தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு திட்டம்


செலிங்கோ பொதுக்காப்புறுதி நிறுவனமானது BIMA இலங்கை காப்புறுதி தரகர்கள் தனியார் நிறுவனத்தின் ஊடாக Dialog வாடிக்கையாளர்களுக்காக தனிப்பட்ட விபத்து பாதுகாப்பிற்காக வேண்டி ஒரே நாளில் காப்புறுதி வழங்கும் திட்டமொன்றை வடிவமைத்திருக்கின்றது.

விபத்து காப்புறுதி திட்டமானது விபத்தின் போது மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அதற்கான காப்புறுதி தொகையை வழங்கும், அவ்வாறு வழங்கப்படும் தொகையானது தேவையான நேரத்தில் ஒரு பாதுகாப்பு வலையாக செயற்படுவதோடு காப்புறுதி செய்யப்பட்டவர் விபத்தினால் கடும் காயங்களுக்கு உள்ளானாலோ அல்லது மரணித்தாலோ ஏற்படும் செலவுகளை அவரின் குடும்பத்தினர் சமாளிக்க பெரும் உதவியாகவும் அமையும்.

விலை நிர்ணயம்

தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தாக்கட்டணம் 2017 (வரிகள் தவிர்த்து)

திட்டம்

திட்ட நன்மைகள் (ரூபா)

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான நாளாந்த கட்டணம் (ரூபா)

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான மாதாந்த கட்டணம் (ரூபா)

பாதுகாப்பு திட்டம் 1

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 5,00,000 ரூபா அல்லது விபத்தற்ற மரணத்திற்கான இறுதிச்சடங்கிற்காக 100,000ரூபா

1.33

40

பாதுகாப்பு திட்டம் 2

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 1,200,000 ரூபா அல்லது விபத்தற்ற மரணத்திற்கான இறுதிச்சடங்கிற்காக 100,000ரூபா

2.67

80

*குறித்த சந்தாத்தொகையானது வாடிக்கையாளரின் (பாலிசிதாரரின்) தொலைபேசி கட்டணத்திலிருந்து அறவிடப்படும்.

தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தாக்கட்டணம் 2016 (வரிகள் தவிர்த்து)

2016 மே 19 முதல் 2017 நவம்பர் 22 வரையான காலப்பகுதிக்குள் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கானது

திட்டம்

திட்ட நன்மைகள் (ரூபா)

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான நாளாந்த கட்டணம் (ரூபா)

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான மாதாந்த கட்டணம் (ரூபா)

பாதுகாப்பு திட்டம் 1

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 1,200,000 ரூபா அல்லது விபத்தற்ற மரணத்திற்கான இறுதிச்சடங்கிற்காக 100,000ரூபா

2.67

80

பாதுகாப்பு திட்டம் 2

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 1,200,000 ரூபா அல்லது விபத்தற்ற மரணத்திற்கான இறுதிச்சடங்கிற்காக 100,000ரூபா

N/A

129

*குறித்த சந்தாத்தொகையானது வாடிக்கையாளரின் (பாலிசிதாரரின்) தொலைபேசி கட்டணத்திலிருந்து அறவிடப்படும்.

தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தாக்கட்டணம் 2016 (வரிகள் தவிர்த்து)

முதல் 2016 ஜனவரி 18 வரையான காலப்பகுதிக்குள் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கானது

திட்டம்

திட்ட நன்மைகள் (ரூபா)

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான நாளாந்த கட்டணம் (ரூபா)

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான மாதாந்த கட்டணம் (ரூபா)

பாதுகாப்பு திட்டம் 1

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 1,200,000 ரூபா

1.33

40

பாதுகாப்பு திட்டம் 2

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 2,200,000 ரூபா

N/A

80

பாதுகாப்பு திட்டம் 3

விபத்தின் மூலமான மரணம் அல்லது ஊனமடைதலுக்காக 5,000,000 ரூபா

N/A

250

*குறித்த சந்தாத்தொகையானது வாடிக்கையாளரின் (பாலிசிதாரரின்) தொலைபேசி கட்டணத்திலிருந்து அறவிடப்படும்.

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர் காப்பீட்டை பதிவு செய்த திகதிக்கு ஏற்ப விகிதாசார கட்டணம் விதிக்கப்படும். வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காப்பீடு கணக்கிடப்படும்.

மொத்தக் காப்பீட்டுத் தொகையையும் பெறுவதற்கான உரிமையைப் பெற, மாதாந்த தொகை முழுமையாகக் செலுத்தப்பட வேண்டும். மாதாந்த தொகை பகுதியளவிலேயே செலுத்தப்பட்டிருக்குமென்றால், காப்பீட்டில் இருந்து அதற்கு ஏற்ற விகிதாசாரத் தொகை அந்த மாதத்திற்கு ஒதுக்கப்படும்.

இணைய மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் மீள்நிரப்பல் செய்யப்படும் போது தினசரி கட்டணம் அறவிடப்படாது. பொருத்தமான தினசரி கட்டணங்கள் சாதாரண மீள்நிரப்பல் அட்டைகள் அல்லது ரீலோட்களில் இருந்து மட்டுமே கழிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு தகுதி பெறும் காப்பீட்டுத் தொகை குறித்து மாதந்தோறும் SMS அறிவிப்புகளைப் பெறுவார்கள்.

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு

முழு பிரீமியம் தொகையும் வெற்றிகரமாகக் கழிக்கப்பட்டு, வாடிக்கையாளர் சேவைக்காகப் பதிவுசெய்யும் நாளிலிருந்து மாதத்திற்கான மொத்தக் கட்டணத்தொகை விதிக்கப்படும், மேலும் வாடிக்கையாளர் அடுத்த மாதம் முதல் முழுக் காப்பீட்டிற்கும் தகுதி பெறுவார்.

வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு தகுதி பெறும் காப்பீட்டுத் தொகை குறித்து மாதாந்தம் SMS அறிவிப்புகளைப் பெறுவார்கள்

நலன்கள் கிடைப்பனவு

முதல் மாத பிரீமியத்தை முழுமையாகச் செலுத்திய பிறகு நலன்கள் கிடைப்பனவு ஆரம்பமாகும். முதல் மாத பிரீமியத்தை முழுமையாக செலுத்தியவுடன், காப்பீட்டாளருக்கு அடுத்த மாதத்தின் முதல் நாளிலிருந்து பலன்கள் கிடைக்கும். சந்தாதாரர் எந்தவொரு மாதத்திலும் பிரீமியத்தை வெற்றிகரமாகக் கழிப்பாராயின் காப்பீட்டுத் தொகை தானாகவே புதுப்பிக்கப்படும்.

பரிந்துரைகள்

காப்பீட்டாளருக்கு துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின்படி மொத்தத் தொகை பரிந்துரைக்கப்பட்ட உடனடி குடும்ப உறுப்பினருக்கு* செலுத்தப்படும்.

*இந்நிகழ்வில், உடனடி குடும்ப உறுப்பினர் என்பது வாடிக்கையாளரின் மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களைக் குறிக்கிறது.

திட்டத்தை நிறுத்துதல்,

கீழ்வரும் காரணங்களின் பெயரில் திட்டம் மிக விரைவில் நிறுத்தப்படும்:

 • முக்கிய பொலிசி தாரர் திட்டத்துக்கான வயது வரம்பை அடையும் போது.

 • காப்பீட்டு காலத்தின் போது முக்கிய பொலிசிதாரரின் மரணம்

 • காப்பீடு புதுப்பிக்கப்படும் திகதி, புதுப்பிக்கப்படாவிட்டால்./p>

 • முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பு நிறுத்தப்பட்டால்.

 • தவறான பிரதிநிதித்துவம் மற்றும் மோசடி

உரிமை கோரல் நடைமுறை

உரிமை கோரல்களுக்கு, 1343 ஐ அழைக்கவும் (கட்டணமில்லா அழைப்பு)

குறிப்பு - பரிந்துரைக்கப்பட்டவர், காப்பீட்டாளர் இறந்த திகதியிலிருந்து 90 நாட்களுக்குள் மரணம் குறித்து நிறுவனத்திற்கு அறிவித்தாக வேண்டும் மற்றும் அடுத்த 90 நாட்களுக்குள் பின்வரும் அனைத்து ஆவணங்களையும் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

தேவையான விவரங்கள்:

 • பூர்த்தி செய்யப்பட்ட உரிமைகோரல் படிவம்

 • இறந்தவரின் வயது மற்றும் அடையாள சான்று (NIC நகல்)

 • இறப்பு சான்றிதழ்

 • மருத்துவ அறிக்கைகள்

 • பிரேத பரிசோதனை / விசாரணை அறிக்கை (தேவைப்படின் )

 • Ceylinco General கோரும் பிற ஆவணங்கள் -

கோரிக்கை விலக்குகள் பற்றி தெரிந்து கொள்ள, தயவுசெய்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அல்லது கீழே உள்ள கொள்கை ஆவணத்தை பார்வையிடவும்.

ஆயுள் காப்புறுதி உரிமைகோரல் படிவம் - [PDF]

எப்படி செயல்படுத்துவது?
 

1343 எண்ணுக்கு அழைக்கவும்
Monday – Saturday (Except Sunday, POYA Day & Mercantile Holiday)
9:00AM to 5:00PM

 
சிறப்புக் குறிப்புகள்
 • ஆயுள் காப்புறுதிக்கான காப்புறுதி வழங்குநர்- Ceylinco General Insurance PLC.

 • சேவை வழங்குநர் – BIMA Lanka Insurance Brokers (Pvt) Ltd

 • வயது வரம்பு:

   
  • நுழைவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை - 18 ஆண்டுகள் (குறித்த பிறந்தநாள் அன்று)

  • நுழைவதற்கான அதிகபட்ச வயது - 70 ஆண்டுகள் (எதிர்வரும் பிறந்தநாள்)

  • திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வயது – 70 வயது (குறித்த பிறந்தநாள் அன்று )

 • புவியியல் வரம்புகள்: உலகம் முழுவதும்

Policy Document - [PDF]