பொருள் விரிவாக்கம்

Genie, Pizza Hut ஆகியவை வாடிக்கையாளர்கள் இசைவான பணமற்ற கட்டணங்களை செலுத்துவதற்காகபங்காளர்களாக இணைந்துள்ளார்கள்

2019 ஏப்ரல் 30         கொழும்பு

 

news-1

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் உப தலைவர் பாரிக் காதர் (வலது) மற்றும் Gamma Pizzakraft லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யசா நடராஜா (இடது)

Genie இலங்கையில் அதன் சமீபத்திய மூலோபாய பங்காளியாக Pizza Hut உடன் இணைந்துள்ளமையினை அறிவித்துள்ளதுடன், வசதியான மற்றும் தொந்தரவுகள் இல்லாத கட்டண முறைய உறுதிப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதிலுமுள்ள Pizza Hut நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இலகுவாக கட்ணங்களை செலுத்த முடியும். இந்த கூட்டு முயற்சிக்கு இணங்க Pizza Hut வாடிக்கையாளர்கள் QR Payment வசதியினையும், ஸ்கேன் செய்து கொடுப்பனவு செய்யும் அனுபவத்தையும் அனைத்து நிலையங்களிலும் தொலை கட்டணத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் தங்களுடைய order இனை மேற்கொள்ளக்கூடியதுடன் ஒப்பிடமுடியாத இலகுவான வசதியினையும் அனுபவித்திட முடியும்.

Genie இலங்கையில் முதலாவது PCI-DSS சான்றிதழினை பெற்ற மொபைல் ஆப்பிகேஷன் ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய Visa/Mastercard தற்போதைய சேமிப்பு கணக்கு அல்லது eZ Cash கணக்கினை App உடன் இணைத்துக்கொள்வதன் மூலம் தொலை கட்டணத்தினை மேற்கொள்ளவும் App கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் நிலையங்களில் கொடுப்பனவு செய்யவும் இணையத்தள பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் இலகுவாகவும் சௌகரியமாகவும் இருக்கும்.

Google Play Store, Apple App Store மற்றும் www.genie.lk ஊடாக Genie இனை பெற்றுக்கொள்ள முடியும்.