பொருள் விரிவாக்கம்

Dialog, Axiata குழுமம் மற்றும் Bharti Airtel, இலங்கையில் தமது தொழிற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்த விதிமுறை பத்திரத்தில் கையெழுத்திடுகின்றன

May 02nd, 2023         Colombo

 

Dialog Launches Text-only Facebook & Discover

Dialog Axiata பி.எல்.சி (“Dialog”), Axiata குழுமம் பெர்ஹாட் (“Axiata”) மற்றும் Bharti Airtel வரையறுக்கப்பட்டது (“Airtel”) (ஒட்டுமொத்தமாக “உரிய தரப்பினர்”) ஆகிய நிறுவனங்கள் தமது தொழிற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்த விதிமுறை பத்திரத்தில் கையெழுத்திடுகின்றன.

பரிவர்த்தனை முடிவடைந்த பிற்பாடு Airtel Lankaவின் மதிப்பிற்கு ஈடான Dialog இன் புதியபங்குகளை Airtel பெற்றுக்கொள்ளும்.

உரிய தரப்பினருக்கும் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையானது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஏதேனும் கணிசமான முன்னேற்றங்கள் இருந்தால் உரிய தரப்பினர் அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடுவர்.

Dialog Axiata குழுமம் பற்றி

Dialog Axiata குழுமம், Axiata குழுமம் பெர்ஹாட் (Axiata) இன் துணை நிறுவனமாகும். இது இலங்கையின் முன்னணி Quad-Play (கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, டெலிவிஷன் மற்றும் இணையம்) இணைப்பு வழங்குனர் நிறுவனமாகும். நிலையான தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் கட்டண தொலைக்காட்சி, டிஜிட்டல் சேவைகள், நிதி சேவைகள், மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை Dialog Broadband Networks (DBN) வரையறுக்கப்பட்ட (தனியார்), Dialog Television (DTV) வரையறுக்கப்பட்ட (தனியார்), Digital Holdings Lanka வரையறுக்கப்பட்ட (தனியார்), Dialog Finance பி.எல்.சி, மற்றும் H One வரையறுக்கப்பட்ட (தனியார்) ஆகிய தன்னுடைய துணை நிறுவனங்கள் மூலமாக வழங்குகிறது. இலங்கையின் மொபைல் தொலைத்தொடர்பு துறை சந்தையில் முன்னணியில் திகழும் Dialog Axiata பி.எல்.சி ஆனது கொழுப்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். மொத்தமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் முதலீடு மூலமாக Dialog Axiata குழுமமே இலங்கையின் பாரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர் (FDI) ஆகும்.

மேலதிக ஊடக தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
ஹர்ஷ சமரநாயக்க
துணைத்தலைவர் - வர்த்தக நாமம் மற்றும் ஊடகம், குழும சந்தைப்படுத்தல், Dialog Axiata பி.எல்.சி
மின்னஞ்சல்: harsha.samaranayake@dialog.lk

Airtel ஸ்ரீ லங்கா பற்றி

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் ஸ்ரீலங்கா நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். Airtel Sri Lanka வழங்கும் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை சிறப்புகள் இலங்கை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. தற்போது Airtel இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அதிநவீன 5G-தயாரான 4G வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அதிகபட்ச மதிப்பை வழங்குவதற்காக அதன் நெட்வொர்க் கவரேஜை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.  Airtel பற்றி மேலும் அறிய, MyAirtel ஆப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் Airtel உடன் இணைக்கவும் அல்லது www.airtel.lk ஐப் பார்வையிடவும்.

மேலதிக ஊடக தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
கினுஷ்க் குப்தா
சிரேஷ்ட துணை தலைவர் – கூட்டுத்தாபன தொடர்பாடல்கள்
மின்னஞ்சல்: Kinshuk.gupta@airtel.com