Call Diversion


Call Diversion வசதியானது, உங்களுக்கு வரும் அழைப்புகளை மற்றுமொரு இலக்கத்திற்கு செய்யும் வசதியாகும். இது நீங்கள் வலையமைப்பு இல்லாத இடத்தில் இருக்கையில் அல்லது உங்கள் தொலைபேசியின் பற்றறி இல்லாது போகையில், அல்லது நீங்கள் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள விரும்பாதவிடத்து, மிகுந்த உபயோககரமான சேவையாக விளங்குகின்றது. இந்த சேவை ஊடாக, உங்களுக்கு வரும் அழைப்புகளை நிலையான தொலைபேசி ஒன்றுக்கோ அல்லது வேறொரு மொபைலுக்கோ, தொடரும் குறியீடுகளை உள்ளிட்டு Divert செய்ய முடியும்.

Activation

How to activate Call Diversion?

விசேட செயற்படுத்தல்கள் தேவையில்லை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாவனை அட்டவணையின் பிரகாரம் குறும் குறியீடுகள் உங்கள் தொலைபேசியில் இருந்து நேரடியாக பதிவுசெய்யப்படும்.

How to use Call Diversion?

உங்கள் அழைப்புகளை டைவேர்ட் செய்ய விரும்பினால் உங்கள் தொலைபேசியில் இருந்து பொருத்தமான குறியீட்டை பதிவுசெய்து அனுப்புங்கள். பொதுவான குறியீட்டு வடிவமைப்பானது**[குறியீட்டு இலக்கம்]*[ மற்றைய இலக்கம்]#. அனைத்து அழைப்புகளையும் இலகுவாக டைவேர்ட் செய்வதற்கான குறியீடு 21 ஆகும் டைவேர்ட் செய்ததை மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தக் குறியீட்டை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய

**21*(மற்றைய இலக்கம்)# மற்றும் SEND/OK
உ-ம்: **21*0777123456# அனுப்புங்கள்

தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய

**67*(மற்றைய இலக்கம்)# மற்றும் SEND/OK

பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய
(30 செக்கன்கள்)

**61*(மற்றைய இலக்கம்)# மற்றும் SEND/OK

தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய
(தொலைபேசி அணைக்கப்பட்ட அல்லது வலையமைப்புக்கு வெளியே இருக்கையில்)

**62*(மற்றைய இலக்கம்)# மற்றும் SEND/OK

ரத்துச்செய்ய

##002# மற்றும் SEND/OK

டைவேர்ட் செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள

*#CODE# மற்றும் SEND/OK

கட்டண முறைமை

வழமையான பக்கேஜ் கட்டணங்களுக்கு அமைவாக அழைப்புக் கட்டண அறவீடு மேற்கொள்ளப்படும்.