பொருள் விரிவாக்கம்

டயலொக், புதிய Power Plan உடன் இணையற்ற பல நன்மைகளை வழங்குகிறது

முன்னுரிமை வழங்கும் Network அணுகல், Smartphone சலுகைகள், Lionsgate Play மற்றும் ViU+ இற்கான இலவச subscription மற்றும் Family Plans உடன் கூடிய பல நன்மைகள்

2025 ஜூன் 20         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் நம்பர் 1 தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது ‘Power Plan’ Mobile Postpaid திட்டங்களை மேலும் பல நன்மைகளுடன் Upgrade செய்துள்ளது. டயலொக் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட இந்த புதிய Power Plans மூலம், வாடிக்கையாளர்களுக்கு இப்போது பல விசேட நன்மைகள் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பின்கட்டண அனுபவத்தை வழங்கும் இந்த புதிய Power Plans மூலம் வலையமைப்பை அணுகும்போது அதிகபட்ச முன்னுரிமை கிடைக்கும், மேலும் Smartphone திட்ட சலுகைகளும் கிடைக்கும். அத்துடன், Lionsgate Play மற்றும் ViU+ மூலம் உங்களுக்குப் பிடித்தமான TV நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான கட்டணமில்லா subscription, மற்றும் 5 இணைப்புகள் வரை Family Plan நன்மையும் இந்த திட்டங்களில் கிடைக்கின்றன. இவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மற்றுமொரு நன்மை, Friends’ Circle அம்சமாகும். இதன் மூலம், மூன்று நண்பர்களைக் கொண்ட Friends’ Circle ஐ உருவாக்கி, டயலொக்கில் இருந்து, மாதாந்த கட்டணத்தில் வாழ்நாள் முழுவதும் தள்ளுபடியைப் பெறலாம்.

இதுதவிர, மாதத்தில் மீதமுள்ள டேட்டாவை அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லக்கூடிய Data Rollover வசதியும் Power Plans உடன் கிடைக்கும் .மேலும், வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் வழங்கப்படும் Data Sharing வசதியின் மூலம், அன்புக்குரியவர்களுடன் டேட்டாவைப் பகிர்ந்துகொள்ளும் திறனும் கிடைக்கிறது.

டயலொக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய Power Plans மூலம், மாதத்திற்கு ரூ. 1,300 (+tax) இல் இருந்து ஆரம்பிக்கும் மூன்று திட்டங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டா தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்யலாம். வலையமைப்பை அணுகும்போது அதிகபட்ச முன்னுரிமை கிடைக்கும். இந்த மூன்று திட்டங்களிலும், எந்தவொரு வலையமைப்பிற்கும் unlimited Calls மற்றும் 1,000 SMS கிடைக்கும். வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கிற்கும், இணைய இணைப்புடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும் போதுமான டேட்டா இந்த திட்டங்களில் அடங்கும்.

வாடிக்கையாளர்கள் dialog.lk இணையதளத்திற்குச் சென்று, ஒரு புதிய இணைப்பை எளிதாகப் பெறலாம் அல்லது MyDialog App மூலம் தங்கள் திட்டங்களை இந்த புதிய Power Plans இற்கு Upgrade செய்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, https://www.dialog.lk/mobile/postpaid ஐப் பார்வையிடவும்.