ஆனந்த - நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான Battle of the Maroons 2021' கிரிக்கெட் சமர் டயலொக் அனுசரணையில் ஏப்ரல் 3ஆம் திகதி ஆரம்பம்
2022 மார்ச் 31, 2022 (கொழும்பு)
படத்தில் இடமிருந்து வலமாக : ஆனந்த கல்லூரி “ Battle of the Maroons “ Joint Committee தலைவர் பிமல் விஜயசிங்ஹ, ஆனந்த கல்லூரி அதிபர் லால் திஸாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு குழும பிரதான அதிகாரி, உபாலி கஜநாயக்க – நாலந்த கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா, நாலந்த கல்லூரி “ Battle of the Maroons “Joint Committee தலைவர் வருண ரத்னவீர
ஆனந்த - நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான ‘Battle of the Maroons 2021' மாபெரும் கிரிக்கெட் சமர் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் அனுசரணையில் ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கலாநிதி. பி.டீ.எஸ் குலரத்ண ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மேற்படி வருடாந்த கிரிக்கெட் போட்டியானது டயலொக் தொலைக்காட்சி அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்திற்கான ‘Battle of the Maroons 2021' போட்டியில் ஆனந்த கல்லூரி அணியானது சகலதுறை வீரர் சவிரு பண்டார தலைமையிலும், நாலந்த கல்லூரி அணியானது ரவீன் டி சில்வாவின் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.
கொவிட் -19 தொற்றின் காரணமாக அரசாங்கம் வெளியிட்ட சமீபத்திய சுகாதார விதிமுறை சுற்றறிக்கையின்படி கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதித்ததற்கமைய ஆனந்த - நாலந்த ஆகிய இரண்டு கல்லூரிகளினது அதிபர்களும் 'போட்டி ஏற்பட்டுக் கூட்டுக் குழுவின்' (JMOC) ஆலோசனைகளின்படி இரு கல்லூரிகளிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியை இம்முறை நடத்துவதற்கு தீர்மானித்தனர். அதற்கமைய, போட்டி ஏற்பாட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டிய குறிப்பிட்ட சுகாதார வழிகாட்டுதல்களுடன் போட்டியை நடத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ள போதிலும் இப்போட்டிகள் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையிலேயே நடைபெறும்.
மேலும், மாணவ பருவத்தினர் என்ற ரீதியில் அவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளிக்கும் விதமாக இரு அணிகளினது போட்டியாளர்கள் உட்பட போட்டி அதிகாரிகளும் அனைத்து கொவிட் -19 நெறிமுறை மற்றும் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு கல்லூரிகளுக்குமிடையே இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின்படி ஆனந்த கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கின்ற அதேவேளை, நாலந்த கல்லூரி 6 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கையின் இரண்டு முதன்மைநிலை பௌத்த பாடசாலைகளான ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி ஆகியன சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய துடுப்பாட்ட வீரர்களில் அதிகூடிய எண்ணிக்கையானோரை (55 க்கும் மேற்பட்டோர்) இதுவரை உருவாக்கியுள்ளது ; அவர்களுள் பந்துல வர்ணபுர, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம, மார்வன் அதபத்து, மஹேல ஜயவர்தன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகிய ஆறுபேர் நாட்டை வழிநடத்திய பெருமையைப் பெற்ற குறிப்பிடத்தக்கவர்களாவர். மேலும், இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான மறைந்த பந்துல வர்ணபுர நாலந்த கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதும், 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றியீட்டிய இலங்கை அணியை வழிநடத்திய அர்ஜுன ரணதுங்க ஆனந்த கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரைப்பந்து, Esports அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி போட்டிகள், பிரீமியர் கால்பந்து மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.