பொருள் விரிவாக்கம்

#FreeTheFee ஊடாக வைத்தியர்களை செனல் செய்யும் போது Doc990 கட்டணங்கள் கழிவாகவழங்கப்படும்

2019 ஜனவரி 30         கொழும்பு

 

news-1

 

டிஜிட்டல் ஹோல்டிங் லங்கா (பிரைவட்) லிமிட்டடின் டிஜிட்டல் ஹெல்த் (பிரைவட்) லிமிட்டட் மூலம் இயக்கப்படும் Doc990 இன் முழுமையான துணை நிறுவனமான இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி Doc990 mobile app அல்லது www.doc.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக வைத்தியர்களை செனல் செய்யும் போது சேவை கட்டணங்களை முழுமையாக கழிவாக வழங்கவுள்ளமையினை அறிவித்துள்ளது.

Doc990 என்பது இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் Tab உள்ளிட்ட சாதனங்களிலிருந்தும் எளிதில் அணுகக்கூடிய ஒருங்கிணைந்த மொபைல் மற்றும் ஆன்லைன் அடிப்படையிலான தீர்வாகும். தற்போது Doc990 இணையத்தளத்தின் ஊடாக மருத்துவ ஆலோசனைகளுக்கான தொலைதூர ஆலோசகர்களுக்கான தொலைக்காட்சி சேவையிலும் தொலைபேசி மூலம் தொடர்புக்கொள்வதற்கும் மருந்துகள் வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் நுண்ணறிவு அறிக்கைகளை அணுகுவதற்கும் முக்கிய ஆய்வுகூடங்களின் அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் Apple App Store அல்லது Google Play Store க்கு சென்று Doc990 mobile app இனை டவுன்லோட் செய்துக்கொள்வதன் மூலமும் அல்லது www.doc.lk எனும் இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமும் இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தில் பதிவு செய்வதன் மூலமாக எந்தவொரு வைத்தியரையும் முன்பதிவு செய்யும் சேவை கட்டணங்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்

Doc990 டிஜிட்டல் முறையானது பாவனையாளர்களின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துகின்றது. அதே சமயம் தங்கள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக சுகாதார சேவைகளை பரந்தளவில் விரிவுபடுத்துகின்றது. இந்த புரட்சிகரமான முன் முயற்சியை மேலும் வாடிக்கையாளர்கள் எவ்விதமான தொந்தரவுகளும் இன்றி வைத்தியர்களையும் மருத்துவ சேவைகளையும் பெற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது. Doc990 சேவையானது 90க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இலங்கையில் முழுவதிலும் கொண்டுள்ள முதற்தர மருத்துவ முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான App ஆகும். Doc990 ஆனது அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுடனும் வங்கிகளுடனும் பல்வேறுபட்ட கொடுப்பனவு முறைகளை அதாவது முன்பதிவு கட்டணத்தை பில் உடன் இணைத்து செலுத்தவும் முடியும். மற்றும் eZ Cash, Genie, Amex, Visa மற்றும் Master அட்டைகளின் ஊடாகவும் சௌகரியமாகவும் இலகுவாகவும் செலுத்த முடியும்.