பொருள் விரிவாக்கம்

Dialog e-Load Super Blast நிறைவு: மூன்றாவது SUV வெற்றியாளர் கௌரவிப்பு!

நாடெங்கிலும் உள்ள 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ரூ. 150 மில்லியன் பெறுமதியான பரிசுகள் வழங்கி வைப்பு

2026 ஜனவரி 28         கொழும்பு

 

1வது Toyota Raize SUV வெற்றியாளர் திரு. L. லசந்த கெலும் மற்றும் அவரது குடும்பத்தினர்; 3வது Toyota Raize SUV வெற்றியாளர் திரு. D.L.J.R.K தொடம்கொட மற்றும் அவரது குடும்பத்தினர்; 2வது Toyota Raize SUV வெற்றியாளர் திரு. S. M. R. P. B. சகலசூரிய மற்றும் அவரது குடும்பத்தினர்.

இலங்கையின் #1 இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது முக்கியமான மைல்கல் சாதனையாகக் கருதப்படும் Dialog e-Load Super Blast வெகுமதிப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. டிஜிட்டல் ரீலோட் மற்றும் பணமில்லா (Cashless) பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் ஊடாக, மொத்தமாக ரூ.150 மில்லியன் பெறுமதியான பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பிரச்சாரத்தின் நிறைவாக, மூன்றாவது மற்றும் இறுதி Toyota Raize SUV சொகுசு வாகனம், அதிர்ஷ்டசாலி வெற்றியாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இறுதிப் பரிசு வழங்கும் நிகழ்வானது 2026 ஜனவரி 25 அன்று டயலொக் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த மைல்கல் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் மூன்று Toyota Raize SUV வெற்றியாளர்களும் இங்கு ஒன்றிணைக்கப்பட்டனர். ஹோகந்தரவைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி திரு. D.L.J.R.K தொடம்கொட (D.L.J.R.K Dodamgoda), இறுதிப் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே வெற்றிபெற்ற பண்டாரகமையைச் சேர்ந்த திரு. L. லசந்த கெலும் மற்றும் கண்டியைச் சேர்ந்த திரு. S. M. R. P. B. சகலசூரிய ஆகியோருடன் இணைந்துகொண்டார். இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஒரு வீரர் இறுதி வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டது, இந்த நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு ஒரு சிறப்பான நிறைவாக அமைந்தது.

இந்தத் திட்டத்தின் தாக்கம் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழுமத் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும கருத்துத் தெரிவிக்கையில்: “Dialog e-Load Super Blast என்பது வெறும் பரிசுகளை வழங்கும் ஒரு திட்டம் மட்டுமல்ல; இது டிஜிட்டல், பாதுகாப்பான மற்றும் இலகுவான பரிவர்த்தனை முறைகளை நோக்கி வாடிக்கையாளர்களைத் தூண்டும் ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாகும். மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதில் பங்கேற்றிருப்பது, இலங்கையர்கள் டிஜிட்டல் ரீலோட் முறையைத் தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இந்த மாற்றமானது நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்றார்.

இப்பிரச்சாரக் காலப்பகுதி முழுவதும், MyDialog App, Dialog.lk, Genie அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஊடாக ரீலோட் செய்த வாடிக்கையாளர்கள், இந்த பிரம்மாண்டப் பரிசுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். அத்துடன், டிஜிட்டல் ஸ்கிராட்ச் கார்டுகள் (Digital scratch cards) மூலம் தங்கக் காசுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலவச நெட்வொர்க் சலுகைகள் போன்ற உடனடிப் பரிசுகளையும் வெல்லும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது. இது, வழக்கமான முறைகளை விட டிஜிட்டல் ரீலோட் முறையே அதிக லாபகரமான மற்றும் புத்திசாலித்தனமான தெரிவு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பாதையில் மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம், புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை வசதிகளை தொடர்ந்து விரிவுபடுத்தி, நாட்டின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தை வேகப்படுத்தி வருகிறது.