பொருள் விரிவாக்கம்

டயலொக் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து Sri Lanka ‘Pensions App’ இனை அறிமுகப்படுத்தியது.

10 October 2019         Colombo

 

news-1

இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பிற்கொடுப்பனவு சிரே~;ட முகாமையாளர் ஜனித் பீரிஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்ஹ, ஓய்வூதிய திணைக்களத்தின் பொது இயக்குனர் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ், பொது நிர்வாக அமைச்சகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு.ஜெ.ஜெ.ரத்னசிரி மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் மேலதிக பொது இயக்குனர் திரு. கே.ஆர் பத்மபிரிய

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஓய்வூதிய திணைக்களத்துடன் இணைந்து தேசிய ஓய்வூதியத்துறையின் தினத்தன்று 2019 ஒக்டோபர் 8ஆம் திகதி நெலும் பொக்குனவில் Sri Lanka Pensions app இனை அறிமுகப்படுத்தியது. ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான இலங்கையின் முதல் மொபைல் App ஆகும். ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகளை அணுகுவதற்கு டிஜிட்டல் முறையில் அதிகாரத்தினை அளிக்கின்றது.

pensions app இன் ஊடாக ஓய்வூதிய தொகை பற்றிய அனைத்து விடயங்களையும் கடந்த 3 மாதங்களில் உங்களுடைய தொகையில் இருந்து எவற்றுக்கு கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்களையும் பார்வையிட முடியும். டயலொக் மற்றும் டயலொக் பங்காளர்கள் வழங்கும் கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடிவதுடன் எதிர்வரும் காலங்களில் உத்தியோகப்பூர்வ ஓய்வூதிய அறிக்கை, மின்னணு முறையில் அறிக்கைகளை அனுப்பவும் மற்றும் கடனுக்கான கோரிக்கையினை மேற்கொள்ளல் போன்றவற்றுடன் இன்னும் அதிகளவான சேவைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலதிகமாக, ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிராம சேவக உத்தியோகஸ்தரிடம் சென்று life certificate renewal இனை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியமின்றி இந்த App இன் ஊடாக மிகவும் சௌகரியமாகவும் எளிதாகவும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

Sri Lanka Pensions app ஆனது வெற்றிகரமான டயலொக் பிர~ன்சா மொபைல் பிற்கொடுப்பனவு திட்டத்தினை பின்;பற்றுவதுடன் டயலொக் பிர~ன்சா மொபைல் பிற்கொடுப்பனவு பக்கேஜானது ஓய்வூதிய திணைக்களத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றது. டயலொக்கின் Future Connect Forums மூலம் பிர~ன்சா பாவனையாளர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் மூலமும் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்துக் கொள்வதற்கான திறன்களை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வின் போது உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, ஓய்வூதிய திணைக்களத்தின் முற்போக்கான தலைமையின் கீழ் வெற்றிகரமான பொது தனியார் கூட்டாண்மை மூலம் ஓய்வூதியதாரர்களுக்கான இலங்கையின் முதல் App இனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இது அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கான பிரத்தியேக பிர~ன்சா மொபைல் பிற்கொடுப்பனவு பக்கேஜ் உடன் பொருந்துகின்றது. இலங்கை சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் கல்வியறிவினை பெற்றுக்கொள்வதனை உறுதி செய்வதற்கான சமீபத்திய முயற்சி என்பதை அடிகோடிட்டு காட்டுகின்றது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் அதிகரித்த வெளிப்படைத்தன்மை வசதி மற்றும் எளிமைப்படுத்தல்; ஆகியவற்றுக்கு பயனளிக்கின்றது என தனது கருத்தில் தெரிவித்தார்.

இந்த App இனை நீங்கள் Google Paly Store அல்லது Apple App Store இன் ஊடாக டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும். டயலொக் பிரசன்சா மொபைல் பிற்கொடுப்பனவு இணைப்பினை பெற்றுக்கொள்ள விரும்பும் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, பில்லிங் ஆதாரம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டையுடன் ஏதேனுமொரு டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிக்கவும்.