இலங்கையின் முதலாவது 5G-வலுவூட்டப்பட்ட அதிவேக Wi-Fi தீர்வான Air Fibre ஐ டயலொக் அறிமுகப்படுத்துகிறது
இப்போது www.dialog.lk மூலம் Pre-order செய்து கொள்ளலாம்
24 May, 2026 Colombo

இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அடுத்த தலைமுறை டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 5G தொழில்நுட்பத்தினால் இயங்கும் 'Dialog Air Fibre' இன் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இந்த அதிநவீன கண்டுபிடிப்பானது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் டயலொக் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
Dialog Air Fibre என்பது இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடி Wi-Fi தொழில்நுட்பமாகும். இது எந்தவொரு கேபிள்களும் (Physical cables) தேவையின்றி, அதிவேக இணையத்தை வழங்குவதற்காக டயலொக்கின் மேம்பட்ட 5G நெட்வொர்க்கில் இயங்குகிறது. நவீன வாழ்க்கை முறைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சேவை, ஒரு சிறிய Indoor Device Unit - IDU மூலம் எளிதான Plug-and-play அனுபவத்தை வழங்குவதுடன், எவ்வித சிரமமுமின்றி உடனடி இணைப்பை சாத்தியமாக்குகிறது.
வழக்கமான 4G அனுபவங்களுடன் ஒப்பிடுகையில், கணிசமாக மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் கூடிய அதிவேக Wi-Fi இணைப்பை Dialog Air Fibre வழங்குகிறது. மின்சாரத் தடைகளின் போதும் தடையற்ற இணைப்பை உறுதி செய்யும் வகையில், இதில் 6 மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து இயங்கக்கூடிய built-in battery வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், வேகத்தில் எந்தவொரு குறைவும் இன்றி ஒரே நேரத்தில் பல சாதனங்களை (multiple devices) இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 4G ஐ விட மிகக் குறைந்த தாமதத்தைக் (low latency) கொண்டிருப்பதால் தடையற்ற streaming, video conferencing, ஆன்லைன் கேமிங் மற்றும் remote working அனுபவங்களை உறுதி செய்கிறது.
பாரம்பரிய இணைய இணைப்புகளுக்கு அப்பால், அதிவேக இணையம், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை முறைச் சேவைகளை ஒரே தீர்வாக (single solution) Air Fibre வழங்குகிறது. Dialog Play ஊடாக 104 TV channels, இலவச உள்ளடக்கங்கள் மற்றும் கவர்ச்சிகரமான entertainment subscriptions ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான தொகுப்பாக (bundled package) இது அறிமுகமாகிறது. இது முழு வீட்டிற்கும் ஒரு தடையற்ற (seamless) மற்றும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதுடன், இலங்கையின் வீட்டுப் பொழுதுபோக்கின் அடுத்த கட்ட பரிணாமத்தை (next evolution) பிரதிபலிக்கிறது.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும தலைமை செயல்பாட்டு அதிகாரி (Group Chief Operating Officer) லிம் லி சான் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் உள்ள மக்கள் உயர்தர இணைய இணைப்பை எளிதாக அணுகுவதை சாத்தியமாக்குவதில் Dialog Air Fibre ஒரு முக்கிய மைல்கல்லாகும். புதுமையையும் நடைமுறைத் தன்மையையும் ஒன்றிணைப்பதன் மூலம், பாரம்பரிய தடைகள் ஏதுமின்றி, ஒரு வசதியான plug-and-play Wi-Fi தீர்வு (solution) மூலம் வாடிக்கையாளர்கள் நம்பகமான, அதிவேக 5G broadband-ஐ அனுபவிக்க நாங்கள் வழிவகை செய்கிறோம். இந்த அறிமுகமானது, எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதிலும், தனிநபர்கள், வீடுகள் மற்றும் வணிகங்களின் மாறிவரும் தேவைகளை ஆதரிக்கும் உள்ளடக்கிய (inclusive) டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதிலும் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
இந்த அறிமுகத்தை முன்னிட்டு, Dialog Air Fibre ஐ முன்கூட்டியே பதிவு செய்யும் (Pre-order) வாடிக்கையாளர்கள் ஆரம்ப இணைப்புச் கட்டணத்தில் ரூ. 2,500 தள்ளுபடி உள்ளிட்ட பிரத்யேக நன்மைகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் dialog.lk என்ற இணையதளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள ஏதேனும் ஒரு Dialog Experience Centre செல்வதன் மூலம் தங்களது முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
Air Fibre இன் அறிமுகத்தின் மூலம், Wi-Fi அனுபவங்களை மறுவரையறை செய்வதிலும், இலங்கையிலுள்ள நவீன வீடுகளின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நெகிழ்வான, உயர் செயல்திறன் கொண்ட இணையத் தீர்வுகள் மூலம் வாடிக்கையாளர்களை வலுவூட்டுவதிலும் டயலொக் தனது முன்னோடித் தலைமைத்துவத்தை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது.