பொருள் விரிவாக்கம்

இலங்கையில் பிரபலமான டயலொக் Blaster பிளான் இன் புதிய அறிமுகம் ‘Triple Blaster' மொபைல் பிளான்

December 23, 2021         Colombo

 

Triple Blaster Plan logo

டயலொக் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த Blaster பிளான்களில் முற்கொடுப்னவு வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு வலையமைப்பிற்கும் அழைப்புகள் மற்றும் SMS உள்ளடங்களாக மேலும் பல விசேட பிளான்களை அறிமுகப்படுத்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆனது முன்னின்று செயற்படுகின்றது. இந்த சமீபத்திய ‘Triple Blaster' பிளானில் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் எந்தவொரு உள்நாட்டு வலையமைப்பிற்கும் 1000 நிமிடங்கள் மற்றும் 1000 SMS களுடன் 1.5GB Anytime டேட்டாவையும் மாதத்திற்கு ரூ. 498/- க்கு (வரிகள் உட்பட) பெற்றுக்கொள்வார்கள்.

இந்த புதிய Triple Blaster பிளான் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு அவசியமான அனைத்து அழைப்புகள், SMSகள் மற்றும் டேட்டாவை ஒரே பிளானின் ஊடாக பெற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த புதிய டயலொக் Triple Blaster பிளானினை ரூ.498ஐ ரீலோட் செய்து அல்லது MyDialog App மூலம் செயற்படுத்திக்கொள்ளலாம்.

புதிய Triple Blaster 498 பிளான்க்கு மேலதிகமாக டயலொக் இணைப்புகளுக்கிடையே அழைப்புகள், SMS மற்றும் Anytime Data இனை கொண்ட Triple Blaster ரூ.345 பிளான் இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு பிளான்களில் தாங்கள் விரும்பிய, தங்களுக்கு ஏற்ற பிளானினை தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.

டயலொக் இன் பார்வையானது அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் பொருத்தமான மற்றும் மிக குறைந்த விலையில் மொபைல் பிளான்களை வழங்குவதாகும். மேலும் '‘Blaster' திட்டங்களின் மூலம், அழைப்புகள், SMS, Facebook, WhatsApp, Instagram, YouTube உள்ளடங்களாக வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பரந்த அளவிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய Triple Blaster ரூ.498 பிளான் வாடிக்கையாளர்களின் தகவல் தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும். மேலதிக தகவல்களுக்கு Triple Blaster Any Network Plan க்கு செல்லுங்கள்.