பொருள் விரிவாக்கம்

டயலொக் மற்றும் National Institute of Business Management ஆகியவை Establish NationalInnovation Centre of NIBM உடன் பங்காளியாக இணைந்துள்ளது

2019 மார்ச்         கொழும்பு

 

news-1

 

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி National Institute of Business Management (NIBM) உடன் தேசிய கண்டுபிடிப்பு மையத்தில் தேசிய அளவிலான பெரிய தரவு பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தேசிய கண்டுபிடிப்பு மையமான NIBM, டயலொக்கின் ஒத்துழைப்புடன் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப கண்டுபிடிப்பை அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கையில் முக்கிய தொழில் துறைகளின் எதிர்காலத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கும் ஒரு காப்பீட்டு நிபுணராக செயற்படும் அதே நேரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தரவு அறிவியலின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதுடன் இளங்கலை மற்றும் பட்டதாரிகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றது. தரம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படத்துவதற்காக தொழில்துறைகள் முழுவதும் தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு துறையில் மதிப்பினை உருவாக்கும் செயன்முறைகளை வடிவமைப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் நிபுணத்துவத்தை வழங்குகின்றது.

National Institute of Business Management நிறுவனத்தின் பொது முகாமையாளர் கலாநிதி D.M.A குலசூரிய கருத்து தெரிவிக்கையில் National Institute of Business Management (NIBM) ஏற்கனவே தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு மையத்தின் நவீன வசதிகளுடன் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி தரவு அறிவியல் மற்றும் வியாபார பகுப்பாய்வு திறன் ஆகியவற்றில் தனது மாணவர்களை தயார்படுத்தவதற்கான தரவு அறிவியல் பட்டம் மற்றும் முதுநிலை திட்டங்களை அறிமுகப்படுத்த நவீன வசதிகளை கொண்டுள்ளது. NIBM இன் தரவு பயிற்சியாளர்களுக்கான தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுகளில் தொழில்துறை அனுபவத்தை கொண்டு வர டயலொக் ஆசிஆட்டாவுடன் இணைந்துக்கொண்டமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். எதிர்கால சவால்களை சந்திப்பதற்காக தரவு அறிவியல் திறமைகளுடன் NIBM பட்டதாரிகளை மேம்படுத்தவதற்கு எங்கள் கூட்டாண்மை மேலும் உறுதுணையாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க அதிகாரி கலாநிதி ரெய்னர் டெய்ஷ்மன் தனது உரையின் போது தரவு இயக்க முடிவு ஒவ்வொரு வெற்றிகரமான நிறவனத்தின் இதயத்திலும் காணப்படும் ஒன்றாகும். டயலொக் ஆசிஆட்டா எங்கள் வாடிக்கையாளர்கள் 5வது தலைமுறை மொபைல் வலையமைப்பு Internet of Things மற்றும் அதிவேக மாற்றங்கள் ஆகியவற்றில் உலகில் மிகப்பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வுகளிலிருந்த பயனடைவதற்கு உதவுகின்றது. மேலும் நம் நாட்டின் சிறந்த திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தேசிய கண்டுபிடிப்பு மையம் இந்த முயற்சியில் முக்கிய பங்கை கொள்ளவும் உதவுகின்றது என தெரிவித்தார்.

பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் தரவு விஞ்ஞானத்தில் அறிவு மற்றும் தொழில் மேம்பாட்டு இடைவெளிகளை உரையாடலுடன் NIBM இன் தேசிய புதுமை மையம் திறமையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு Hybrid தரவு பகுப்பாய்வு மற்றும் கலப்பின தரவு மேலாண்மைக்கு வழிவகுக்கின்றது. இந்த கண்டுபிடிப்பு மையம் தொழில்நுட்பங்களை இணைத்து பயன்படுத்துவதன் மூலம் சமூக ஊடகங்களை உள்ளடக்கிய பெரிய தரவுகளை பரந்தளவில் ஆய்வு செய்கின்றது. இணையம் மற்றும் IoT அகியவை இலங்கையை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கான நுட்பங்களையும் நுண்ணறிவுகளை பெறவும் உதவுகின்றது.