Dialog மேம்படுத்தும் மேலதிக Data மற்றும் Data Roll Over உடனான பிற்கொடுப்பனவு Home Broadband அனுபவம்
2023 நவம்பர் 20 கொழும்பு
இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான Dialog Axiata PLC, பயனர்களின் பலதரப்பட்ட வீட்டு டேட்டா தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதன் Home Wi-Fi பிற்கொடுப்பனவு பிளான்களின் பாவனை அளவை புதுப்பித்துள்ளது. அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட பிற்கொடுப்பனவு பிளான்கள் வாடிக்கையாளர்களுக்கு இலங்கையில் வீட்டு Wi-Fi சேவைகளில் முதல் முறையாக Data Roll Over அம்சத்தை வழங்குகின்றன, இது வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்படாத மீதமுள்ள டேட்டா ஒதுக்கீட்டை அடுத்த மாதத்திற்கு மாற்றி பயன்படுத்த உதவுகிறது.
Dialog Home Broadband இன் Home Wi-Fi பிற்கொடுப்பனவு பிளான்கள், தனித்தனி இரவு நேர மற்றும் பகல் நேர டேட்டா ஒதுக்கீடு என இல்லாமல் பயனர்களுக்கு எந்த நேரத்திலும் கூடுதல் டேட்டாவை (anytime data) வழங்குவதற்காக புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிதாக புதுப்பிக்கப்பட்ட பிளான்களில் வெவ்வேறு Home Wi-Fi தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு தெரிவுகள் உள்ளன, அதற்கமைய 50GB க்கு ரூ.1,312/- (வரி உட்பட) தொடக்கம் தெரிவுகள் உள்ளன. அதுமட்டுமன்றி, Dialog Home Broadband unlimited Data பிளான் விருப்பங்களை Home Broadband பயனர்களுக்கும் வழங்குகிறது, இதில் வாடிக்கையாளர்கள் Facebook, Instagram, YouTube, TikTok, Zoom, Google மற்றும் Microsoft 365 க்கான Unlimited Data வை தேர்வு செய்யலாம்.
புதுப்பிக்கப்பட்ட பிளான்கள் ஏற்கனவே பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் எந்தவொரு புதிய Dialog Home Broadband வாடிக்கையாளர்களுக்கும் செல்லுபடியாகும், மேலும் தற்போதைய அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய டேட்டா பிளான்கள் மற்றும் Data Roll Over அம்சத்துடன் மேம்படுத்தப்படுவார்கள்.
Dialog இன் ஒப்பிடமுடியாத நாடு முழுவதுமான கவரேஜைப் பயன்படுத்தி, இந்த Data பிளான்கள் இன்றைய வாடிக்கையாளரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. மேற்படி மேம்படுத்தப்பட்ட சலுகையானது, இன்றைய வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப அதிக டேட்டா மற்றும் பலன்கள் உட்பட, Dialog இன் Home Broadband பணத்திற்கான சந்தை மதிப்பாக வீட்டு (Home) Wi-Fi தீர்வுகளை வழங்குகிறது. 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு டிஜிட்டல் துணையாக, இந்த புதிய பிற்கொடுப்பனவு Home Broadband பிளான்கள் பெறுமதிக்கு உகந்த தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக மேம்படுத்தப்பட்ட Dialog இன் Home Broadband பிற்கொடுப்பனவு பிளான்கள் பற்றிய மேலதிக விபரங்களை https://www.dialog.lk/ வழியாக பார்வையிடலாம்.