பொருள் விரிவாக்கம்

"இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்" எனும் விருதினை பிராண்ட் ஃபைனான்ஸிடமிருந்து தொடந்து இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது

23 ஜுன் 2020         கொழும்பு

 

news-1

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆனது, தனது 17 ஆவது மதிப்பாய்வில் உலகின் முன்னணி சுயாதீன பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசகரான, Brand Finance இனால் தொடர்ச்சியாக இரண்டாவது வருடத்தில் " இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்" என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வாழ்வியல் முறையையும், நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் தனது வர்த்தக நாமத்தின் நெறிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்திய டயலொக், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக AAA இன் வர்த்தக நாம மதிப்பீட்டையும், தொடர்ந்து 13 வது ஆண்டாக ‘ மதிப்புமிக்க தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்’ என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

"மதிப்புமிக்க வர்த்தக நாமம் 2020 " மற்றும் "மதிப்புமிக்க தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்" போன்ற கௌரவங்களால் சிறந்த சேவையை வழங்குவதற்கான தனது “இதயபூர்வமாக சேவை” எனும் நோக்கத்தையும் “எதிர்காலம் இன்றே” என்பதை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டையும் டயலொக் அங்கீகரித்துள்ளது. அனைத்து இலங்கையர்களுக்குமானதொரு தொழில்நுட்பத்தை அணுகுவதன் மூலம், பலவிதமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளினால் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இது ஒரு சான்றாகும். அதே சமயம் பல இணையற்ற அனுபவங்களையும் இது உருவாக்குகிறது.

உலகின் ஒன்றுகொன்று இணைக்கப்பட்ட வாழ்வினை மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்குமான அர்ப்பணிப்புதான் டயலொக் எனும் வர்த்தக நாமத்தின் வலிமைக்கு காரணமாகின்றது. அதே நேரத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் இதயங்களில் நம்பகமான டிஜிட்டல் தோழனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளமையும் முக்கியமாகும். தனது நிறுவன அமைப்பில் கொண்டுள்ள கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம், கலாசாரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மதிப்பை உருவாக்குவதற்கும் தனித்துவமான அனுபவங்களுடன் கூடிய வணிகங்கள் வழிநடத்துவதை உறுதி செய்ய வழிவகுத்தது. இதன் விளைவாக அது தனது வர்த்தக நாமத்தின் அடையாளத்தை தரமுயர்த்தியுள்ளது.

இந்த விருதுகள் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுப்புன் வீரசிங்க கூறுகையில், “இரண்டாவது வருடமும் 'இலங்கையின் மதிப்புமிக்க வாடிக்கையாளர் வர்த்தக நாமம்' மற்றும்' தொடர்ந்து 13 வது ஆண்டாக ' மதிப்புமிக்க தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' ஆகிய மிகவும் விரும்பப்படும் விருதுகளை பெற்றிறுப்பது குறித்து பெருமையடைகிறோம். இந்த விருதுகள் உலகத் தரம் வாய்ந்த சேவைகள் மற்றும் தீர்வுகளின் மூலம் 15 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வாழ்க்கையை வளப்படுத்தியமைகான பிரதிநிதித்துவமாகவும், “எதிர்காலம். இன்றே” எனும் எமது உறுதிப்பட்டின் அடிப்படையில் தொழில்நுட்ப தீர்வுகளை எப்போதும் வழங்குவோமென அவர்கள் எம் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த அங்கீகாரம், டயலொக் குழுவினர் இதயபூர்வமாக சேவையை வழங்கியபடி தம் நிறுவனத்தை புதுமைகளில் முன்னணியாக நிலைநிறுத்துவதற்கு மேற்கொண்டுவரும் தற்போதைய நிலைப்பாட்டையும் பறைசாற்றுகின்றது.” என்றார்.

பிராண்ட் ஃபைனான்ஸ் லங்காவின் நிர்வாக இயக்குனர் ருச்சி குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான திறனும், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சந்தைப்படுத்தல் உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் டயலொக்கிற்கு வெற்றி கிடைக்கிறது. இது, ஒற்றை டிஜிட்டல் அணுகுமுறையுடன் சேர்ந்து, பல டிஜிட்டல் இடைமுகங்களை உள்ளடக்கி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு வர்த்தக நாமமாக இயங்க உதவுகிறது என்றார்.

பிராண்ட் ஃபைனான்ஸ் என்பது உலகின் முன்னணி சுயாதீன பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமாகும். இலங்கை உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. வர்த்தக நாமங்களின் நிதி மதிப்பை அளவிடுவதன் மூலம் சந்தைப்படுத்தல் மற்றும் நிதிக்கு இடையிலான இடைவெளியை பிராண்ட் ஃபைனான்ஸ் இணைக்கின்றது. பிராண்ட் ஃபைனான்ஸ் அதன் லீக் அட்டவணையில் உள்ள வர்த்தக நாமங்களின் மதிப்புகளை ராயல்டி நிவாரண அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கிடுகிறது - இது ISO 10668 இல் அமைக்கப்பட்டுள்ள தொழில்துறை தரங்களுடன் இணக்கமான ஒரு பிராண்ட் மதிப்பீட்டு முறையாகும். இது ராயல்டி வீதத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஒரு பிராண்டிற்கு எதிர்கால வருவாயின் மதிப்பிட்டை கணிக்கிறது.திறந்த சந்தையில், வர்த்தக நாமத்திற்கு உரிமம் வழங்குவதன் மூலம் ஒரு பிராண்ட் உரிமையாளர் அடையக்கூடிய நிகர பொருளாதார நன்மை என்று புரிந்து கொள்ளப்பட்ட ஒரு 'வர்த்தக நாம மதிப்பை' அடைவதற்கு, அதன் பயன்பாட்டிற்காக வசூலிக்கப்படும் ஒரு ராயல்டி வீதத்தை கணக்கிடுவதன் மூலம் ஒரு பிராண்டின் எதிர்கால வருவாயை மதிப்பிடுவது இதில் அடங்கும்.