பொருள் விரிவாக்கம்

டயலொக் அனைத்து இலங்கையர்களுக்குமான நாட்டின் முதல் Smartphone Plan ஐ அறிமுகப்படுத்துகிறது

2024 மார்ச் 28         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அனைத்து இலங்கையர்களும் மலிவான மற்றும் வசதியான முறையில் அதிநவீன Android Smartphone ஐ கொள்வனவு செய்வதற்கேற்ற தீர்வாக நாட்டின் முதல் Smartphone Plan களை அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதுமையான Plan மூலம், தற்போது Smartphone இன் மதிப்பில் 40% மட்டுமே முன்பணமாக செலுத்தி புதிய Android Smartphone ஒன்றை கொள்வனவு செய்து மிகுதியை 24 மாதங்களில் மாதாந்த தவணை அடிப்படையில் Dialog Power Plan பிற்கொடுப்பனவு மொபைல் பில்லுடன் இணைத்து செலுத்த முடியும்.

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் இப்போது தமது தற்போதைய மொபைல் இலக்கத்தை மாற்றாது தக்கவைத்தவாறு பிற்கொடுப்பனவு Power Plan இற்கு upgrade செய்து இந்த Plan இன் அனுகூலங்களை அனுபவித்திட முடியும். மேலும், Lesi Pay ஊடாகவும் இந்த Plan கிடைக்கப்பெறுகிறது. இது நல்ல கடன் மதிப்பீடு கொண்ட முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான கட்டண தெரிவுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்க வழிவகுக்கிறது.

மேலும், இந்த முன்னெடுப்பானது வாடிக்கையாளர்களுக்கு தமக்கு விருப்பமான ஸ்மார்ட்ஃபோனைத் தெரிவு செய்ய உதவுகின்றது, அவர்களுக்கான Power Plan மாதாந்த பில், சாதனத் தவணைகள் மற்றும் மாதாந்த Power Plan கட்டணங்கள் ரூ.3,298/- இலிருந்து தொடங்கும். இந்த செயல்முறையானது தடையற்றது என்பதுடன், வாடிக்கையாளர்கள் எந்தவொரு Dialog Experience Centre க்கும் சென்று புதிய அன்ட்ரொய்ட் சாதனத்தை (Android device) சொந்தமாக்கிட வழி அமைக்கின்றது.

டயலொக் அறிமுகப்படுத்தும் இந்த முன்னெடுப்பானது, நவீன தொழில்நுட்பத்தை அணுகுவதை எளிதாக்குவதோடு மட்டுமின்றி, டிஜிட்டல் உள்ளிணைக்கையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. முன்னணி சாதனங்களுக்கான அணுகல்தன்மையை இலகுவாக்குவதன் மூலம், டயலொக் நாடு முழுவதும் இலங்கையர்களுக்கு வலுவூட்டுவதுடன், அவர்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும், தகவல்கள் அறிந்தவர்களாக இருக்கவும் உதவுகிறது. இந்த முன்னெடுப்பு, டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டுவரவும், அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் டயலொக் கொண்டிருக்கும் கடப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

https://dialog.lk/mobile/postpaid/power-plans#device-contract-plan ஐ பார்வையிடுவதன் மூலம் மேலதிக விபரங்களை பெறலாம்.