காப்புறுதி கொடுப்பனவுகளை எளிதாக்கும் நோக்குடன் Genie மற்றும் eZ Cash, SLIC உடன்இணைகின்றன
2019 ஜூன் 28 கொழும்பு
(இடமிருந்து வலம்) SLIC- பிரதான தகவல் அதிகாரி - ஆலோக ஜயவர்தன, SLIC - பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தன L. அலுத்கம, SLIC -நிர்வாக இயக்குனர் துஷ்யந்த B. பஸ்நாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான டிஜிட்டல் சேவைகள் அதிகாரி கலாநிதி. நுஷாட் பெரேரா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் வணிகர் கையகப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு தலைமை மேலாளர் -உதய ஜயசுந்தர, FinTech, சிரேஷ்ட முகாமையாளர் ஜிமாலி செய்சா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் Mobile Money சிரேஷ்ட முகாமையாளர் - பத்மநாத் முத்துக்குமரன்,
இலங்கையின் முதலாவது PCI-DSS சான்றிதழ் பெற்ற மொபைல் கொடுப்பனவு செயலியான Genie மற்றும் இலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இனுடைய நாட்டின் முதலாவது மற்றும் பாரிய மொபைல் பணம் மற்றும் கட்டண சேவை வழங்குனரான eZ Cash ஆகியன காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு உடனடி, பாதுகாப்பான மற்றும் இலகுவான கட்டண சேவைகளை வழங்கும் நோக்கில் மாபெரும் காப்புறுதி நிறுவனமான Sri Lanka Insurance உடன் ஒன்றிணைவதாக அறிவித்துள்ளன.
இதற்கமைய SLIC காப்புறுதி உடைமையாளர்கள் இலகுவாக தமது காப்புதுதி கட்டணங்களை மேற்கொள்ளவும், பாதுகாப்பு ரீதியிலான சந்தேகங்கள் இன்றி இருக்கவும், இந்த கூட்டானது காப்புறுதி உடைமையாளர்கள் தமது கட்டணங்களை விரைவாகவும் டிஜிட்டல் முறையிலும் அவர்களுக்கு ஏற்றாற் போல் Genie அல்லது eZ Cash மொபைல் App ஊடாக (Google Play Store மற்றும் Apple App Store இல் பெற்றுக்கொள்ளலாம்) அல்லது மைக்ரோ தளத்தில் (www.genie.lk) அல்லது eZ Cash USSD முறையான #111# டயல் செய்வதன் மூலம் செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்படுகின்றது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பிரதான டிஜிட்டல் சேவைகள் அதிகாரியான கலாநிதி. நுஷாட் பெரேரா கருத்து வெளியிடுகையில், "இலங்கை மக்கள் மற்றும் நிறுவனங்களை புதுமைகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுப்படுத்த மற்றும் செழுமைப்படுத்த முன்னிற்கும் நிறுவனமாக வாடிக்கையாளர்கள் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் இலகுவாகவும் டிஜிட்டல் முறையிலும் பாதுகாப்பாக கட்டணங்களை மேற்கொள்ள SLIC உடன் கூட்டிணைந்து இதனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கின்றோம்" எனக்கூறினார்.
SLIC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.சந்தன L. அலுத்கம அவர்கள், "SLIC இன் முக்கிய மூலோபாய நடவடிக்கையாக, செயல்திறன், உற்பத்தி மற்றும் சந்தை முக்கியத்துவத்தை அதிகரிக்க புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை தொழில்நுட்பத்தை தழுவி அறிமுகப்படுத்தும் முடிவு இருக்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு அருகில் எமது வர்த்தகத்தை எடுத்துச்செல்லும் இந்த நடவடிக்கைகள் எமது முகவர்கள் போன்ற சில வர்த்தக கூட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுக்கு பெறுமதி சேர்ப்பதுடன் புதிய வளர்ச்சி வாய்ப்புக்கள் உள்ளிட்ட பரந்த வர்த்தக வாய்ப்புக்களில் SLIC முன்னிற்பதற்கு எதுவாக அமைகின்றது. இன்று “Genie App” அறிமுகத்தின் மூலமாக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி உடன் ஒன்றிணைந்து ஒரு முன்னேற்றம் கண்டுள்ளோம். இது பல்வேறு தளங்களினூடாக எமது வாடிக்கையாளர்கள் இலகுவாக அணுகுவதற்கான பரந்த வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்திற்கு பக்கபலமாக உள்ளது. அத்துடன் SLIC வாடிக்கையாளர்கள் இலவசமான காப்புறுதி கொடுப்பனவுகளை தடையின்றி பாதுகாப்பாக செலுத்தும் வாய்ப்பின் மூலமாக பயன் பெறுகின்றனர்" என்று கூறினார்.