அங்கீகாரம் பெற்ற விநியோகத்தராவது எப்படி
டயலொக் ஆக்சியாடாவின் அங்கீகாரம் பெற்ற முகவராக திகழ்வதற்கு, குறித்த ஆய்வுகள் மற்றும் முற்தகைமைகள் செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அங்கீகாரம் பெற்ற முகவராக திகழ்வதற்கு, பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
-
விநியோகத்தர் ஒழுக்கக்கோவைக்கு அமைவாக செயற்படுவதை உறுதிப்படுத்துவது.
-
Supplier self-declaration form submission
-
பொருத்தமான உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் முகவர் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது.
-
விநியோகத்தர் நிலையை பரிசோதித்து, ஆகக்குறைந்த தொடக்க மட்டத்தை கொண்டிருப்பது. பரிசோதிக்கும் பகுதிகள் வருமாறு;
-
- வர்த்தகத்தின் வகை
-
- நிதி உறுதிப்பாடு மற்றும் நிலை
-
- தரப்பரிசோதனை
-
- விருதுகளும் கௌரவிப்புகளும்
-
- கடந்த காலங்களில் செயற்பாடு
-
மேற்படி நியதிகளை பூர்த்தி செய்யத்தவறும் நபர்களுக்கு தகவல் கோரிக்கை / விலை மனு கோரிக்கை / செயற்குறிப்பு கோரிக்கை போன்றவற்றுக்கான தகைமை மறுக்கப்படும்.
எதிர்கால முகவர்களாக செயற்பட எதிர்பார்க்கும் சகல நபர்களையும் முற்தகைமைகளை பரிசோதிப்பதற்காக தமது பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கைவிடுக்கிறோம். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், டயலொக் விநியோக வலையமைப்பு, சமர்ப்பிப்புகளை ஆராய்ந்து, ஆகக்குறைந்த தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், டயலொக் ஆக்சியாடாவின் அங்கீகாரம் பெற்ற முகவராக திகழ்வதற்குரிய அனுமதியை வழங்கும்.
If any supplier needs to register with Dialog, please write to scmvm@dialog.lk
தபால் முகவரி:Supply Chain Management,
Dialog Axiata PLC,
Kit Building 4th Floor,
475, Union Place,
Colombo 02
* முறையான பூர்த்திக்காக நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்தின் சகல பகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவும்