பொருள் விரிவாக்கம்

கொரோனா வைரஸ் (COVID-19) பற்றிய ஆலோசனையைப் பெற அனைத்து இலங்கையர்களுக்கும் டயலொக் மூன்று மொழிகளிலும் இலவச துரித இலக்கமான 1390 இனை அறிமுகப்படுத்துகிறது

2020 மார்ச் 17        கொழும்பு

 

news-1

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, வேவ்னெட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் MyDoctor (மை ஹெல்த் சொல்யூஷன்ஸ் பிரைவட் லிமிடெட்) உடன் இணைந்து, மருத்துவமனைக்கு வருகை தர வேண்டிய அவசியமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக மூன்று மொழிகளிலும் இலவச துரித இலக்கமான 1390 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருகின்ற வேளையில் இந்த 1390 சேவையானது வசதியானதாகவும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது

இந்த மூன்று மொழிகளிலும் வழங்கப்படும் ஆலோசனை சேவை அனைவருக்கும் இலவசம், Dialog வாடிக்கையாளர்களுக்கு 1390க்காக அழைப்பு கட்டணம் முற்றிலும் இலவசம். ஏனைய வலையமைப்புகள் இதே சேவையினை வழங்குமிடத்து அவ் வலையமைப்பின் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு கட்டணம் இலவசம். எந்தவொரு வலையமைப்பில் இருந்தும் 1390 க்கு அழைப்பதன் மூலம் துரித இலக்கத்தினை அணுக முடியும், மேலும் COVID-19 தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள Android / iOS App உம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த சேவையானது கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாக சுவாச செயற்பாடுகளை பாதிக்கும் நோயான கொரோனா வைரஸை பற்றிய சிகிச்சை முறையினையும் அதன் அதிக தொற்று தன்மை காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இந்த துரித இலக்கமானது இலங்கையர்களால் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் நோய் மேலும் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்ற அனைத்து தகவல்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

COVID-19 தொடர்பான விரிவான தகவல்களை மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பேராசிரியர் நீலிகா மலவிகே வழங்கினார். வாடிக்கையாளர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால், ‘doctor on call’ சேவையின் ஊடாக தகுதிவாய்ந்த மருத்துவர்களுடன் உரையாடும் தெரிவினையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

வேவ்னெட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் MyDoctor (மை ஹெல்த் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட COVID-19 தகவல் துரித இலக்கம், வாடிக்கையாளர்களுக்கு இந்த முதன்மை சேவையை இலவசமாக வழங்குகின்றது