டயலொக் பிரஷன்சா, வாடிக்கையாளர் சேவை மற்றும் முதியோர் வாரத்தை கொண்டாடுகிறது
நவம்பர் 20, 2023 கொழும்பு
இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, வாடிக்கையாளர் சேவை மற்றும் முதியோர் வாரத்தை கொண்டாடியது இதனை முன்னிட்டு தனது தலைமை அலுவலகத்தில் டயலொக் பிரஷன்சா உடன் தலைமுறைகளுக்கிடையேயான டிஜிட்டல் பிளவைக் குறைக்கும் நோக்கத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து மூத்த குடிமக்களுக்கு அறிவூட்டி வலுவூட்டும் ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தது.
இந்த நிகழ்வு முதியோருக்கிடையில் டிஜிட்டல் அறிவை அதிகரித்து அவர்களின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துமளவுக்கு அவர்களுக்கு வலுவூட்டுகிறது. இந்த நிகழ்வு டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான அறிமுகம், இணையம் மற்றும் ஊடகம் தொடர்பான கட்டுக்கதைகளும் நம்பிக்கைகளும், டிஜிட்டல் அத்தியவாசியங்கள் மற்றும் ஈடுபாடு அதேவேளை டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.
நாட்டின் ஓய்வுபெற்ற அரச சேவை பணியாளர்களுக்காக ஓய்வூதிய திணைக்களத்துடன் இணைந்து டயலொக் வழங்கும் பிற்கொடுப்பனவு சேவையான டயலொக் பிரஷன்சா நடாத்திய ஒரு தொடரான நிகழ்வுகளில் அண்மைய நிகழ்வே இதுவாகும். டயலொக் பிரஷன்சா மொபைல் பிற்கொடுப்பனவு Plan ஆனது எந்த வலையமைப்பிற்கும் 1000 நிமிடங்கள் மற்றும் SMS உடன் 2GB Data ஐயும் வெறுமனே ரூ.300+வரிக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்த plan வாடிக்கையாளர்களுக்கு 24 மாத இலகு கொடுப்பனவு முறையில் ஒரு 4G smartphone ஐ கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. தவணை கட்டணம் அவர்களது மாதாந்த கட்டணத்துடன் அறவிடப்படும்
டயலொக் பிரஷன்சா குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள https://dlg.lk/47nW8 ஐ பார்வையிடவும்.