லீசிங் கொடுப்பனவுகளை இலகுவாக மேற்கொள்வதற்காக eZ Cash, Fintrex Finance Limitedஉடன் பங்காளராக இணைந்துள்ளது
2019 மார்ச் 12 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் உப தலைவர் பாரிக் காதர் Frintex Finance நிறுவனத்தின் வியாபார அபிவிருத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாளர் பெவன் பெரோரா அவர்களிடம் ஒப்பந்தத்தை கையளிக்கின்றாhர். மேலும் படத்தில் இடப்பக்கத்திலிருந்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம் சிரேஷ்ட முகாமையாளர் பத்மநாத் முத்துகுமாரன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் வியாபார கையகப்படுத்தல் மற்றும் விற்பனைகள் மொபைல் பணம் பிரதான முகாமையாளர் உதய ஜயசுந்தர டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் பைனான்ஸ் சேவைகள் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஜனக ஜயலத், Frintex Finance நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தினேக விதனச்சி, Frintex Finance நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் இந்திக போகல, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் நிறுவன விற்பனைகள் கணக்கு முகாமையாளர் மொபைல் பணம் தீக்~ன கம்பன்பில
இலங்கையின் முதலாவது மற்றும் மிகப்பெரிய மொபைல் பணம் மற்றும் கொடுப்பனவு சேவையான eZ Cash, தங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் சௌகரியமாக லீசிங் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக Fintrex Finance Limited உடன் சமீபத்தில் பங்காளராக இணைந்துள்ளமையினை அறிவித்துள்ளது.
அனைத்து Fintrex Finance வாடிக்கையாளர்களும் இப்போது eZ Cash மொபைல் App இனை பயன்படுத்தி #111# டயல் செய்து அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள 20,000 eZ Cash விற்பனையாளர்களின் ஊடாகவும் நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களுடன் எளிதாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.