பொருள் விரிவாக்கம்

டயலொக் மீண்டும் பாடசாலை ரக்பிக்கு ஆதரவு – 2025 Season தயாராகிறது!

2025 அப்ரேல் 24         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

புகைப்படம் - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்கள் பாடசாலை ரக்பி சங்கத்தின் தலைவர் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்க அவர்களிடம் அனுசரணைக்கான காசோலையை கையளித்த சந்தர்ப்பம். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தக மற்றும் ஊடக உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க (இடமிருந்து இரண்டாவது), பாடசாலை ரக்பி சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொருளாளர் சானக்க தனஞ்ஜய மற்றும் செயலாளர் மனுஜ நிம்மன மற்றும் அனைத்து போட்டிகளினதும் செயலாளர் நிரோத விஜேராம ஆகியோரும் புகைப்படத்தில் உள்ளனர்.

இலங்கையின் முதன்மையான இணைப்பு வழங்குனரும் விளையாட்டுத்துறையின் சிறந்த ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2025 ஆம் ஆண்டுக்கான டயலொக் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை ரக்பி பருவத்துக்காக இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சங்கத்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளது.

கடந்த வருடங்களைப் போலன்றி, பாடசாலை ரக்பி season League சுற்றுப்போட்டியுடன் ஆரம்பித்து பின்னர் Knock-Out சுற்றுப்போட்டியுடன் நிறைவடைந்தது. ஆனால் இந்த வருடம், ஏப்ரல் 25, 2025 இல் ஆரம்பமாகும் மதிப்புமிக்க ஜனாதிபதி கிண்ணத்துக்காக பதினாறு முன்னணி பாடசாலைகள் போட்டியிடவுள்ளன. இதனைத் தொடர்ந்து League சுற்றுப்போட்டி நடைபெறும். இதில் 90 பாடசாலைகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் மதிப்புமிக்க டயலொக் பாடசாலைகள் ரக்பி League 2025 பட்டத்துக்காக போட்டியிடுவார்கள்.

இந்த வருடத்துக்கான நாக்-அவுட் சுற்றுப்போட்டியில் இலங்கையின் சிறந்த பாடசாலை ரக்பி திறமையாளர்கள் இடம்பெறுவார்கள். போட்டிகள் கொழும்பில் உள்ள பல மைதானங்களில் நடைபெறும்.

போட்டிகள் ஏப்ரல் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றன. வெஸ்லி கல்லூரி ரோயல் கல்லூரி மைதானத்தில் புனித ஜோசப் கல்லூரியை எதிர்கொள்ளும், அதே நேரத்தில் தர்மராஜா கல்லூரி CR&FC மைதானத்தில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை எதிர்கொள்ளும். இரண்டு போட்டிகளும் மாலை 4:15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

ஏப்ரல் 26 ஆம் திகதி, பார்வையாளர்கள் நான்கு பரபரப்பான போட்டிகளை எதிர்பார்க்கலாம். அன்று CR&FC மைதானத்தில் எஸ். தோமஸ் கல்லூரி விஞ்ஞானக் கல்லூரியை பிற்பகல் 3:30 மணிக்கு எதிர்கொள்ளும், அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு டிரினிட்டி கல்லூரி புனித அந்தோனியார் கல்லூரியுடன் மோதும். மேலும் ஸாஹிரா கல்லூரி ஹவ்லாக் மைதானத்தில் வித்தியார்த்த கல்லூரியை எதிர்கொள்ளும், அதே நேரத்தில் ஸ்ரீ சுமங்கல கல்லூரி ரோயல் கல்லூரி மைதானத்தில் நடப்பு சம்பியனான இசிபத்தான கல்லூரியை எதிர்கொள்ளும். இந்த இரண்டு போட்டிகளும் மாலை 4:15 மணிக்கு ஒரே நேரத்தில் ஆரம்பமாகவுள்ளன.

போட்டித் தொடரின் ஆரம்ப வார இறுதி ஏப்ரல் 27 ஆம் திகதி புனித பேதுரு கல்லூரி ரோயல் கல்லூரி மைதானத்தில் தர்ஸ்டன் கல்லூரியை எதிர்கொள்வதுடனும், ரோயல் கல்லூரி CR&FC மைதானத்தில் கிங்ஸ்வுட் கல்லூரியை எதிர்கொள்வதுடனும் நிறைவடைகிறது. இந்த இரண்டு போட்டிகளும் மாலை 4:15 மணிக்கு நடைபெறவுள்ளன.

கால் இறுதிப் போட்டிகள் மே 3 மற்றும் 4 ஆம் திகதிகளிலும், அரை இறுதிப் போட்டிகள் மே 9 மற்றும் 11 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன. போட்டித் தொடரின் இறுதிப் போட்டி மே 18 ஆம் திகதி சுகததாச மைதானத்தில் நடைபெறும், அங்கு புதிய சம்பியன் முடிசூட்டப்படுவார்.

பிரதான அனுசரணையாளராக, டயலொக் தொலைக்காட்சி தனது ThePapare TV (Channel 63 & 63) மற்றும் ThePapare TV HD (Channel 126 & 127) ஊடாக போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பார்வையாளர்கள் Dialog ViU மற்றும் ThePapare.com ஊடாகவும் போட்டிகளை பார்த்து மகிழலாம். இதன் மூலம் இலங்கை முழுவதும் உள்ள மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ரக்பி ரசிகர்கள் தடையின்றி மற்றும் முழுமையான ஒளிபரப்பை கண்டு களிக்க முடியும்.

எதிர்காலச் சாம்பியன்களை உருவாக்குவதில் எமது நிலையான அர்ப்பணிப்புக்கு ஏற்ப, பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றான பாடசாலைகள் ரக்பி பருவம் 2025 உடன் கூட்டாக இணைந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழு பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவித்தார். "2025 ஆம் ஆண்டுக்கான பருவகாலத்திற்கு இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கம் மற்றும் பங்குபற்றும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

" League மற்றும் Knock-Out போட்டிகளுக்கு பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் டயலொக் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இந்தத் தொடர் தேசிய மட்டத்தில் ரக்பியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் மாணவர் விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. இந்த ஆண்டு போட்டிகள் சிறந்த விளையாட்டு உணர்வுடன் விளையாடப்பட்டு, போட்டியின் மூலம் வெளிப்படும் சிறந்த விளையாட்டுத்திறன் கொண்ட தருணங்களுக்காக நினைவுகூரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். டயலொக் பாடசாலைகள் ரக்பி பருவம் 2025 இல் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் எமது நல்வாழ்த்துக்கள். " என இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சங்கத்தின் (SLSRFA) தலைவர் கமல் அரியசிங்க தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா , இலங்கையின் தேசிய கிரிக்கெட், வாலிபால், நெட்பால், மற்றும் esports அணிகளுக்கு அனுசரணை வழங்குவதில் பெருமை கொள்கிறது. அதேசமயம், Sri Lanka Golf Open-இன் பிரதான அனுசரணையாளராகவும் செயல்படுகிறது.பாராலிம்பிக் விளையாட்டுகளை உறுதியாக ஆதரித்து, தேசிய பாரா விளையாட்டு போட்டிகள் (National Para Games) மற்றும் உலக பாராலிம்பிக் போட்டிக்கான இலங்கை அணிக்கு ஆதரவளிக்கிறது.எதிர்கால சாம்பியன்களை உருவாக்கும் தங்கள் விடாப்பிடிப் பணிக்குப் பொருத்தமாக, President’s Gold Cup Volleyball Tournament, National Junior & Senior Netball Tournaments, மற்றும் Schools Rugby ஆகியவற்றிற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.