டயலொக் ஆசிஆட்டா இலங்கையர்களின் டேட்டா பாவனையினை ஊக்குவிக்கும் வகையில் அதிக நன்மைகளை கொண்ட டேட்டா நிறைந்த அழைப்பு மற்றும் SMS உடன் ‘DATA BLASTER’ ஐ அறிமுகப்படுத்துகிறது.
25 ஜுன் 2020 கொழும்பு
அனைத்து இலங்கையர்களுக்கும் அதிக நன்மைகளை கொண்டதும் மற்றும் அனைவராலும் அணுகக்கூடியதாகவும் உலகத்தரம் வாய்ந்த இணைய சேவைகளை இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வழங்குகின்றது. இதன் ஒரு பகுதியாக வரிகள் உள்ளடங்களாக ரூ. 129/-க்கு DATA BLASTER ஐ அறிமுகப்படுத்துகின்றது. இதில் டேட்டா, அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. டயலொக்கின் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டேட்டா, அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த பக்கேஜ்; அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த DATA BLASTER, 1GB Anytime டேட்டாவினையும், D2D 250 நிமிட அழைப்பு நேரத்தினையும், D2D 250 SMS இனையும் ஒரு வார காலத்திற்கு வழங்குகின்றது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த பக்கேஜினை பெற்றுக்கொள்ளக்கூடியதுடன் #006# டயல் செய்வதன் மூலம் செயற்படுத்திக்கொள்ள முடியும்.
Blaster தர வரிசையில் “Data Blaster” புதிதாக இணைக்கப்பட்டுள்ளதுடன் இது “Triple Blaster”– ரூ.345க்கு அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் combo plan மற்றும் “4G Video Blaster” - ரூ.249க்கு டேட்டாவிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் YouTube பாவனைக்கு வரையறையற்ற டேட்டாவினையும் 3.5GB Anytime டேட்டாவினையும் கொண்டுள்ளது. அதற்கமைய, புரட்சிகர “Data Blaster” பக்கேஜ் டேட்டா வாடிக்கையாளர்களிடையே பிரபலமான டேட்டா அடிப்படையிலான திட்டங்களுடன் இணையும்; என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு வார காலத்திற்கு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் போதுமானளவு டேட்டா ஒதுக்கீட்டையும் போதுமானளவு அழைப்பு மற்றும் SMS ஒதுக்கீட்டையும் வழங்குகிறது.
வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொண்டு டயலொக் தனது வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான, அனைவராலும் அணுகக்கூடிய மற்றும் அதிக நன்மைகளை கொண்ட டேட்டா பக்கேஜ்களை வழங்குகின்றது. இந்த அதிக நன்மைகளை கொண்ட பக்கேஜ் என்பது அவசியமான நேரத்தில் வழங்கப்படுவதுடன் இது அதிகமான மக்கள் இணையத்தில்; தங்கள் தேவைககளை பூர்த்தி செய்துக்கொள்வதற்கும் அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சேவையின் தரத்துடன் நம்பகமான, தொடர்ச்சியான இணைப்பைக் கொண்ட 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு டயலொக்கின் உறுதிப்பாட்டை எளிதாக்குவதில் இது ஒரு மைல்கல் ஆகும்.