தொடர்ந்து 4வது வருடமாக Google I/O Extended நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தியDialog மற்றும் Ideamart
மே மாதம் 9ஆம் திகதி 2019
இடமிருந்து வலம்: மலிந்த அலஹகோன் (தொழில்நுட்ப வலைப்பதிவாளர்), தனிக்க பெரேரா (பாஷா,ஹெலகுரு மற்றும் PayHere நிறுவனர்), சணுக்ஸ் ப்ரோ (Chanux Bro - தொழில் நுட்ப வலைப்பதிவாளர்)
இடமிருந்து வலம்: மலிந்த அலஹகோன் (தொழில் நுட்ப வலைப்பதிவாளர்), சமீர ஜெயசிங்க (Arimac Digital நிறுவனர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி), சணுக்ஸ் ப்ரோ (Chanux Bro - தொழில் நுட்ப வலைப்பதிவாளர்)
இடமிருந்து வலம்: மலிந்த அலஹகோன் (தொழில்நுட்ப வலைப்பதிவாளர்), பாடகர்கள் பாத்திய மற்றும் சந்தோஷ்
இலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு வழங்குநரான Dialog Axiata PLC மற்றும் Ideamart, இலங்கையின் Google Developer குழுவினருடன் இணைந்து வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப நிகழ்வான Google I/O Extended நிகழ்வினை தொடர்ந்து 4வது முறையாகவும் வெற்றிகரமாக இவ்வாண்டு மே மாதம் 7ஆம் திகதி நடாத்தியது. இவ்வருட நிகழ்வின் சிறப்பான அம்சமாக Dialog இன் அடையாளமான thePapare குழுவினரால் நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் கைத்தொலைபேசி, வலைத்தளம், Facebook மற்றும் Dialog TV ஆகிய தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. Google I/O இன் முக்கிய நோக்கமாக உலகெங்கிலுமுள்ள developerகளை தொழில் நுட்ப கலந்துரையாடல்களுக்காக ஒன்றிணைத்தலும் Google வல்லுனர்களுடனான கற்றல் வாய்ப்புக்களை ஏற்படுத்துதலும் Google இன் நவீன நிர்மாணங்கள் மற்றும் developer உற்பத்திகள் தொடர்பான முன்னோட்டங்களும் அமைந்திருந்தன. Google இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தலைமையில் ஒரு முக்கிய அமர்வும் இடம்பெற்றது.
நேரடி ஒளிபரப்புக்களின் முக்கிய நோக்காக நாடெங்கிலுமுள்ள developer கள் மற்றும் தொழில் நுட்ப ஆர்வலர்கள் I/O அனுபவத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தலும்
50 000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுக்கொள்ளுதலுடன் இலங்கையின் இளம் தொழில் நுட்ப திறன்களுடன் அவர்களை இணைத்தலும் இருந்தது.
இலங்கையின் முதலாவது மெய்நிகர் வகையிலான நிகழ்வானது உள்நாட்டு வலைப்பதிவாளர்களான (bloggers) Chanux Bro மற்றும் மலிந்த அலஹகோன் ஆகியோரால் ஒழுங்கமைக்கப்பட்டது. இதில் பார்வையாளர்கள் பரிசுகள் வெல்வதற்கான வாய்ப்புக்கள், பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்ளல் ஆகியவற்றுடன் AI இயங்கும் டிஜிட்டல் இரட்டையர்கள் (AI powered digital twins), இயந்திர இயக்க மாதிரிகள் (robotic arm demonstrations) மற்றும் 360 பாகை மெய்நிகர் உண்மை செயல்படுத்தப்பட்ட காணொளியமைப்பு (360-degree virtual reality enabled video streaming) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழிநுட்பங்கள் மற்றும் cutting- edge நிர்மாணங்கள் போன்ற அம்சங்கள் கொண்ட 5G காட்சிப்படுத்தல்கள் அடங்கியிருந்தன. நிகழ்வில் பலரின் கவனத்தை ஈர்த்ததாக, புதிய தொழில் நுட்ப செய்திகளுக்காக மில்லியன் கணக்கானோர் ஆர்வம் செலுத்தி வரும் Google இன் வன்பொருள் மற்றும் மென்பொருள் மேம்படுத்தல்கள் அமைந்திருந்தன. இவ்வருடத்தின் முக்கிய அறிவிப்புக்களுள் Pixel 3A மற்றும் 3A XL இன் உத்தியோகபூர்வ வெளியீடு, Google Nest Umbrella, புதிய Android Q Beta, நேரடி விளக்கமுறை (Live Captioning), Project Mainline, Google வரைபடங்களுக்கான Incognito Mode, Google Lens இன் மேம்படுத்தல் மற்றும் கடந்த வருடத்தின் மிகப்பெரிய செய்திகளில் ஒன்றான Google Duplex on Web இன் தொடர்ச்சியும் அடங்கியிருந்தது.
Dialog Axiata PLC இன் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரியான டாக்டர். நுஷாட் பெரேரா கருத்து தெரிவிக்கையில், "உள்நாட்டு தொழில் நுட்ப திறனாளர்களை உலகளாவிய அனுபவங்களை நோக்கி அழைத்துச்சென்ற வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வினை மீண்டுமொரு முறை ஒழுங்கமைத்ததையிட்டு Dialog மற்றும் Ideamart நிறுவனங்கள் பெருமையடைகின்றன. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கிய சாவியாக, நவீன தொழில் நுட்பங்கள், கருத்துக்கள் மற்றும் வலையமைப்புக்களுடன் இணைதலுக்கான வாய்ப்புக்களை புதிய தொழில் முனைவோருக்கு வழங்குதல் முக்கியமானதாகும்.”
இவ்வருடத்தின் புகழ்பெற்ற நிபுணர்கள் குழாமானது பாஷா (Bhasha), ஹெலகுரு (Helakuru) மற்றும் PayHere ஆகியவற்றின் நிறுவனரான தனிக்க பெரேரா மற்றும் Arimac Digital இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர ஜெயசிங்க ஆகியோருடன் சிறப்புப்பெற்றது. தனிக்க பெரேரா அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றும் போது தொழிற்துறையில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், உள்நாட்டு தொழில் நுட்ப கம்பனிகள் நிலையான டிஜிட்டல் நிறுவனங்களாவதற்காக பயணிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றியும் கூறினார். அதேபோல், சமீர ஜெயசிங்க அவர்கள் இலங்கையின் தற்போதைய கவலைக்குரிய நிலையான, உள்நாட்டு திறனாளர்களை சமூகத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியாததால் அதிகரித்து வரும் 'மூளை வறட்சி(Brain Drain)' நிலையை பற்றி கலந்துரையாடினார். அத்துடன் இவர் சில உள்நாட்டு நிர்மாணங்களான IMI Games, Arimac Airspace,WynkAR மற்றும் NERO போன்றவற்றை முன்னிலைப்படுத்தி அவருடைய உற்பத்தி சேவை மாதிரிகளின் வெளிப்படையான உத்திகள் பற்றி விளக்கும்போது இளம் திறனாளர்களை தக்க வைப்பது தொடர்பான சில வெற்றிகரமான முன்னுதாரணங்களையும் பகிர்ந்து கொண்டார்.