பொருள் விரிவாக்கம்

செனெஹே சியபத 2017 செயற்றிட்டமானது எஹலியகொட இரத்தினபுரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

2017 செப்டெம்பர் 09         Colombo

 

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் வழி நடத்தலில்; எஹலியகொட இரத்தினபுரி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செனெஹே சியபத கிரமாத்தின் ஆரம்ப நிகழ்வுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் - கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களில் முன்னிலையில் இடம்பெற்றது.

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகளின் அமைச்சர் - கௌரவ ஜோன் செனவிரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் - கௌரவ துனேஷ் கங்கந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் கௌரவ கருணாரத்ன பரணவிதான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி அமலி நாணயக்கார இரத்தினபுரி மாவட்ட செயலாளர் - மாலனி லோக்குபோதாகம எஹலியகொட பிரதேச செயலாளர் R.H.S. திசாநாயக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் இலங்கை கடற்படையின் பிரதிநிதிகள் இலங்கை விமானப்படையின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் விசேட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை மேலும் சிறப்படைய செய்தார்கள். 

புதிதாக 37 வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய செயற்றிட்டமானது 57.5 மில்லியன் செலவு செய்யப்பட்டு சமீபத்தில் செனெஹே சியபத 2017இனால் ஆரம்பிக்கப்பட்டது. கட்டிட நிர்மாண சேவையானது இலவசமாக பாதுகாப்பு அமைச்சினால் இலங்கை முப்படையினரின் பங்களிப்புடன் வழங்கப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கைகோர்த்துக்கொள்ளும் படி அன்புடன் அழைத்திருந்தது. அதன் பிரதிபலனாக 16.53 மில்லியன் ரூபாய் சேகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒப்புக் கொண்டமைக்கு அமைய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் 33.47 மில்லியன் ரூபாவை இணைத்து இந்த செயற்றிட்டத்திற்கு நன்கொடை வழங்கியது. RIL ப்ரபொட்டி பிஎல்சி  தங்களின் பங்களிப்பாக 7.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. மொத்தமாக செனெஹே சியபத 2017 நிதியத்திற்கு 57.5 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்கல் செயற்றிட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் கொடபொல பிரதேசத்தில் 12 வீடுகள் கட்டி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO)நிபந்தனைகளுக்கு அமைய இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன் அதற்காக அவசியமான பங்களிப்பினை வழங்கியது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இச் செயற்றிட்டமானது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.

செனெஹே சியபத செயற்றிட்டமானது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகங்களுக்கும் உதவும் முகமாக இலங்கையின் முன்னனி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் முதன்முறையாக 2016 மே மாதம் 20ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் இந்த வருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ரூபாய் நன்கொடையினை SMS, Star Points,  eZ Cash மூலம் வழங்கும் படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது. அதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு 50 ரூபாய்க்கும் மேலும் 100 ரூபாவை இணைத்து 150 ரூபாவாக மும்மடங்காக்கப்பட்டு இந்த செயற்றிட்டத்திற்கு நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதி தொகையின் மூலம் பகிர்ந்தளிப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை  பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் கணக்காய்வு நிறுவனத்தினால் சுயாதீனமாக கணக்காய்வு செய்யப்பட்டது. இதனை sm.dialog.lk/floodrelief க்கு விஜயம் செய்வதன் மூலம் பார்வையிட முடியும்