பொருள் விரிவாக்கம்

Dialog, கோவிட் -19 காலப்பகுதியில் மாணவர்களுக்காக நெனச 1377 தொலைதூர உதவி துரித இலக்கத்தினை வலுவூட்டுகின்றது.

2020 ஏப்ரல் 18         கொழும்பு

 

தற்போது நிலவும் சூழ்நிலையில் மாணவர்களை ஆதரிப்பதற்கும், பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்டதால் கல்வி முறைக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதற்கும் அதன் முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன், அனைத்து தரம் 11 மாணவர்களுக்கும் தங்களது படிப்பைத் தொடர தொலைதூர உதவி துரித இலக்கமான நெனச 1377 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு துரித இலக்க சேவை, தரம் 11 மாணவர்கள் தங்கள் தேர்வு தொடர்பான கணிதம், அறிவியல், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கான கேள்விகளுக்கான பதில்களை அரசு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் நிபுணர் குழுவிலிருந்து பெற அனுமதிக்கிறது. எந்தவொரு டயலொக் கையடக்க தொலைபேசியிலிருந்தும் 1377 க்கு அழைப்பதன் மூலம் முற்றிலும் இலவசமாக இணைந்துக்கொள்ள முடியும். இந்த ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்டைக்கு தேற்றும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த சேவை வழங்கப்படுகின்றது.

நெனச 1377 தொலைதூர உதவி துரித இலக்கத்தை தவிர, டயலொக், அதன் பங்காளர்களுடன் இணைந்து , ஈ-கற்றல் தளங்களான Guru.lk, e-thaksalawa - கல்வி அமைச்சின் e-learning தளங்கள் மற்றும் நெனச App ஆகியவற்றுக்கு எந்தவொரு டேட்டா கட்டணமும் இல்லாமல் இலவச அணுகலை வழங்குகின்றது. அதன் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் எந்த டேட்டா கட்டணமும் இல்லாமல், டயலொக் ViU App இற்கும் இலவச அணுகலை வழங்குகின்றது. மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் மற்றும் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து டயலொக் மாநில பல்கலைக்கழகங்களின் அனைத்து உத்தியோகபூர்வ மின்-கற்றல் தளங்களுக்கும் டேட்டா கட்டணங்கள் இல்லாமல் இலவச அணுகலை வழங்கியுள்ளது.

இந்த கல்வி சேவை தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் இணைவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக டயலொக் ஆசிஆட்டாவின் மற்றொரு முயற்சியாகும். மேலும், 15 மில்லியன் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பாதுகாப்பாக இருப்பதனையும், வீட்டிலேயே இருப்பதனையும், எப்போதும் இணைந்திருப்பதனையும் உறுதிசெய்யும் முயற்சிகளில் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) ஆகியவற்றுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றது