1,000 5G Sites-களைக் கடந்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சாதனை; நாடு தழுவிய 5G கவரேஜ் மேலும் வலுப்பெறுகிறது
2026 ஏப்ரல் 30 கொழும்பு
இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்கியான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது 5G வலையமைப்பில் நேரடி Sites-களின் எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நாடு தழுவிய ரீதியில் அடுத்த தலைமுறை மொபைல் இணைப்புகளை விரைவாக விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நிர்ணயித்த 2026-ஆம் ஆண்டுக்கான இலக்குகளை, காலக்கெடுவுக்கு முன்னரே எட்டியுள்ளமை டயலொக் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கும் எதிர்கால இலக்குகளுக்கும் வலுசேர்க்கும் வகையில், 'Dialog 5G Ultra' நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் 5G வலையமைப்பு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 220-க்கும் மேற்பட்ட Sites மூலம் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 5G சேவையை வணிக ரீதியாக அறிமுகப்படுத்திய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தற்போது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தனது வலையமைப்பை துரிதமாக விரிவுபடுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான விரிவாக்கமானது, தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மிகவும் ஆழமாகப் பங்களிக்க உதவும் நம்பகமான மற்றும் அதிவேக இணைப்பிற்கான அடித்தளத்தை பலப்படுத்துகிறது.
இந்த மைல்கல் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி-இன் பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 1,000 5G Sites-களைக் கடந்துள்ளமையானது இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும் எனத் தெரிவித்தார். வலையமைப்பை விரிவுபடுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல், சமூகங்கள் மற்றும் தொழில்துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதுமே டயலொக்கின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் முதன்முதலில் வணிக ரீதியான 5G சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம் என்ற வகையில், 2G, 3G மற்றும் 4G தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்திய தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்து, மொபைல் இணைப்புத்துறையில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தொடர்ந்தும் தலைமை வகிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீட்டின் மூலம், 'Dialog 5G Ultra' நுகர்வோர் அனுபவங்களை மேம்படுத்துவது முதல் நிறுவனங்களின் புத்தாக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 5G கவரேஜ் உள்ள பகுதிகளில் 'Dialog 5G Ultra' மூலம் மேம்பட்ட வேகம் மற்றும் அடுத்த தலைமுறை செயல்திறனை அனுபவிக்க முடியும். 5G தொழில்நுட்பத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளும் வகையில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நாட்டின் மிகவும் மலிவான 5G ஸ்மார்ட்போனான 'Dialog A76 5G' ஐ ரூ. 35,999/- எனும் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் இலகு தவணை முறையிலான கொடுப்பனவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
"The Future. Today." எனும் தனது வர்த்தக நாம வாக்குறுதிக்கு அமைய, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நாடு முழுவதும் மேம்பட்ட இணைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் நிலப்பரப்பை வடிவமைப்பதிலும், நீண்டகால புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் தொடர்ந்து முன்னின்று உழைக்கிறது. மேலதிக தகவல்களுக்கு www.dialog.lk/5g என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.