Per Day Insurance - விபத்துக் காப்புறுதி (PA 2016)


2016ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் கையடக்கத் தொலைபேசியிலிருந்து ஒரு நாளுக்கு ரூ. 2.67 வரை குறைந்த கட்டணத்தில் எளிதாக செயல்படுத்தக்கூடிய விபத்து மற்றும் விபத்தல்லாதவைக்கான காப்புறுதியை (இறுதிக் கிரியை செலவுகள் மட்டும்) உங்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இக் காப்புறுதியில் விபத்து மூலம் மரணம் அல்லது முழுமையான நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படும். தற்செயலான விபத்தல்லாத காரணங்களால் மரணம் ஏற்பட்டால், இறுதிச் செலவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி திருப்பிச் செலுத்தப்பட்டு உரிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு வலையைப் போன்று செயற்படும். காப்பீடு செய்த உறவினர் கடுமையான விபத்துக்குள்ளானால் அல்லது இறந்துவிட்டால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட குடும்பத்திற்கு உதவுகிறது.

COVID-19 Coverage

For deaths due to COVID-19, a non-accidental death benefit up to Rs. 100,000/- is paid.

கட்டண விபரம்

 

ஒரு நாளுக்கான பதிவுக் கட்டணம்

அடுத்து வரும் மாதத்திற்கான காப்பீட்டுத் தொகை

முற்கொடுப்பனவு இணைப்பு

ரூ. 2.67

விபத்து மூலமான மரணத்திற்கு ரூ. 1,200,000.00 மற்றும் விபத்தல்லாத தற்செயலான மரணத்தின் போது இறுதிச் செலவுகளுக்கு ரூ .100,000 வழங்கப்படும்.

 

மாதாந்த காப்பீட்டுத் தொகை

அடுத்து வரும் மாதத்திற்கான காப்பீட்டுத் தொகை

பிற்கொடுப்பனவு இணைப்பு

ரூ. 80.00

விபத்து மூலமான மரணத்திற்கு ரூ. 1,200,000.00 மற்றும் விபத்தல்லாத தற்செயலான மரணத்தின் போது இறுதிச் செலவுகளுக்கு ரூ .100,000 வழங்கப்படும்.

ரூ. 129.00

விபத்து மூலமான மரணத்திற்கு ரூ. 2, 400,000.0 மற்றும் விபத்தல்லாத தற்செயலான மரணத்தின் போது இறுதிச் செலவுகளுக்கு ரூ.100,000 வழங்கப்படும்.

*நியாய வரிகளுக்கு உட்பட்டது.

காப்பீட்டு நலன் தொகை செலுத்தல்

இறப்பு அல்லது இயலாமை வகை

செலுத்தப்படும் அதிகபட்ச காப்பீட்டு தொகையின் %

விபத்து மூலம் மரணம்

100% (உ.ம்: அதிகபட்ச காப்பீட்டு நலன் தொகை இ. ரூபா. 1.2 மில்லியன் என்றால் இ. ரூபா. 1.2 மில்லியன் வழங்கப்படும்)

இரு கரங்கள் மற்றும் பாதங்களின் இழப்பு

100%

இரு கரங்களின் இழப்பு, அல்லது அனைத்து விரல்கள் மற்றும் இரு பெருவிரல்களின் இழப்பு

100%

முழு உடல் செயலிழப்பு

100%

முழுமையான புத்தி சுவாதீன இழப்பு

100%

காயங்களால் ஏற்படும் நிரந்தர செயலிழப்பு

100%

வேறு காயங்களால் ஏற்படும் நிரந்தர செயலிழப்பு

100%

இரு விழிகளும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் பார்வையை இழத்தல்

100%

கரத்தை தோள்பட்டையுடன் இழத்தல்

50%

கரத்தை தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையில் இழத்தல்

50%

கரத்தை முழங்கை மற்றும் மணிக்கட்டுக்கு இடையில் இழத்தல்

50%

மணிக்கட்டில் கையை இழத்தல்

50%

கால்களை இழத்தல்

50%

காலை முழங்கால் மற்றும் இடைக்கு இடையில் இழத்தல்

50%

காலை முழங்காலுக்குக் கீழே இழத்தல்

50%

ஒரு விழியில் முழுமையாகவும் நிரந்தரமாகவும் பார்வையை இழத்தல்

50%

ஒரு கரத்தில் நான்கு விரல்களை மற்றும் கட்டைவிரலை இழத்தல்

50%

பேச்சு இழப்பு

50%

குறிப்புக்கள்

காப்பீட்டு பங்குதாரர்:செலின்கோ காப்புறுதி நிறுவனம்

  • காப்பீட்டுக்கான பதிவின் போது 18 முதல் 69 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு பொருந்தும்.

  • பதிவுசெய்த வாடிக்கையாளர்கள் 70 வயது வரை அதன் பலன்களை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் 70 வயதை அடையும் போது, இச் சேவை தானாகவே இடைநிறுத்தப்படும்.

  • இந்த மொபைல் இணைப்பின் பாவனையாளருக்கு இழப்பீடு செயற்படுத்தப்படலாம்.

  • உரிமைகோரல்களுக்கு, பதிவு செய்யும் நேரத்தில் வாடிக்கையாளர் வழங்கிய காப்பீட்டாளரின் விவரங்கள் பரிசீலிக்கப்படும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - [PDF]

காப்பீடு கோரிக்கை விண்ணப்பப் படிவம் - [PDF]