பொருள் விரிவாக்கம்

டயலொக் அறக்கட்டளை ஏப்ரல் 21ம் திகதி பாரிய அசௌகரியங்களை சந்தித்த இலங்கையர்களுக்கு உதவிட அழைப்புவிடுக்கின்றது

2019 ஏப்ரல் 27         கொழும்பு

 

news-1

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் இடப்பக்கத்தில் இருந்து: PricewaterhouseCoopers நிறுவனத்தின் இயக்கனர் ஷிரான் பிரியஜனக, சர்வோதயவின் தலைவர் கலாநிதி வின்ய எஸ் ஆரியரத்ன டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே மற்றும் World Vision Lanka நிறுவனத்தின் தேசிய இயக்குனர் கலாநிதி தனன் சேனாதிராஜா

டயலொக் ஒவ்வொரு நன்கொடையினையும் இருமடங்காக்கி ரூ.100 மில்லியன் வரை வழங்கவுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பில்சி இன் ஒரு பகுதியான “டயலொக் அறக்கட்ளை”, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஏற்பட்ட அசம்பாவிதங்களில் 253 பேரின் உயிரை காவுகொண்ட மற்றும் பலருக்கு காயங்களை ஏற்படுத்திய குடும்பங்களுக்கு உதவி வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

டயலொக் நீங்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடையினையும் இருமடங்காக்கி ரூ.100 மில்லியன் வரையில் நன்கொடை வழங்குவதனை உறுதி செய்துள்ளதுடன், கடந்த வாரம் துயர சம்பங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 500க்கும் மேற்பட்ட பாடசாலை சிறுவர்களின் பாடசாலை கல்விக்கும் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மறு வாழ்வு வழங்குவதற்கும் இந்த நிதியினை வழங்கவுள்ளது.

டயலொக்ää சர்வோதய மற்றும் World Vision ஆகியவற்றுடன் இணைந்து இந்த நன்முயற்சிக்கு அடித்தளம் இட்டுள்ளதுடன் மற்றும் இந்த நிதியினை PricewaterhouseCoopers நிறுவனம் கணக்காய்வும் மேற்பார்வையும் செய்கின்றது.

நன்கொடையாளர்கள் SMS மூலம் நன்கொடை வழங்க விரும்பினால் DON என டைப் செய்து 7700 க்கு SMS செய்யுங்கள். (ரூ.100 வாக எத்தனை முறை வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம்.) https://www.dialog.lk/donate/ க்கு சென்றும் நன்கொடையினை வழங்க முடியும். #141*5*7# ஐ டயல் செய்வதன் மூலமும் உங்களுடைய Star Points ஐ நன்கொடையாக வழங்க முடியும். அல்லது Genie App, eZ Cash app ஊடாகவும் நன்கொடையினை வழங்கிட முடியும். மேலும் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் 0766421421 எனும் இலக்கத்திற்கு கொடுப்பனவு செய்வதன் மூலமும் அல்லது #7700# ஐ டயல் செய்வதன் மூலமும் எவ்வளவு தொகையினையும் நன்கொடையாக வழங்க முடியும். அனைத்து வகையான நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றது. சர்தேச ரீதியில் இருந்தும் டயலொக் அல்லாத வாடிக்கையாளர்களும் 0766421421 க்கு கொடுப்பனவு செய்வதன் மூலமம் eZ Cash அல்லது Genie ஊடாகவும் நன்கொடைகளை வழங்க முடியும்.

ஏப்ரல் மாதம் 21ம் திகதி நாட்டில் ஏற்பட்ட துயர சம்பவங்களில் டயலொக் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. டயலொக் அறக்கட்டளையானது World Vision லங்கா மற்றும் சர்வோதய ஆகியவற்றுடன் இணைந்து இந்த துயர சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் தங்களில் பாடசாலை கல்வியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் தேசத்தை மீள கட்டமைப்பதற்கும் ஒரே தேசமாக ஒன்றினைந்து செயற்படுவோம் என நம்புகிறோம் என World Vision லங்கா மற்றும் சர்வோதய ஆகியவற்றுடன் கைகொய்யமிட்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே தெரிவித்தார்.