சூழல்

டயலொக் ஆக்சியாடாவின் சூழல் கொள்கை

சூழல் என்பது எம் அனைவரில் வாழ்க்கையிலும் நிலையானது. சூழலுக்கு வளத்தை சேர்த்து, பாதுகாத்து எதிர்காலத்துக்காக பேண வேண்டியது என்பது எம் அனைவரின் ஒழுக்கம் நிறைந்த கடப்பாடு என்பதுடன், நாம் எம்மாலான இயன்றளவு பங்களிப்பை வழங்க நாம் முயற்சி செய்கிறோம். இதற்காக நாம் எமது சகல பங்காளர்களுடனும் ஒன்றுசேர்ந்து ஒரு அணியாக செயலாற்றி வருகிறோம். இலங்கையர்களின் வாழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல்லுணர்வு இணைப்புகளை வழங்கி வரும் டயலொக் ஆக்சியாடா பிஎல்சி, சூழலுக்கு உள்ளார்ந்த அனுகூலங்களை வழங்கும் சேவைகளையும் பொருட்களையும் வழங்கி வருகிறது.

சகல கட்டாயமான மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகளுக்கும் அமைய இயங்குவது, எந்தவகையிலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முற்கூட்டியே தவிர்த்துக் கொள்வது, தவிர்க்க முடியாத வகையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து எழக்கூடிய இழப்புகளை இயன்றளவு குறைத்தல் மற்றும் அவ்வாறு ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சூழல் மீது நாம் காண்பிக்கும் கரிசனையாக அமைந்துள்ளது.

இந்த முயற்சியை தக்க வைத்துக் கொள்ள, நாம் தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை சூழலுக்கு பாதுகாப்பான வகையில் மெருகேற்றி வருகிறோம். எமது சாதானங்களை தொடர்ச்சியாக புதுப்பிப்பது, குறைந்தளவு வலுவில் இயங்கும் சூழலுக்கு பாதுகாப்பான சாதனங்களை பயன்படுத்துவது, பச்சை வலு மூலங்களை மாற்றீடாகவோ பகுதிவாரியாகவோ பயன்படுத்துவது, எமது ஊழியர்களுக்கு அவசியமான பயிற்சிகளை வழங்கி வலுச்சேர்ப்பதன் மூலம் மற்றும் எமது கம்பனி கலாசாரத்தில் சூழல் காப்புத்தன்மையை உள்ளடக்குவது போன்றன இதில் உள்ளடங்கியுள்ளன. இந்த நோக்கங்கள், அனைத்து ஊழியர்களுக்கும் பங்காளர்களுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீள மீள தொடர்பாடல்களின் மூலம் அறிவிக்கப்படும்.

இந்த இலக்குகளை எய்துவதற்காக நாம் எம்மை பொறுப்பாக கொண்டுள்ளதுடன், தொடர்ச்சியான மேம்படுத்தல்களை கண்காணித்தும் வருகிறோம்.