டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்கும், உழவர் தோழன் ஆலோசனை சேவை இலங்கையர்களுக்கு தங்கள் வீட்டு தோட்டங்களில் தங்களுக்கு அவசியமான பயிர்களை அறுவடை செய்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது.
27 ஆகஸ்ட் 2020 கொழும்பு
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி உழவர் தோழன் என்ற நீண்டகால, புரட்சிகர விவசாய சேவையை முன்னிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் அதன் தகவமைப்பு மற்றும் வளத்தை நிரூபித்துள்ளது. ஒரு எளிய, விவசாயிகளை மையமாகக் கொண்ட விவசாய ஆலோசனை சேவையான கோவி மிதுரு, தங்கள் வீட்டுத் தோட்டங்களில் தமக்கு தேவையான பயிர்களை தாங்கள் சொந்தமாக உற்பத்தி செய்வதன் மூலம் அதிக தன்னிறைவுடைய விவசாய நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு பொதுமக்களிடம் அரசாங்கத்தின் வேண்டுகோளை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. டயலொக் ஒரு நாளைக்கு 1 ரூபாய் (மற்றும் வரி) என்ற மிக குறைந்த கட்டணத்திற்கு இந்த சேவையினை வழங்கி வந்தது. மேலும் தற்போது நிழவும் சூழ்நிலையில் மே மாதம் 01ஆம் திகதி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கு 100% இலவசமாக வழங்கியது.
இலங்கையின் முன்னணி மொபைல் விவசாய தகவல் சேவையான, உழவர் தோழன் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் பாதுகாத்து அறுவடையினை அதிகரிக்க உதவுகிறது. 2015 ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறையின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. உழவர் தோழனின் குரல் சேவை என்பது விவசாயிகளுக்கான மொபைல் ஆலோசனை சேவையாகும். இது ‘பாதுகாப்பான பயிர் மற்றும் குடும்ப ஆரோக்கியம் என்ற கருப்பொருளின் கீழ், இந்தத் துறையில் தொழில்முறை வழிகாட்டுதலுக்கான அணுகலை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த சேவையானது அடிப்படை தொலைபேசியைப் பயன்படுத்தும் யாவரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை 25 பயிர் குழுக்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. வீட்டுத்தோட்டமும் இதில் ஒன்றாகும். மேலதிகமாக. உழவர் தோழன் மொபைல் App சேவையாகும். இது பாவனையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில், தரமான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் தகவல் மற்றும் பயிர் பாதுகாப்பு மற்றும் நிபுணர்களின் வீட்டு தோட்த்திற்கான குறிப்புகள் போன்ற தலைப்புகளில் ஆலோசனைகளை வழங்குகின்றது. குரல் சேவையை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களிடமிருந்து தினசரி 1 ரூபாய் மற்றும் வரிகளும் மற்றும் மொபைல் App இன் ஊடாக சேவையினை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களிடமிருந்து தினசரி 2 ரூபாய் மற்றும் வரிகளும் கட்டணமாக அறவிடப்படுகின்றது. தற்போது, உழவர் தோழன் App மற்றும் குரல் சேவை 600,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. குரல் சேவையைப் பெற்றுக்கொள்ள, எந்தவொரு டயலொக் மொபைலிலிருந்தும் 616 க்கு அழையுங்கள். App இன் ஊடாக சேவையினை பெற்றுக்கொள்ள Google Play Store ஊடாக நேரடியாக டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும்.
டயலொக் இனால் அனுசரணை வழங்கப்படும் இந்த முயற்சி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது பேரிடுவதற்கும், மக்களுக்கு வசதியைக் கொண்டுவருவதற்குமான தேசிய முயற்சிகளை ஆதரிக்கும் பல முயற்சிகளில் ஒன்றாகும். மேலும் இலங்கையில் உள்ள 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள், பாதுகாப்பாக வீட்டில் இருந்த படியே எப்போதும் இணைந்திருப்பதனை உறுதிசெய்யும் முயற்சிகளில் ஒன்றாக அணுகக்கூடிய பலவிதமான e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions இனை (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) வழங்குகின்றது.