பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆதரவுடன் 91ஆவது Battle of the Saints ஏப்ரல் 3, 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் நடைபெறும்

2025 மார்ச் 26         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

டயலொக் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிராண்ட் மற்றும் ஊடக துணைத் தலைவர் ஹர்ஷ சமரநாயக்க புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் Rev. Fr. ரஞ்சித் ஆண்ட்ராடி (இடது) மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் Rev. Fr. ரோஹித ரோட்ரிகோ (வலது) ஆகியோரிடம் காசோலையை வழங்குகிறார்.
புகைப்பட விளக்கம் : Rev. Fr. சமேஷ் அந்தோனி, விளையாட்டுப் பொறுப்பாளர், புனித ஜோசப் கல்லூரி ,திரு. டெரன்ஸ் பெர்னாண்டோ, புனித ஜோசப் கல்லூரி - கூட்டு ஒழுங்கமைப்புக் குழுவின் இணைத் தலைவர், Rev. Fr. ரஞ்சித் ஆண்ட்ராடி, அதிபர், புனித ஜோசப் கல்லூரி , திரு. ஹர்ஷ சமரநாயக்க, துணைத் தலைவர் - பிராண்ட் மற்றும் ஊடகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , Rev. Fr. ரோஹித ரோட்ரிகோ, அதிபர், புனித பீட்டர்ஸ் கல்லூரி - புனித பீட்டர்ஸ் கல்லூரியின் தலைவர்கள், திரு. மைக்கேல் எலியாஸ், புனித பீட்டர்ஸ் கல்லூரி - கூட்டு ஒழுங்கமைப்புக் குழுவின் இணைத் தலைவர் , Rev. Fr. பிரவீன் விஜேசகேரா - விளையாட்டு ஒருங்கிணைப்பாளர், புனித பீட்டர்ஸ் கல்லூரி ,மாஸ்ட். ஓவீன் சல்காடோ - புனித பீட்டர்ஸ் கல்லூரியின் கேப்டன்.

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநராகிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களை ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்தும் வலுப்படுத்தி, கொழும்பின் பிரபல கத்தோலிக்க பாடசாலைகள் ஆகிய செயிண்ட் ஜோசப் மகா வித்தியாலயம் மற்றும் செயிண்ட் பீட்டர் கல்லூரி இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க 91ஆவது “Battle of the Saints” கிரிக்கெட் போட்டிக்கு இம்முறையும் ஆதரவளிக்கிறது. “ ஏப்ரல் 3, 4, மற்றும் 5 ஆம் திகதிகளில் SSC மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த மாபெரும் போட்டியில், Rev. Fr.Maurice J. Le Goc கோப்பை வெல்லும் கனவுடன் இருவரும் மோதுகின்றனர். மேலும், ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெறும் 51ஆவது Joe-Pete ஒருநாள் கிரிக்கெட் மோதல் Rev. Fr. Peter A. Pillai கோப்பைக்காக நடைபெறவுள்ளது. செயின்ட் ஜோசப் கல்லூரி மாஸ்டர் கெனத் லியனகே தலைமையிலான அணியும், செயின்ட் பீட்டர் கல்லூரி மாஸ்டர் ஓவீன் சல்கடோ தலைமையிலான அணியும் களமிறங்க உள்ளன.

இந்த தொடர் வரலாற்றில் செயின்ட் ஜோசப் கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. அவர்கள் 2008ஆம் ஆண்டு ருவந்த பெர்னாண்டோபுல்லே தலைமையில் கடைசி முறையாக வெற்றி கண்டனர். அதே சமயம், செயின்ட் பீட்டர் கல்லூரி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது, 2016 ஆம் ஆண்டு வினு மொஹொட்டி தலைமையில் கடைசியாக வென்றனர். 67 போட்டிகள் சமநிலையாக முடிந்துள்ளன, இந்த Rev. Fr.Maurice J. Le Goc கோப்பை கடுமையான போட்டி மனப்பான்மையை எடுத்துக்காட்டுகின்றது. 2024இல் இரு நாட்கள் கொண்ட போட்டியாக நடந்த 91ஆவது போட்டி சமநிலையில் முடிந்தது.

இதற்கு அப்பாற்பட்ட, ஏப்ரல் 26, 2024 அன்று Rev. Fr. Peter A. Pillai நினைவு கோப்பைக்கான Joe-Pete ஒருநாள் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருநாள் போட்டிகளில் செயின்ட் ஜோசப் கல்லூரி 25 வெற்றிகளையும், செயின்ட் பீட்டர் கல்லூரி 22 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 2 போட்டிகள் முடிவின்றி முடிந்துள்ளன, மேலும் 1 போட்டி சமனிலையாக முடிந்தது. கடந்த ஆண்டு, செயின்ட் பீட்டர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை மீண்டும் கைப்பற்றியது.

இரண்டு பள்ளிகளுமே இலங்கை தேசிய அணியில் விளையாடிய பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளன. செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மேத்யூஸ், சமிண்ட வாஸ், துனித் வெல்லாலகே, ஷெவோன் டேனியல், திசர பெரேரா, ஆஷ்லே டி சில்வா, மைக்கேல் வான் டோர்ட், ரொஷென் சில்வா, பிரியமல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்கிரம ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடியவர்கள். அதேபோல், செயின்ட் பீட்டர் கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் ராய் டயஸ், ருமேஷ் ரத்நாயக்க, வினோதன் ஜான், அமல் சில்வா, ரசல் ஆர்னால்ட், கௌசல் லொகுவாரச்சி, மலிந்த வர்ணபுர, ஏஞ்சலோ பெரேரா, ஜனித் லியனகே மற்றும் துஷன் ஹேமந்த ஆகியோர் இலங்கை அணிக்காக விளையாடிய பெருமை வாய்ந்தவர்கள்.

"இலங்கையின் விளையாட்டு பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக Big Match சீசன் உள்ளது, மேலும் நமது தேசத்தைப் பிரதிநிதித்துவக்கும் எதிர்கால சாம்பியன்களை வளர்க்கும் இந்த முக்கியமான கிரிக்கெட் காட்சிக்கு எங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிராண்ட் மற்றும் ஊடக துணைத் தலைவர் ஹர்ஷ சமரநாயக்க கூறினார். மேலும் "ஒரு பரபரப்பான கிரிக்கெட் போட்டிக்காக இரு அணிகள் மற்றும் வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

போட்டியின் நேரடி ஒளிபரப்பை ThePapare TV – சேனல் 126 (Dialog Television), ThePapare.com, மற்றும் Dialog ViU App ஆகியவற்றின் ஊடாக காணலாம். இந்த சீசனில் 40க்கு மேற்பட்ட பள்ளிகள் கவர்ச்சிகரமான கிரிக்கெட் நிகழ்வுகளுக்குத் தங்களை இணைத்துக்கொள்கின்றன. இலங்கையின் மிக முன்னோடியான 5G Ready தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் இந்த போட்டிகளை மகிழ்ச்சியுடன் ரசிக்க டயலொக் ஆசிஆட்டா அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

டயலொக் ஆசிஆட்டா தேசிய கிரிக்கெட், கைப்பந்து, கரப்பந்தாட்டம் வலைப்பந்தாட்டம், மற்றும் Esports அணிகளின் பெருமைமிக்க ஆதரவாளர் ஆகும். தேசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் Sri Lanka Golf Open, மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கிய ஆதரவாளராகவும் டயலொக் உள்ளது, மேலும் உலக பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை அணியையும் ஆதரிக்கிறது. மேலும், நாளைய சாம்பியன்களை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, நிறுவனம் தொடர்ந்து President’s Gold Cup Volleyball, National Junior and Senior Netball Tournaments, மற்றும் பள்ளி ரக்பி ஆகியவற்றுக்கு வலுவூட்டுகிறது.