறுவிய பின் தொலைபேசியின் வேகம் குறைதல் அல்லது செயல்திறன் பாதிப்படைதல் (இது தீங்கிழைக்கும் மென்பொருள் இருப்பதற்கான அறிகுறியாகும்).
உங்கள் செய்திகள், தொடர்புகள் (Contacts) அல்லது கோப்புகளை அணுகுவதற்கு அளவுக்கு அதிகமான அனுமதிகளைக் கோரும் எதிர்பாராத அறிவிப்புகள்.
Awaiting Content
නිතර අසන පැන
இது சந்தேகத்திற்குரிய அல்லது மோசடியான குறுஞ்செய்திகளை (SMS) அடையாளம் காண உதவும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். எமது கட்டமைப்பினால் இவ்வாறான குறுஞ்செய்திகள் கண்டறியப்படும்போது, அவை உங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே அவற்றின் ஆரம்பத்தில் ‘DIALOG WARNING: SPAM’ எனும் Label சேர்க்கப்படும்.
அதிகரித்து வரும் மோசடி மற்றும் ஏமாற்று குறுஞ்செய்திகளிலிருந்து (Scam and fraud messages) வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும், ஒரு குறுஞ்செய்தியைப் பெறும்போது அது குறித்த கூடுதல் விழிப்புணர்வை வழங்கவும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேவையற்ற குறுஞ்செய்திகள் (Spam) என எமது கட்டமைப்பினால் அடையாளம் காணப்படும் சில செய்திகளின் ஆரம்பத்தில், ‘DIALOG WARNING: SPAM’ எனும் லேபிளை நீங்கள் காண்பீர்கள்.
இல்லை. பொதுவாக மோசடிகளுடன் தொடர்புடைய வடிவங்களைக் (Patterns) எமது கட்டமைப்பு கண்டறியும் போது மட்டுமே இந்த லேபிள் இடப்படுகிறது. இவ்வாறான செய்திகளைக் கையாளும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உதவுவதே இதன் நோக்கமாகும்.
இல்லை. இந்த அம்சம் சாதாரண SMS-களுக்கு மட்டுமே பொருந்தும்; இது ஏனைய மெசேஜிங் செயலிகளில் (Messaging apps) எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் முறை, சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் (Links) அல்லது ஏற்கனவே கண்டறியப்பட்ட மோசடி செய்திகளுடன் ஒத்திருத்தல் போன்ற பொதுவான தேவையற்ற செய்தி (Spam) வடிவங்களுடன் ஒரு செய்தி பொருந்தினால், அது இவ்வாறு அடையாளப்படுத்தப்படலாம். சில சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் அல்லது மொத்தமாக (Bulk messages) அனுப்பப்படும் செய்திகளும் இவ்வாறு குறிக்கப்படலாம்.
இல்லை. குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் முறை, செய்தியின் தன்மைகள், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் (Links) மற்றும் மொத்தமாக செய்திகளை அனுப்பும் நடவடிக்கைகள் (Bulk messaging) போன்ற வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் இந்த தானியங்கி கட்டமைப்பு (Automatic system) தேவையற்ற செய்திகளைக் கண்டறிகிறது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை (Privacy) எப்போதும் பாதுகாக்கப்படுகிறது, மேலும் குறுஞ்செய்தியின் உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.
பொதுவான அடையாளங்கள் பின்வருமாறு:
- அவசரமான அல்லது அச்சுறுத்தும் வகையிலான மொழிப்பிரயோகம்
- கடவுச்சொற்கள் (Passwords), OTP இலக்கங்கள் அல்லது தனிப்பட்ட விபரங்களுக்கான கோரிக்கைகள்
- றியப்படாத அல்லது சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் (Links)
- நம்ப முடியாத அளவிலான கவர்ச்சிகரமான சலுகைகள்
பொதுவாக மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வடிவங்களை (Patterns) அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டமைப்பு செய்திகளைக் கண்டறிகிறது. எனவே, சில செய்திகள் குறிப்பிட்ட கண்டறிதல் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாதபோது, அவை அடையாளப்படுத்தப்படாமல் (Not tagged) போகலாம். சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் செய்தி உங்களுக்குக் கிடைத்தால், தயவுசெய்து எச்சரிக்கையுடன் செயல்படுவதுடன்.
- பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளை (Links) அழுத்த வேண்டாம்.
- தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.
- இங்கே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம், அந்தச் செய்தியை மீளாய்வுக்காக அறிக்கையிடவும்.
- மேலதிக வழிகாட்டல்களுக்கு 0777 678 678 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.
தேவையற்ற செய்திகளுடன் (Spam) பொதுவாகத் தொடர்புடைய வடிவங்களை எமது கட்டமைப்பு கண்டறியும் போது மட்டுமே இந்த லேபிள் இடப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், உண்மையான செய்திகள் அந்த வடிவங்களுடன் ஒத்துப்போகும் பட்சத்தில், அவையும் இவ்வாறு அடையாளப்படுத்தப்படலாம் (Flagged). குறிப்பிட்ட அந்த குறுஞ்செய்தி (SMS) தவறுதலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால், இங்கே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் அதனை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கலாம்.
அறிக்கையிடும் போது, தயவுசெய்து கருத்துப் பகுதியில் (Remarks section) 'Falsely tagged' என்பதை உள்ளடக்கி குறிப்பிடவும்.
அறிக்கையிடப்பட்ட செய்திகள் புதிய மோசடி வடிவங்களை (Scam patterns) அடையாளம் காணவும், கண்டறியும் துல்லியத்தை (Detection accuracy) அதிகரிக்கவும் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தவும் பகுப்பாய்வு (Analysed) செய்யப்படுகின்றன.
ஆம். சாதாரண குறுஞ்செய்தி பரிமாற்றங்களுக்கு (Regular messaging) இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும், தேவையற்ற செய்திகளைப் போன்ற (Spam-like) ் வடிவங்களில் கண்டறியப்பட்டால் அவை அடையாளப்படுத்தப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம்.
நீங்கள் மொத்தமாக செய்திகளை (Bulk messages) வணிக தேவைகளுக்காக அனுப்புபவர் எனில், அவை தடையின்றி சென்றடைவதை உறுதிப்படுத்தவும், தேவையற்ற செய்திகளாக அடையாளப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், அங்கீகரிக்கப்பட்ட வணிக ரீதியான SMS சேவைகளைப் (Commercial SMS services) பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். எமது Enterprise / SME தீர்வுகளைப் பற்றி அறிய, https://business.dialog.lk/products-services/toolsapps/e-sms/ எனும் இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஆம். உள்நாட்டு மற்றும் சர்வதேச எண்கள் உட்பட, மறைக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்ட (Masked sender IDs) எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகளையும் இந்த கட்டமைப்பு ஆய்வு செய்யும்.
இல்லை. மோசடி மற்றும் ஏமாற்று குறுஞ்செய்திகளிலிருந்து (Scam and fraud messages) வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்த அம்சம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இல்லை, அனைத்து வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது, எனவே இதனைச் நிறுத்தி வைக்க முடியாது.
இல்லை. நீங்கள் ஒரு Dialog இலக்கத்தைப் பயன்படுத்துபவர் எனில், இந்த பாதுகாப்பு அம்சம் தானாகவே (By default) செயற்படுத்தப்பட்டிருக்கும். இதற்கு நீங்கள் மேலதிகமாக எதனையும் செய்ய வேண்டியதில்லை – எவ்வித செயலியையும் (App) தரவிறக்கம் செய்யத் தேவையில்லை என்பதுடன் மேலதிக கட்டணங்களும் கிடையாது.
ஆம். குறுஞ்செய்தி (SMS) வசதி கொண்ட எந்தவொரு அலைபேசியிலும் இந்த பாதுகாப்பு அம்சம் செயற்படும்.